அத்தியாயம்: 6, பாடம்: 16, ஹதீஸ் எண்: 1232

حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَسَّانُ ‏ ‏قَاضِي ‏ ‏كِرْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الضُّحَى ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

‏كُلَّ اللَّيْلِ قَدْ أَوْتَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَانْتَهَى وِتْرُهُ إِلَى آخِرِ اللَّيْلِ

இரவின் அனைத்துப் பகுதியிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வித்ருத் தொழுதிருக்கிறார்கள். அவர்களின் வித்ருத் தொழுகை (சில வேளை) இரவின் இறுதிப் பகுதிவரை சென்றுவிடும்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 16, ஹதீஸ் எண்: 1231

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَصِينٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ وَثَّابٍ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

‏مِنْ كُلِّ اللَّيْلِ قَدْ أَوْتَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ أَوَّلِ اللَّيْلِ وَأَوْسَطِهِ وَآخِرِهِ فَانْتَهَى وِتْرُهُ إِلَى السَّحَرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரவின் ஆரம்பப் பகுதி, நடுப் பகுதி, இறுதிப் பகுதி ஆகிய எல்லாப் பகுதிகளிலும் வித்ருத் தொழுகை தொழுதிருக்கிறார்கள்.அவர்களின் வித்ருத் தொழுகை (சில வேளை) சஹர் நேரம் வரை சென்றுவிடும்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 16, ஹதீஸ் எண்: 1230

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي يَعْفُورٍ وَاسْمُهُ وَاقِدٌ وَلَقَبُهُ وَقْدَانُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

‏مِنْ كُلِّ اللَّيْلِ قَدْ أَوْتَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَانْتَهَى وِتْرُهُ إِلَى السَّحَرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரவின் எல்லாப் பகுதியிலும் வித்ருத் தொழுதிருக்கிறார்கள். அவர்களின் வித்ருத் தொழுகை (சில வேளை) சஹர் நேரம்வரை சென்றுவிடும்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 16, ஹதீஸ் எண்: 1229

و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُصَلِّي صَلَاتَهُ بِاللَّيْلِ وَهِيَ مُعْتَرِضَةٌ بَيْنَ يَدَيْهِ فَإِذَا بَقِيَ الْوِتْرُ أَيْقَظَهَا فَأَوْتَرَتْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரவில் (தஹஜ்ஜுத்) தொழுதுகொண்டிருக்கும்போது நான் அவர்களுக்கு முன்னால் குறுக்கே படுத்துக்கொண்டிருப்பேன். அவர்கள் (தஹஜ்ஜுத் தொழுகையை முடித்துவிட்டு) வித்ரு மட்டும் எஞ்சி இருக்கும்போது என்னை எழுப்பிவிடுவார்கள்; நான் (எழுந்து) வித்ரு தொழுவேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 16, ஹதீஸ் எண்: 1228

و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏تَمِيمِ بْنِ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي مِنْ اللَّيْلِ فَإِذَا أَوْتَرَ قَالَ ‏ ‏قُومِي فَأَوْتِرِي يَا ‏ ‏عَائِشَةُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரவில் (நான் உறங்கிக்கொண்டிருக்கும்போது தஹஜ்ஜுத்) தொழுவார்கள்; அவர்கள் வித்ருத் தொழ எண்ணும்போது, “ஆயிஷா! எழுந்து வித்ருத் தொழு!” என்று (என்னை எழுப்பிக்) கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 16, ஹதீஸ் எண்: 1227

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَنَصْرُ بْنُ عَلِيٍّ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي النَّضْرِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

‏كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا صَلَّى رَكْعَتَيْ الْفَجْرِ فَإِنْ كُنْتُ مُسْتَيْقِظَةً حَدَّثَنِي وَإِلَّا اضْطَجَعَ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏زِيَادِ بْنِ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي عَتَّابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِثْلَهُ

நபி (ஸல்), ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். நான் விழித்திருந்தால் என்னுடன் பேசிக்கொண்டிருப்பார்கள்; இல்லாவிடில் (ஃபர்ளுத் தொழுகைக்கு இகாமத்வரை) சாய்ந்து படுத்துக்கொள்வார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 16, ஹதீஸ் எண்: 1226

حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

‏مَا ‏ ‏أَلْفَى ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏السَّحَرُ الْأَعْلَى ‏ ‏فِي بَيْتِي أَوْ عِنْدِي إِلَّا نَائِمًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது வீட்டில்/என்னிடம் தங்கியிருக்கும் நாளில் அவர்கள் உறங்கும்போது, பின்னிரவு நேரம் அவர்களை அடைந்துவிடும்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 16, ஹதீஸ் எண்: 1225

حَدَّثَنِي ‏ ‏هَنَّادُ بْنُ السَّرِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏أَشْعَثَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏عَائِشَةَ ‏

‏عَنْ عَمَلِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ كَانَ ‏ ‏يُحِبُّ الدَّائِمَ قَالَ قُلْتُ أَيَّ حِينٍ كَانَ ‏ ‏يُصَلِّي فَقَالَتْ كَانَ إِذَا سَمِعَ ‏ ‏الصَّارِخَ ‏ ‏قَامَ فَصَلَّى

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (விருப்பத்திற்குரிய) நற்செயல் குறித்துக் கேட்டேன். அதற்கு, அவர்கள், “நிரந்தரமாகச் செய்யப்படும் நற்செயலை விரும்புவார்கள்” என ஆயிஷா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவுத் தொழுகையை) எந்த நேரத்தில் தொழுவார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “சேவல் கூவும் சப்தத்தைக் கேட்கும்போது (இரவின் இறுதிப் பகுதியில்) எழுந்து தொழுவார்கள்” என விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 16, ஹதீஸ் எண்: 1224

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمَّارُ بْنُ رُزَيْقٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي مِنْ اللَّيْلِ حَتَّى يَكُونَ آخِرَ صَلَاتِهِ الْوِتْرُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் தொழும் தொழுகையில் இறுதித் தொழுகை வித்ராகவே இருக்கும்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 16, ஹதீஸ் எண்: 1223

و حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو إِسْحَقَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏الْأَسْوَدَ بْنَ يَزِيدَ ‏ ‏عَمَّا ‏ ‏حَدَّثَتْهُ ‏ ‏عَائِشَةُ ‏

‏عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ كَانَ ‏ ‏يَنَامُ أَوَّلَ اللَّيْلِ وَيُحْيِ آخِرَهُ ثُمَّ إِنْ كَانَتْ لَهُ حَاجَةٌ إِلَى أَهْلِهِ قَضَى حَاجَتَهُ ثُمَّ يَنَامُ فَإِذَا كَانَ عِنْدَ النِّدَاءِ الْأَوَّلِ قَالَتْ وَثَبَ وَلَا وَاللَّهِ مَا قَالَتْ قَامَ فَأَفَاضَ عَلَيْهِ الْمَاءَ وَلَا وَاللَّهِ مَا قَالَتْ اغْتَسَلَ وَأَنَا أَعْلَمُ مَا تُرِيدُ وَإِنْ لَمْ يَكُنْ جُنُبًا تَوَضَّأَ وُضُوءَ الرَّجُلِ لِلصَّلَاةِ ثُمَّ صَلَّى الرَّكْعَتَيْنِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரவின் ஆரம்பப் பகுதியில் உறங்கிவிட்டு, அதன் இறுதிப் பகுதியில் விழித்திருப்பார்கள். பிறகு தம் மனைவியரிடத்தில் தமக்குத் தேவையிருப்பின் (அவர்களிடம் சென்று) தமது தேவையை நிறைவேற்றுவார்கள்; பிறகு உறங்குவார்கள். முதல் பாங்கின் சப்தம் கேட்டதும் துள்ளி எழுந்து தம்மீது தண்ணீர் ஊற்றுவார்கள். பெருந்துடக்கு ஏற்பட்டிருக்காவிட்டால் தொழுகைக்காகச் செய்வதைப் போன்று உளூச் செய்வார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அஸ்வத் பின் யஸீத் (ரஹ்)

குறிப்பு :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரவுத்) தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் தம்மிடம் கூறியதாக அறிவிப்பாளர் அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அறிவிக்கும் மேற்காணும் ஹதீஸில், “அல்லாஹ்வின் மீதாணை! ‘முதல் பாங்கின் அழைப்புக் கேட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) துள்ளி எழுவார்கள்’ என்றே ஆயிஷா (ரலி) கூறினார்களேயன்றி வெறுமனே ‘எழுவார்கள்’ என்று கூறவில்லை. அதேபோல், அல்லாஹ்வின் மீதாணையாக! ‘குளிப்பார்கள்’ என்று கூறாமல் ‘தம் மீது தண்ணீரை ஊற்றுவார்கள்’ என்றே ஆயிஷா (ரலி) கூறினார்கள்” என்று அஸ்வத் (ரஹ்) விளக்குவதாக இடம்பெற்றுள்ளது.