அத்தியாயம்: 6, பாடம்: 02, ஹதீஸ் எண்: 1128

و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْحَمِيدِ صَاحِبِ الزِّيَادِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ‏ ‏أَنَّهُ ‏

قَالَ لِمُؤَذِّنِهِ فِي يَوْمٍ مَطِيرٍ إِذَا قُلْتَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنَّ ‏ ‏مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ‏ ‏فَلَا تَقُلْ حَيَّ عَلَى الصَّلَاةِ قُلْ ‏ ‏صَلُّوا فِي بُيُوتِكُمْ قَالَ فَكَأَنَّ النَّاسَ اسْتَنْكَرُوا ذَاكَ فَقَالَ أَتَعْجَبُونَ مِنْ ذَا قَدْ فَعَلَ ذَا مَنْ هُوَ خَيْرٌ مِنِّي إِنَّ الْجُمُعَةَ ‏ ‏عَزْمَةٌ ‏ ‏وَإِنِّي كَرِهْتُ أَنْ أُخْرِجَكُمْ فَتَمْشُوا فِي الطِّينِ ‏ ‏وَالدَّحْضِ ‏

و حَدَّثَنِيهِ ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْحَمِيدِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ الْحَارِثِ ‏ ‏قَالَ خَطَبَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ ‏ ‏فِي يَوْمٍ ذِي رَدْغٍ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏وَلَمْ يَذْكُرْ الْجُمُعَةَ وَقَالَ قَدْ فَعَلَهُ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي ‏ ‏يَعْنِي النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏و قَالَ ‏ ‏أَبُو كَامِلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ‏ ‏بِنَحْوِهِ ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ هُوَ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏وَعَاصِمٌ الْأَحْوَلُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَلَمْ يَذْكُرْ فِي حَدِيثِهِ ‏ ‏يَعْنِي النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ شُمَيْلٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْحَمِيدِ صَاحِبُ الزِّيَادِيِّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ الْحَارِثِ ‏ ‏قَالَ ‏ ‏أَذَّنَ مُؤَذِّنُ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏يَوْمَ جُمُعَةٍ فِي يَوْمٍ مَطِيرٍ ‏ ‏فَذَكَرَ نَحْوَ حَدِيثِ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏وَقَالَ وَكَرِهْتُ أَنْ تَمْشُوا فِي ‏ ‏الدَّحْضِ ‏ ‏وَالزَّلَلِ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ عَامِرٍ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ الْأَحْوَلِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏أَمَرَ مُؤَذِّنَهُ فِي حَدِيثِ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏فِي يَوْمِ جُمُعَةٍ فِي يَوْمٍ مَطِيرٍ بِنَحْوِ حَدِيثِهِمْ وَذَكَرَ فِي حَدِيثِ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏فَعَلَهُ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي ‏ ‏يَعْنِي النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ إِسْحَقَ الْحَضْرَمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ‏ ‏قَالَ ‏ ‏وُهَيْبٌ ‏ ‏لَمْ يَسْمَعْهُ مِنْهُ ‏ ‏قَالَ ‏ ‏أَمَرَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏مُؤَذِّنَهُ فِي يَوْمِ جُمُعَةٍ فِي يَوْمٍ مَطِيرٍ بِنَحْوِ حَدِيثِهِمْ

மழை பெய்துகொண்டிருந்த ஒரு (ஜுமுஆ) நாளில் இப்னு அப்பாஸ் (ரலி), “அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ்… அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று கூறியதும் ‘ஹய்ய அலஸ் ஸலாஹ் – தொழுகைக்கு வாருங்கள்’ என்று அழைக்காமல், ‘ஸல்லூ ஃபீ புயூத்திக்கும் – உங்கள் இல்லங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்’ என்று கூறுவீராக!” என்று முஅத்தினிடம் கூறினார்கள். அதற்கு மக்கள் மறுப்புத் தெரிவித்தனர். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), “இ(வ்வாறு நான் கூறிய)தைக் கேட்டு நீங்கள் வியப்படைகிறீர்களா? ஜுமுஆ என்பது கட்டாயக் கடமைத் தொழுகைதான். (இருப்பினும்) நான் உங்களைச் சேற்றிலும் சகதியிலும் நடக்க விட்டு உங்களுக்குச் சிரமம் கொடுக்க விரும்பவில்லை; என்னைவிடச் சிறந்த(நபிய)வர்களும் இவ்வாறுதான் செய்தார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்)

குறிப்பு :

ஹம்மாதிப்னு ஸைத் (ரஹ்) வழி அறிவிப்பில், “… சகதியுடைய ஒரு(மழை) நாளில் எங்களுக்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) உரையாற்றினார்கள்…” என்று ஹதீஸ் தொடங்குகிறது. இந்த அறிவிப்பில் ஜுமுஆ பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை. “என்னைவிடச் சிறந்தவர் – அதாவது நபி (ஸல்) – இவ்வாறு செய்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

ஆஸிம் (ரஹ்) வழி அறிவிப்பில், “… மழை பெய்த ஒரு வெள்ளிக்கிழமை அன்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய முஅத்தின் பாங்கு சொன்னார் …” என்று அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது. தொடர்ந்து, “… சேற்றிலும் சகதியிலும் நீங்கள் நடந்து வருவதை நான் விரும்பவில்லை” என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.

மஃமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “…மழைபெய்த ஒரு வெள்ளிக்கிழமையில் இப்னு அப்பாஸ் (ரலி), தம் முஅத்தினிடம் …” என இடம்பெற்றுள்ளது. மேலும் “… என்னைவிடச் சிறந்தவர் – நபி (ஸல்) இவ்வாறு செய்துள்ளார்கள்” என்று கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.

அஹ்மதிப்னு இஸ்ஹாக் அல்ஹளரமீ (ரஹ்) வழி அறிவிப்பில், “… மழைபெய்த வெள்ளிக்கிழமை அன்று இப்னு இப்பாஸ் (ரலி), தம் முஅத்தினிடம் (அவ்வாறு அதான் சொற்களை மாற்றிக் கூறுமாறு) சொன்னார்கள்” என இடம்பெற்றுள்ளது. இந்த வரிசையில் இடம்பெறும் அறிவிப்பாளர் அய்யூப் (ரஹ்) என்பார், அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து (இதை நேரடியாகச்) செவியேற்கவில்லை என வுஹைப் (ரஹ்) கூறியுள்ளார்.

அத்தியாயம்: 6, பாடம்: 02, ஹதீஸ் எண்: 1127

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ يُونُسَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ ‏

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي سَفَرٍ فَمُطِرْنَا فَقَالَ ‏ ‏لِيُصَلِّ مَنْ شَاءَ مِنْكُمْ فِي ‏ ‏رَحْلِهِ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றுகொண்டிருந்தபோது மழை பெய்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் விரும்புபவர், தமது இருப்பிடத்திலேயே தொழுதுகொள்ளட்டும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 02, ஹதீஸ் எண்: 1126

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏أَنَّهُ نَادَى بِالصَّلَاةِ فِي لَيْلَةٍ ذَاتِ بَرْدٍ وَرِيحٍ وَمَطَرٍ فَقَالَ فِي آخِرِ نِدَائِهِ أَلَا صَلُّوا فِي ‏ ‏رِحَالِكُمْ ‏ ‏أَلَا صَلُّوا فِي ‏ ‏الرِّحَالِ ‏ ‏ثُمَّ قَالَ ‏

إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَأْمُرُ الْمُؤَذِّنَ إِذَا كَانَتْ لَيْلَةٌ بَارِدَةٌ أَوْ ذَاتُ مَطَرٍ فِي السَّفَرِ أَنْ يَقُولَ أَلَا صَلُّوا فِي ‏ ‏رِحَالِكُمْ ‏

و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏أَنَّهُ نَادَى بِالصَّلَاةِ ‏ ‏بِضَجْنَانَ ‏ ‏ثُمَّ ذَكَرَ بِمِثْلِهِ وَقَالَ أَلَا صَلُّوا فِي ‏ ‏رِحَالِكُمْ ‏ ‏وَلَمْ يُعِدْ ثَانِيَةً أَلَا صَلُّوا فِي ‏ ‏الرِّحَالِ ‏ ‏مِنْ قَوْلِ ‏ ‏ابْنِ عُمَرَ

இப்னு உமர் (ரலி) குளிரும் காற்றும் மழையும் நிறைந்த ஓர் இரவில் தொழுகை அறிவிப்புச் செய்தபோது அதன் இறுதியில், “ஓர் அறிவிப்பு! நீங்கள் உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்; இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்” என்று கூறினார்கள். பிறகு “குளிரோ மழையோ உள்ள இரவில் பயணம் செய்யும்போது, நீங்கள் உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள் என்று அறிவிக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), முஅத்தினுக்குக் கட்டளையிடுவார்கள்” என்றும் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)

குறிப்பு :

அபூஉஸாமா (ரஹ்) வழி அறிவிப்பில், “… இப்னு உமர் (ரலி), (மக்காவுக்கு அருகிலுள்ள) லஜ்னான் எனும் மலைப்பகுதியில் தொழுகைக்கு அழைப்பு விடுத்தார்கள் …” என ஹதீஸ் தொடங்குகிறது. மேலும், “ஓர் அறிவிப்பு! நீங்கள் உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்” என இப்னு உமர் (ரலி) ஒருமுறைதான் அறிவித்தார்கள். இரண்டாம்முறை மீட்டதாகக் குறிப்பு இல்லை.

அத்தியாயம்: 6, பாடம்: 02, ஹதீஸ் எண்: 1125

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏أَذَّنَ بِالصَّلَاةِ فِي لَيْلَةٍ ذَاتِ بَرْدٍ وَرِيحٍ فَقَالَ أَلَا صَلُّوا فِي ‏ ‏الرِّحَالِ ‏ ‏ثُمَّ قَالَ ‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَأْمُرُ الْمُؤَذِّنَ إِذَا كَانَتْ لَيْلَةٌ بَارِدَةٌ ذَاتُ مَطَرٍ يَقُولُ ‏ ‏أَلَا صَلُّوا فِي ‏ ‏الرِّحَالِ

குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் இப்னு உமர் (ரலி) தொழுகைக்காக அழைப்பு விடுத்தபோது, “அலா! ஸல்லூ ஃபிர்ரிஹால் – அறிவிப்பு! நீங்கள் (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்” என்று அறிவிப்புச் செய்தார்கள். பிறகு, “(கடுங்)குளிரும் மழையும் உள்ள இரவில், ‘அறிவிப்பு! நீங்கள் (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்’ என்று அறிவிக்குமாறு முஅத்தினை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணிப்பார்கள்” என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)