45.44 தடை செய்யப்படாத எதையும் பிறருக்குப் பரிந்துரைப்பது விரும்பத் தக்கதாகும்

باب اسْتِحْبَابِ الشَّفَاعَةِ فِيمَا لَيْسَ بِحَرَامٍ ‏ ‏
தடை செய்யப்படாத எதையும் பிறருக்குப் பரிந்துரைப்பது விரும்பத் தக்கதாகும்

அத்தியாயம்: 45, பாடம்: 44, ஹதீஸ் எண்: 4741

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، وَحَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ :‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَتَاهُ طَالِبُ حَاجَةٍ أَقْبَلَ عَلَى جُلَسَائِهِ فَقَالَ ‏ “‏ اشْفَعُوا فَلْتُؤْجَرُوا وَلْيَقْضِ اللَّهُ عَلَى لِسَانِ نَبِيِّهِ مَا أَحَبَّ ‏”‏

தேவையுடையவர் யாரேனும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தால், தம்முடன் அமர்ந்திருப்பவர்களை முன்னோக்கி, “(இவருக்காக என்னிடம்) பரிந்துரை செய்யுங்கள்; அதனால் உங்களுக்கும் நற்பலன் வழங்கப்படும்; தன் தூதருடைய நாவின் மூலம், தான் விரும்பியதை அல்லாஹ் தீர்ப்பளிக்கட்டும்!” என்று கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)