அத்தியாயம்: 7, பாடம்: 15, ஹதீஸ் எண்: 1450

و حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُمَيْدُ بْنُ هِلَالٍ ‏ ‏قَالَ ‏

‏قَالَ ‏ ‏أَبُو رِفَاعَةَ ‏ ‏انْتَهَيْتُ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ يَخْطُبُ قَالَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ رَجُلٌ غَرِيبٌ جَاءَ يَسْأَلُ عَنْ دِينِهِ لَا يَدْرِي مَا دِينُهُ قَالَ فَأَقْبَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَتَرَكَ خُطْبَتَهُ حَتَّى انْتَهَى إِلَيَّ فَأُتِيَ بِكُرْسِيٍّ حَسِبْتُ قَوَائِمَهُ حَدِيدًا قَالَ فَقَعَدَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَجَعَلَ يُعَلِّمُنِي مِمَّا عَلَّمَهُ اللَّهُ ثُمَّ أَتَى خُطْبَتَهُ فَأَتَمَّ آخِرَهَا

நான் நபி (ஸல்) அவர்களிடம் போய்ச் சேர்ந்தபோது அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! அயலார் ஒருவர் தமது மார்க்கத்தைத் தெரிந்துகொள்வதற்காக வந்துள்ளார். அவர் தமது மார்க்கத்தைப் பற்றி அறியாமல் இருக்கிறார்” என்று (என்னைப் பற்றிச்) சொன்னேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது உரையை நிறுத்திவிட்டு என்னை நோக்கி வந்தார்கள். ஒரு நாற்காலி கொண்டுவரப்பட்டது. -அதன் கால்கள் இரும்பினால் ஆனவை என்று எண்ணுகின்றேன்- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்த நாற்காலியில் அமர்ந்து, அவர்களுக்கு அல்லாஹ் கற்பித்தவற்றிலிருந்து சிலவற்றை எனக்குப் போதிக்கலானார்கள். பிறகு (மிம்பருக்குத்) திரும்பிச் சென்று தமது உரையின் (எஞ்சிய) பகுதியை முழுமையாக்கினார்கள்.

அறிவிப்பாளர் : அபூரிஃபாஆ தமீம் பின் அஸத் (ரலி).