حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قُهْزَاذَ، حَدَّثَنَا سَلَمَةُ بْنُ سُلَيْمَانَ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، ح
وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بَهْرَامَ، وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ – وَاللَّفْظُ لَهُمَا – قَالاَ أَخْبَرَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، أَنَّأَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ :
جَاءَتْنِي امْرَأَةٌ وَمَعَهَا ابْنَتَانِ لَهَا فَسَأَلَتْنِي فَلَمْ تَجِدْ عِنْدِي شَيْئًا غَيْرَ تَمْرَةٍ وَاحِدَةٍ فَأَعْطَيْتُهَا إِيَّاهَا فَأَخَذَتْهَا فَقَسَمَتْهَا بَيْنَ ابْنَتَيْهَا وَلَمْ تَأْكُلْ مِنْهَا شَيْئًا ثُمَّ قَامَتْ فَخَرَجَتْ وَابْنَتَاهَا فَدَخَلَ عَلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم فَحَدَّثْتُهُ حَدِيثَهَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم “ مَنِ ابْتُلِيَ مِنَ الْبَنَاتِ بِشَىْءٍ فَأَحْسَنَ إِلَيْهِنَّ كُنَّ لَهُ سِتْرًا مِنَ النَّارِ ”
ஒரு பெண் என்னிடம் (உண்பதற்கு ஏதேனும்) கேட்டு வந்தார். அவருடன் அவருடைய இரு பெண் குழந்தைகளும் இருந்தனர். அப்போது அவருக்கு(க் கொடுக்க) என்னிடம் ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. ஆகவே, நான் அதை அவருக்குக் கொடுத்தேன். உடனே அதை வாங்கி, அதை இரண்டாகப் பிய்த்துக் குழந்தைகள் இருவருக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார். அதிலிருந்து சிறிதளவும் அவர் சாப்பிடவில்லை.
பிறகு அவரும் அவருடைய குழந்தைகளும் சென்றுவிட்டனர். பின்னர் நபி (ஸல்) என்னிடம் வந்தபோது, அந்தப் பெண்ணைப் பற்றிய செய்தியை அவர்களிடம் சொன்னேன். அப்போது நபி (ஸல்), “பெண் குழந்தைகளில் ஒன்றின் மூலம் சோதிக்கப்பட்டபோது, அவர்களுக்கு யார் நன்மை புரிவாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக இருப்பார்கள்” என்றார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)