அத்தியாயம்: 5, பாடம்: 28, ஹதீஸ் எண்: 943

‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏الْحَجَّاجُ بْنُ أَبِي عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَوْنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ ‏
‏بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذْ قَالَ رَجُلٌ مِنْ الْقَوْمِ اللَّهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا وَسُبْحَانَ اللَّهِ ‏ ‏بُكْرَةً ‏ ‏وَأَصِيلًا ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ الْقَائِلُ كَلِمَةَ كَذَا وَكَذَا قَالَ رَجُلٌ مِنْ الْقَوْمِ أَنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏ ‏عَجِبْتُ لَهَا فُتِحَتْ لَهَا أَبْوَابُ السَّمَاءِ ‏
‏قَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ذَلِكَ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம் அப்போது மக்களில் ஒருவர், “அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வஸுப்ஹானல்லாஹி புக்ரத்தன் வஅஸீலா (அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்)” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இன்ன இன்ன வார்த்தைகளை மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர், “நான்தான் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான் இதைக் கேட்டு வியப்புற்றேன்! இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டன” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறக் கேட்டதிலிருந்து நான் அச்சொற்களை(க் கூறாமல்) விடவேயில்லை.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 28, ஹதீஸ் எண்: 942

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَفَّانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏قَتَادَةُ ‏ ‏وَثَابِتٌ ‏ ‏وَحُمَيْدٌ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏
‏أَنَّ رَجُلًا جَاءَ فَدَخَلَ الصَّفَّ وَقَدْ ‏ ‏حَفَزَهُ ‏ ‏النَّفَسُ فَقَالَ الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَاتَهُ قَالَ أَيُّكُمْ الْمُتَكَلِّمُ بِالْكَلِمَاتِ ‏ ‏فَأَرَمَّ ‏ ‏الْقَوْمُ فَقَالَ أَيُّكُمْ الْمُتَكَلِّمُ بِهَا فَإِنَّهُ لَمْ يَقُلْ بَأْسًا فَقَالَ رَجُلٌ جِئْتُ وَقَدْ ‏ ‏حَفَزَنِي ‏ ‏النَّفَسُ فَقُلْتُهَا فَقَالَ ‏ ‏لَقَدْ رَأَيْتُ اثْنَيْ عَشَرَ مَلَكًا ‏ ‏يَبْتَدِرُونَهَا ‏ ‏أَيُّهُمْ ‏ ‏يَرْفَعُهَا

ஒருவர் மூச்சிறைக்க (விரைந்து) வந்து தொழுகை வரிசையில் இணைந்து கொண்டு, “அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி (தூய்மையும் வளமும் நிறைந்த அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது)” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகையை முடித்ததும், “உங்களில் இவ்வார்த்தைகளை மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். மக்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் இதை மொழிந்தவர் யார்? ஏனெனில், அவர் தவறாக ஏதும் சொல்லவில்லை” என்று மீண்டும் கேட்டார்கள். உடனே அவர், “நான் மூச்சிறைக்க வந்து தொழுகையில் சேர்ந்தேன். ஆகவே, இவ்வாறு சொன்னேன்” என்று பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “பன்னிரண்டு வானவர்கள் தமக்கிடையே இதை (அல்லாஹ்விடம்) எடுத்துச் செல்பவர் யார் எனும் விஷயத்தில் போட்டியிட்டுக் கொண்டிருந்ததை நான் கண்டேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 28, ஹதீஸ் எண்: 941

قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏وَحُدِّثْتُ عَنْ ‏ ‏يَحْيَى بْنِ حَسَّانَ ‏ ‏وَيُونُسَ الْمُؤَدِّبِ ‏ ‏وَغَيْرِهِمَا ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عُمَارَةُ بْنُ الْقَعْقَاعِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو زُرْعَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُا ‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا نَهَضَ مِنْ الرَّكْعَةِ الثَّانِيَةِ اسْتَفْتَحَ الْقِرَاءَةَ بِ ‏‏الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ‏وَلَمْ يَسْكُتْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாவது ரக்அத்திலிருந்து (மூன்றாவது ரக்அத்திற்கு) எழும்போது, அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று (உடனே) கிராஅத்தைத் தொடங்கி விடுவார்கள் (இடையில்) மௌனமாக இருக்கமாட்டார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 28, ஹதீஸ் எண்: 940

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي زُرْعَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا كَبَّرَ فِي الصَّلَاةِ سَكَتَ هُنَيَّةً قَبْلَ أَنْ يَقْرَأَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ وَأُمِّي أَرَأَيْتَ سُكُوتَكَ بَيْنَ التَّكْبِيرِ وَالْقِرَاءَةِ مَا تَقُولُ قَالَ أَقُولُ ‏ ‏اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ نَقِّنِي مِنْ خَطَايَايَ كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنْ ‏ ‏الدَّنَسِ ‏ ‏اللَّهُمَّ اغْسِلْنِي مِنْ خَطَايَايَ بِالثَّلْجِ وَالْمَاءِ وَالْبَرَدِ ‏

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ فُضَيْلٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كَامِلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ يَعْنِي ابْنَ زِيَادٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏جَرِيرٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் (தொடக்க) தக்பீர் கூறி, (அல்ஹம்து) ஓதுவதற்குமுன் சிறிது நேரம் மௌனமாக இருப்பார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் தக்பீருக்கும் (அல்ஹம்து) ஓதுவதற்குமிடையே நீங்கள் மௌனமாக இருக்கும்போது என்ன கூறுவீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கத்தாயாய, கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல்மஃக்ரிப்; அல்லாஹும்ம நக்கினீ மின் கத்தாயாய, கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ்; அல்லாஹும்மஃக்ஸில்னீ மின் கத்தாயாய பிஸ்ஸல்ஜி, வல்மாயி, வல்பரத் ( இறைவா! கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவதைப் போன்று என் தவறுகளைவிட்டு என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! பனிக்கட்டியாலும் தண்ணீராலும் ஆலங்கட்டியாலும் என்னிலிருந்து என் தவறுகளைக் கழுவுவாயாக) என்று கூறுவேன்” என பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)