44.60 பயணத்திற்கு ஏற்ற ஓர் ஒட்டகம் ,,,

باب قَوْلِهِ صلى الله عليه وسلم ‏”‏ النَّاسُ كَإِبِلٍ مِائَةٍ لاَ تَجِدُ فِيهَا رَاحِلَةً ‏”‏ ‏‏
“நூறு ஒட்டகங்கள் இருந்தாலும் அவற்றுள் பயணத்திற்கு ஏற்ற ஓர் ஒட்டகத்தைக் காண்பதுகூட (பிற்காலத்தில்) உங்களுக்கு மிக அரிதாக இருக்கும். மனிதர்களு(ள் வாய்மையானவர்களு)ம் அருகிவிடுவர்” என்று நபி (ஸல்) கூறியது

அத்தியாயம்: 44, பாடம்: 60, ஹதீஸ் எண்: 4601

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، – وَاللَّفْظُ لِمُحَمَّدٍ – قَالَ عَبْدٌ أَخْبَرَنَا وَقَالَ، ابْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ تَجِدُونَ النَّاسَ كَإِبِلٍ مِائَةٍ لاَ يَجِدُ الرَّجُلُ فِيهَا رَاحِلَةً ‏”‏

“நூறு ஒட்டகங்களுள் பயணத்திற்குப் பயன்படும் ஒட்டகத்தை ஒருவர் (மிக அரிதாகவே தவிர) கண்டுகொள்ள முடியாமற் போகும். போலவே (பிற்காலத்தில்) மனிதர்க(ளுள் வாய்மையானவர்க)ளையும் (மிக அரிதாகவே தவிர) நீங்கள் கண்டுகொள்ள மாட்டீர்கள்“ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)