அத்தியாயம்: 5, பாடம்: 22, ஹதீஸ் எண்: 913

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏مُسْلِمِ بْنِ أَبِي مَرْيَمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمُعَاوِيِّ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏رَآنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏وَأَنَا أَعْبَثُ بِالْحَصَى فِي الصَّلَاةِ فَلَمَّا انْصَرَفَ نَهَانِي ‏

فَقَالَ اصْنَعْ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَصْنَعُ فَقُلْتُ وَكَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَصْنَعُ قَالَ ‏ ‏كَانَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ وَضَعَ كَفَّهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَقَبَضَ أَصَابِعَهُ كُلَّهَا وَأَشَارَ بِإِصْبَعِهِ الَّتِي تَلِي ‏ ‏الْإِبْهَامَ وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى ‏

حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏مُسْلِمِ بْنِ أَبِي مَرْيَمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمُعَاوِيِّ ‏ ‏قَالَ ‏ ‏صَلَّيْتُ إِلَى جَنْبِ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏فَذَكَرَ نَحْوَ حَدِيثِ ‏ ‏مَالِكٍ ‏ ‏وَزَادَ ‏ ‏قَالَ ‏ ‏سُفْيَانُ ‏ ‏فَكَانَ ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا بِهِ عَنْ ‏ ‏مُسْلِمٍ ‏ ‏ثُمَّ حَدَّثَنِيهِ ‏ ‏مُسْلِمٌ

நான் (சிறிய வயதில்) தொழுகையில் பொடிக்கற்களை வைத்து விளையாடிக் கொண்டிருப்பதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கண்டார்கள். அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியதும் (அவ்வாறு செய்யலாகாது என) என்னைத் தடுத்தார்கள். “(தொழுகையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் போன்று நீயும் செய்” என்றார்கள். நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த விதமென்ன?” எனக் கேட்டேன். அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகை (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்கார்ந்தால் தம்முடைய வலது முன்கையை வலது தொடையின் மீது வைத்துத் தம் (வலக்கை) விரல்கள் அனைத்தையும் மடக்கிக் கொண்டு பெருவிரலை ஒட்டியுள்ள (சுட்டு) விரலால் சைகை செய்வார்கள். இடது முன்கையை இடது தொடையில் வைத்திருப்பார்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் வழியாக அலீ பின் அப்திர்ரஹ்மான் அல்முஆவீ (ரஹ்)

குறிப்பு :

ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் இப்னு உமர் (ரலி) அவர்களுக்குப் பக்கத்தில் தொழுது கொண்டிருந்தேன் …” என்று அலீ பின் அப்திர்ரஹ்மான் அல்முஆவீ (ரஹ்) கூறியதாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 22, ஹதீஸ் எண்: 912

و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يُونُسُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏إِذَا قَعَدَ فِي التَّشَهُّدِ وَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى رُكْبَتِهِ الْيُمْنَى وَعَقَدَ ثَلَاثَةً وَخَمْسِينَ وَأَشَارَ بِالسَّبَّابَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத் அமர்வில் உட்கார்ந்தால் தமது இடக்கையை இடது கால் மூட்டின் மீதும் வலக்கையை வலது கால் மூட்டின் மீதும் வைப்பார்கள். (அரபியர் வழக்கில்) ஐம்பத்து மூன்று என எண்ணுவதைப் போன்று (சுண்டுவிரல், மோதிரவிரல், நடுவிரல் ஆகிய மூன்றையும் உள்ளங்கையில் மடக்கி) வைத்து, சுட்டுவிரலால் சைகை செய்வார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 22, ஹதீஸ் எண்: 911

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏عَبْدٌ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ وَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ وَرَفَعَ إِصْبَعَهُ الْيُمْنَى الَّتِي تَلِي ‏ ‏الْإِبْهَامَ فَدَعَا بِهَا وَيَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى بَاسِطَهَا عَلَيْهَا

நபி (ஸல்) அவர்கள் தொழுகை (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்கார்ந்தால் தம் இருகைகளையும் இருமுழங்கால்கள் மீது வைப்பார்கள். வலக்கைப் பெருவிரலை ஒட்டியுள்ள (சுட்டு) விரலை உயர்த்திப் பிரார்த்திப்பார்கள். இடக்கையை இடது கால் மூட்டின் மீது விரித்து வைத்திருப்பார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 22, ஹதீஸ் எண்: 910

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَجْلَانَ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَاللَّفْظ لَهُ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ الْأَحْمَرُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَجْلَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا قَعَدَ ‏ ‏يَدْعُو ‏ ‏وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَيَدَهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى وَأَشَارَ بِإِصْبَعِهِ السَّبَّابَةِ وَوَضَعَ إِبْهَامَهُ عَلَى إِصْبَعِهِ الْوُسْطَى ‏ ‏وَيُلْقِمُ ‏ ‏كَفَّهُ الْيُسْرَى رُكْبَتَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும்போது (அத்தஹிய்யாத்) அமர்வில் பிரார்த்திக்க உட்கார்ந்தால் தமது வலக் கையை வலது தொடையின் மீதும் இடக் கையை இடது தொடையின் மீதும் வைத்து, (வலக்கையின்) சுட்டுவிரலால் சைகை செய்வார்கள். தமது (வலக்கைப்) பெரு விரலி(ன் நுனியி)னை நடு விரலின் (நுனி) மீது வைத்து வளையமிட்டுப் பிடித்திருப்பார்கள். இடது உள்ளங்கையைத் தமது (இடக் கால்) மூட்டின் மீது வைத்திருப்பார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 22, ஹதீஸ் எண்: 909

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مَعْمَرِ بْنِ رِبْعِيٍّ الْقَيْسِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو هِشَامٍ الْمَخْزُومِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْوَاحِدِ وَهُوَ ابْنُ زِيَادٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ حَكِيمٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَامِرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا قَعَدَ فِي الصَّلَاةِ جَعَلَ قَدَمَهُ الْيُسْرَى بَيْنَ فَخِذِهِ وَسَاقِهِ وَفَرَشَ قَدَمَهُ الْيُمْنَى وَوَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَأَشَارَ بِإِصْبَعِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகை (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்காரும்போது தமது இடது பாதத்தை (வலது) தொடைக்கும் கணுக்காலுக்கும் இடையே வைத்து, வலது பாதத்தை விரித்து(ப் படுக்க) வைப்பார்கள். தமது இடக்கையை இடது கால் மூட்டின் மீதும் வலக்கையை வலது தொடையின்மீதும் வைத்துத் தமது சுட்டுவிரலால் சைகை செய்வார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி)