அத்தியாயம்: 5, பாடம்: 34, ஹதீஸ் எண்: 983

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بِشْرُ بْنُ الْمُفَضَّلِ ‏ ‏عَنْ ‏ ‏غَالِبٍ الْقَطَّانِ ‏ ‏عَنْ ‏ ‏بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏

كُنَّا نُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي شِدَّةِ الْحَرِّ فَإِذَا لَمْ يَسْتَطِعْ أَحَدُنَا أَنْ يُمَكِّنَ جَبْهَتَهُ مِنْ الْأَرْضِ بَسَطَ ثَوْبَهُ فَسَجَدَ عَلَيْهِ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கடுமையான சூடுகாலத்தில் தொழுவோம். அப்போது எங்களில் ஒருவர் பூமியில் தமது நெற்றியை வைக்க இயலாவிட்டால் தமது ஆடையை விரித்து அதன்மீது ஸஜ்தாச் செய்வார்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 34, ஹதீஸ் எண்: 982

و حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ يُونُسَ ‏ ‏وَعَوْنُ بْنُ سَلَّامٍ ‏ ‏قَالَ ‏ ‏عَوْنٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏ابْنُ يُونُسَ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبُو إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏خَبَّابٍ ‏ ‏قَالَ ‏

أَتَيْنَا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَشَكَوْنَا إِلَيْهِ حَرَّ ‏ ‏الرَّمْضَاءِ ‏ ‏فَلَمْ ‏ ‏يُشْكِنَا ‏

قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏قُلْتُ ‏ ‏لِأَبِي إِسْحَقَ ‏ ‏أَفِي الظُّهْرِ قَالَ نَعَمْ قُلْتُ أَفِي تَعْجِيلِهَا قَالَ نَعَمْ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று சுடுமணல்(மீது நின்று தொழுவதைக்) குறித்து முறையிட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் முறையீட்டை ஏற்கவில்லை.

அறிவிப்பாளர் : கப்பாப் பின் அல்அரத் (ரலி)

குறிப்பு :

ஸுஹைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்களிடம் ‘இது, லுஹ்ருத் தொழுகை தொடர்பானதா?’ என்று கேட்டேன். அதற்கு அபூஇஸ்ஹாக் (ரஹ்), ‘ஆம்’ என்றார்கள். நான், ‘லுஹ்ருத் தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுவது தொடர்பாகவா?’ என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் ‘ஆம்’ என்றார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 34, ஹதீஸ் எண்: 981

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ سَلَّامُ بْنُ سُلَيْمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏خَبَّابٍ ‏ ‏قَالَ ‏

شَكَوْنَا إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الصَّلَاةَ فِي ‏ ‏الرَّمْضَاءِ ‏ ‏فَلَمْ ‏ ‏يُشْكِنَا

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சுடுமணல்(மீது நின்று தொழுவதைக்) குறித்து முறையிட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் முறையீட்டை ஏற்கவில்லை.

அறிவிப்பாளர் : கப்பாப் பின் அல்அரத் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 34, ஹதீஸ் எண்: 980

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى الْقَطَّانِ ‏ ‏وَابْنِ مَهْدِيٍّ ‏ ‏ح ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏سِمَاكُ بْنُ حَرْبٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ سَمُرَةَ ‏ ‏ح ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏وَحَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ سَمُرَةَ ‏ ‏قَالَ

كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي الظُّهْرَ إِذَا ‏ ‏دَحَضَتْ ‏ ‏الشَّمْسُ

நபி (ஸல்) அவர்கள் (சூடு கடுமையற்ற காலத்தில்) சூரியன் உச்சி சாய்ந்துவிட்டால் லுஹ்ருத் தொழுதுவிடுவார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபி பின் ஸமுரா (ரலி)