அத்தியாயம்: 4, பாடம்: 44, ஹதீஸ் எண்: 761

حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ سَوَّادٍ الْعَامِرِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏أَنَّ ‏ ‏بُكَيْرًا ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏كُرَيْبًا ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ‏

‏أَنَّهُ رَأَى ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ الْحَارِثِ ‏ ‏يُصَلِّي وَرَأْسُهُ ‏ ‏مَعْقُوصٌ ‏ ‏مِنْ وَرَائِهِ فَقَامَ فَجَعَلَ يَحُلُّهُ فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ إِلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏فَقَالَ مَا لَكَ وَرَأْسِي فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏إِنَّمَا مَثَلُ هَذَا مَثَلُ الَّذِي ‏ ‏يُصَلِّي وَهُوَ مَكْتُوفٌ ‏

அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் தமது தலைமுடியைப் பின்பக்கமாகக் கொண்டையிட்டுத் தொழுதுகொண்டிருப்பதை அப்பதுல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் பார்த்தார்கள். உடனே அவர்கள் எழுந்து சென்று அவருடைய கொண்டையை அவிழ்த்து விட்டார்கள். அவர் தொழுது முடித்ததும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை நோக்கித் திரும்பி, “உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் எனது தலைக் கொண்டையை அவிழ்த்துவிட்டீர்கள்?” என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவ்வாறு தொழுவது, கைகளைப் பின்பக்கம் கட்டிக் கொண்டு தொழுவதைப் போன்றதாகும்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமை குரைப் (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 44, ஹதீஸ் எண்: 760

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَكْرٌ وَهُوَ ابْنُ مُضَرَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْهَادِ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَامِرِ بْنِ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ ‏

‏أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏إِذَا سَجَدَ الْعَبْدُ سَجَدَ مَعَهُ سَبْعَةُ أَطْرَافٍ وَجْهُهُ وَكَفَّاهُ وَرُكْبَتَاهُ وَقَدَمَاهُ ‏

“ஓர் அடியார் ஸஜ்தாச் செய்தால் அவருடைய முகம், இரு உள்ளங்கைகள், இரு முழங்கால்கள் மற்றும் இரு பாதங்(களின் நுனி)கள் ஆகிய ஏழு உறுப்புகள் அவருடன் ஸஜ்தாச் செய்கின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதைக் கேட்டிருக்கிறேன்.

அறிவிப்பாளர்: அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 44, ஹதீஸ் எண்: 759

حَدَّثَنَا ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعٍ وَلَا ‏ ‏أَكْفِتَ ‏ ‏الشَّعْرَ وَلَا الثِّيَابَ الْجَبْهَةِ وَالْأَنْفِ وَالْيَدَيْنِ وَالرُّكْبَتَيْنِ وَالْقَدَمَيْنِ ‏

“நெற்றி-மூக்கு, இரு (உள்ளங்)கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்(களின் நுனி)கள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். முடியையோ, ஆடையையோ (தரையில் படாதவாறு) பிடித்துக் கொள்ள வேண்டாம் எனவும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 44, ஹதீஸ் எண்: 758

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ الْجَبْهَةِ وَأَشَارَ بِيَدِهِ عَلَى أَنْفِهِ وَالْيَدَيْنِ وَالرِّجْلَيْنِ وَأَطْرَافِ الْقَدَمَيْنِ وَلَا ‏ ‏نَكْفِتَ ‏ ‏الثِّيَابَ وَلَا الشَّعْرَ ‏

“நெற்றி”, (தமது கையால் தமது மூக்கை நோக்கி – நெற்றி என்பது மூக்கு உட்பட என்பதைப் போன்று சைகை செய்தார்கள்) “இரு(உள்ளங்)கைகள், இரு(முழங்)கால்கள், இரு பாதங்களின் நுனிகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். ஆடையையோ முடியையோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் கட்டளையிடப்பட்டுள்ளோம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 44, ஹதீஸ் எண்: 757

حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏

‏أُمِرَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يَسْجُدَ عَلَى سَبْعٍ وَنُهِيَ أَنْ ‏ ‏يَكْفِتَ ‏ ‏الشَّعْرَ وَالثِّيَابَ ‏

ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி கட்டளையும், முடியையோ ஆடையையோ (தரையில் படாதவாறு) பிடித்துக் கொள்ள வேண்டாம் என்று தடையும் நபி (ஸல்) விதிக்கப்பட்டார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 44, ஹதீஸ் எண்: 756

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدٌ وَهُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ وَلَا ‏ ‏أَكُفَّ ‏ ‏ثَوْبًا وَلَا شَعْرًا ‏

“நான் ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படியும் (எனது) ஆடையையோ முடியையோ (தரையில் படாதவாறு) பிடித்துக் கொள்ளக் கூடாது எனவும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 44, ஹதீஸ் எண்: 755

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ ‏ ‏أَبُو الرَّبِيعِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏

‏أُمِرَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةٍ وَنُهِيَ أَنْ ‏ ‏يَكُفَّ ‏ ‏شَعْرَهُ وَثِيَابَهُ ‏

‏هَذَا حَدِيثُ ‏ ‏يَحْيَى ‏ ‏و قَالَ ‏ ‏أَبُو الرَّبِيعِ ‏ ‏عَلَى سَبْعَةِ أَعْظُمٍ وَنُهِيَ أَنْ ‏ ‏يَكُفَّ ‏ ‏شَعْرَهُ وَثِيَابَهُ الْكَفَّيْنِ وَالرُّكْبَتَيْنِ وَالْقَدَمَيْنِ وَالْجَبْهَةِ ‏

ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள். தமது தலைமுடி ஆடை ஆகியவற்றை(ஸஜ்தாவின்போது தரையில் படாதவாறு)ப் பிடித்துக் கொள்ள வேண்டாம் என்று தடை விதிக்கப்பட்டார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)

குறிப்பு:

அபுர்ரபீஉ(ரஹ்) அறிவிப்பில், “இரு உள்ளங்கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்(களின் நுனி)கள், மற்றும் நெற்றி ஆகிய ஏழு உறுப்புகள் தரையில் படுமாறு (ஸஜ்தாச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்) தமது தலைமுடி, ஆடை ஆகியவற்றைப் பிடித்துக்கொள்ள வேண்டாமென்றும் தடை விதிக்கப்பட்டார்கள்” என்று இடம் பெற்றுள்ளது.

தலைமுடியைக் கொண்டை போட்டு முடிந்து முன்நெற்றிப்பக்கம் எடுத்துவிட்டுக் கொள்வது அக்கால அரபியரிடம் இருந்தவொரு பழக்கமாகும்.