அத்தியாயம்: 13, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1828

حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ : ‏

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏إِنَّ ‏ ‏بِلَالًا ‏ ‏يُؤَذِّنُ بِلَيْلٍ فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى تَسْمَعُوا أَذَانَ ‏ ‏ابْنِ أُمِّ مَكْتُومٍ

“பிலால் (பின்)இரவில் தொழுகை அறிவிப்புச் செய்வார். (நீங்கள் ஸஹர் நேரம் முடிந்து விட்டதாக நினைத்துவிடாதீர்கள்) இப்னு உம்மி மக்தூமின் தொழுகை அழைப்பை நீங்கள் கேட்கும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1827

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ : ‏

‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏إِنَّ ‏ ‏بِلَالًا ‏ ‏يُؤَذِّنُ بِلَيْلٍ فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى تَسْمَعُوا تَأْذِينَ ‏ ‏ابْنِ أُمِّ مَكْتُومٍ

“பிலால், (பின்)இரவில் தொழுகை அறிவிப்புச் செய்வார். என்றாலும், (ஃபஜ்ரு தொழுகைக்காக) இப்னு உம்மி மக்தூமின் தொழுகை அழைப்பை நீங்கள் கேட்கும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1826

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ سَهْلٍ التَّمِيمِيُّ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي مَرْيَمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو غَسَّانَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو حَازِمٍ ‏
‏عَنْ ‏ ‏سَهْلِ بْنِ سَعْدٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ :‏

‏لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ ‏ ”وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمْ الْخَيْطُ الْأَبْيَضُ مِنْ الْخَيْطِ الْأَسْوَدِ “‏‏ فَكَانَ الرَّجُلُ إِذَا أَرَادَ الصَّوْمَ رَبَطَ أَحَدُهُمْ فِي رِجْلَيْهِ الْخَيْطَ الْأَسْوَدَ وَالْخَيْطَ الْأَبْيَضَ فَلَا يَزَالُ يَأْكُلُ وَيَشْرَبُ حَتَّى يَتَبَيَّنَ لَهُ رِئْيُهُمَا فَأَنْزَلَ اللَّهُ بَعْدَ ذَلِكَ ”مِنْ الْفَجْرِ ‏ “‏‏ ‏فَعَلِمُوا أَنَّمَا ‏ ‏يَعْنِي بِذَلِكَ اللَّيْلَ وَالنَّهَارَ

“கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தென்படும்வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள்” எனும் (2:187ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, நோன்பு நோற்க நாடியுள்ள ஒருவர் தம் இரு கால்களில் (ஒன்றில்) கறுப்புக் கயிற்றையும் (மற்றொன்றில்) வெள்ளைக் கயிற்றையும் கட்டிக்கொண்டு, அவ்விரண்டும் தமது பார்வைக்குத் தெளிவாகப் புலப்படும்வரை சாப்பிட்டுக்கொண்டிருப்பார். ஆகவே, அதற்குப் பின்னர் அல்லாஹ், “மினல் ஃபஜ்ரி” (விடியலின்) எனும் சொல்லையும் சேர்த்து அருளினான். அப்போதுதான் மக்கள், இதன் மூலம் அல்லாஹ் (வெள்ளைக் கயிறு என்றால்) அதிகாலையையும் (கருப்புக் கயிறு என்றால்) இரவையுமே நாடுகிறான் என்பதை அறிந்துகொண்டார்கள்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் ஸஅத் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1825

حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو حَازِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَهْلُ بْنُ سَعْدٍ ‏ ‏قَالَ :‏

‏لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ ” ‏حَتَّى يَتَبَيَّنَ لَكُمْ الْخَيْطُ الْأَبْيَضُ مِنْ الْخَيْطِ الْأَسْوَدِ … “‏‏
‏قَالَ كَانَ الرَّجُلُ يَأْخُذُ خَيْطًا أَبْيَضَ وَخَيْطًا أَسْوَدَ فَيَأْكُلُ حَتَّى يَسْتَبِينَهُمَا حَتَّى أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ”مِنْ الْفَجْرِ‏‏ “فَبَيَّنَ ذَلِكَ

“கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தென்படும்வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள்” எனும் இந்த (2:187 ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, ஒருவர் வெள்ளைக் கயிறு ஒன்றையும் கறுப்புக் கயிறு ஒன்றையும் எடுத்து வைத்துக்கொண்டு, அவையிரண்டும் பார்வைக்குத் தெளிவாகப் புலப்படும்வரை (ஸஹர் உணவு) சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அதன் பின்னர் அல்லாஹ், “…மினல் ஃபஜ்ரி” (விடியலின்) எனும் சொல்லையும் சேர்த்து அருளி அ(வ்வசனத்)தைத் தெளிவுபடுத்தினான்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் ஸஅத் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1824

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ ‏ ‏عَنْ ‏ ‏حُصَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَدِيِّ بْنِ حَاتِمٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ : ‏

‏لَمَّا نَزَلَتْ” ‏حَتَّى يَتَبَيَّنَ لَكُمْ الْخَيْطُ الْأَبْيَضُ مِنْ الْخَيْطِ الْأَسْوَدِ مِنْ الْفَجْرِ“‏

‏قَالَ لَهُ ‏ ‏عَدِيُّ بْنُ حَاتِمٍ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَجْعَلُ تَحْتَ وِسَادَتِي عِقَالَيْنِ عِقَالًا أَبْيَضَ وَعِقَالًا أَسْوَدَ أَعْرِفُ اللَّيْلَ مِنْ النَّهَارِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ وِسَادَتَكَ لَعَرِيضٌ إِنَّمَا هُوَ سَوَادُ اللَّيْلِ وَبَيَاضُ النَّهَارِ

“கறுப்புக் கயிற்றிலிருந்து விடியலின் வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தென்படும் வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள்” எனும் (2:187) வசனம் அருளப்பெற்றபோது நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் வெள்ளை நிறத்தில் ஒரு கயிறு, கறுப்பு நிறத்தில் மற்றொரு கயிறு என இரு கயிறுகளை என் தலையணையின் கீழே வைத்து, இரவையும் பகலையும் (பிரித்து) அறிய முயன்றேன். (முடியவில்லை)” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “உங்கள் தலையணை நிச்சயம் (மிக) அகலமானதாய் இருக்க வேண்டும். (கறுப்புக் கயிறு, வெள்ளைக் கயிறு என்பன) இரவின் கருமையும் விடியலின் வெண்மையுமே ஆகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அதீ பின் ஹாத்திம் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 07, ஹதீஸ் எண்: 1823

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏إِسْحَقَ بْنِ سُوَيْدٍ ‏ ‏وَخَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرَةَ : ‏

‏أَنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ ‏


‏فِي حَدِيثِ ‏ ‏خَالِدٍ ‏ ‏شَهْرَا عِيدٍ رَمَضَانُ وَذُو الْحِجَّةِ

“இரு பெருநாட்களின் மாதங்களும் குறைவாக அமையாது” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூபக்ரா (ரலி)


குறிப்பு :

காலித் பின் மஹ்ரான் (ரஹ்) வழி அறிவிப்பில், “இரு பெருநாட்களின் மாதங்களான ரமளானும் துல்ஹஜ்ஜும் குறையாது” என்று காணப்படுகிறது.

அத்தியாயம்: 13, பாடம்: 07, ஹதீஸ் எண்: 1822

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ : ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ رَمَضَانُ وَذُو الْحِجَّةِ

“இரு பெருநாட்களின் மாதங்களான ரமளானும் துல்ஹஜ்ஜும் குறைவாக அமையாது” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூபக்ரா (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 06, ஹதீஸ் எண்: 1821

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏غُنْدَرٌ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا الْبَخْتَرِيِّ ‏ ‏قَالَ : ‏

‏أَهْلَلْنَا ‏ ‏رَمَضَانَ وَنَحْنُ ‏ ‏بِذَاتِ عِرْقٍ ‏ ‏فَأَرْسَلْنَا رَجُلًا إِلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يَسْأَلُهُ فَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ اللَّهَ قَدْ أَمَدَّهُ لِرُؤْيَتِهِ فَإِنْ أُغْمِيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ

நாங்கள் ‘தாத்து இர்க்’ எனும் இடத்தில் இருந்தபோது ரமளான் (முதல்) பிறையைக் கண்டோம். அதைப் பற்றிக் கேட்பதற்காக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒருவரை அனுப்பினோம். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), “பார்ப்பதற்காகவே பிறையை அல்லாஹ் சிறிது நேரம் தென்படச் செய்கின்றான். உங்களுக்கு (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்களின்) எண்ணிக்கையை (முப்பதாக) முழுமையாக்கிக்கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அபுல் பக்தரீ ஸயீத் பின் ஃபைரூஸ் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 06, ஹதீஸ் எண்: 1820

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏‏حُصَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْبَخْتَرِيِّ ‏ ‏قَالَ : ‏

‏خَرَجْنَا لِلْعُمْرَةِ فَلَمَّا نَزَلْنَا ‏ ‏بِبَطْنِ نَخْلَةَ ‏ ‏قَالَ تَرَاءَيْنَا الْهِلَالَ فَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ ثَلَاثٍ وَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ لَيْلَتَيْنِ قَالَ فَلَقِينَا ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏فَقُلْنَا إِنَّا رَأَيْنَا الْهِلَالَ فَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ ثَلَاثٍ وَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ لَيْلَتَيْنِ فَقَالَ أَيَّ لَيْلَةٍ رَأَيْتُمُوهُ قَالَ فَقُلْنَا لَيْلَةَ كَذَا وَكَذَا فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّ اللَّهَ مَدَّهُ لِلرُّؤْيَةِ فَهُوَ لِلَيْلَةٍ رَأَيْتُمُوهُ

நாங்கள் உம்ராவிற்காகப் புறப்பட்டுச் சென்றோம். (வழியில்) நாங்கள் ‘பத்னு நக்லா’ எனுமிடத்தில் தங்கியிருந்தபோது, பிறையைப் பார்ப்பதற்காக ஒன்றுகூடினோம். அப்போது (பிறையைப் பார்த்த) மக்களில் சிலர், “அது மூன்றாம் பிறை”’ என்று கூறினர். வேறுசிலர், “(அல்ல) அது இரண்டாம் பிறை” என்று கூறினர். பின்னர் நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, “நாங்கள் பிறை பார்த்தோம். மக்களில் சிலர், ‘அது மூன்றாம் பிறை’ என்றனர். வேறுசிலர், ‘அது இரண்டாம் பிறை’ என்று கூறினர்” என்று சொன்னோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “எந்த இரவில் நீங்கள் பிறை கண்டீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு, “இன்ன (மாதத்தின்) இன்ன இரவில்” என்று பதிலளித்தோம். அப்போது, “மக்கள் பார்ப்பதற்காகவே பிறையை அல்லாஹ் சிறிது நேரம் தென்படச் செய்கின்றான். ஆகவே, அது நீங்கள் கண்ட இரவுக்குரியதே ஆகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அபுல் பக்தரீ ஸயீத் பின் ஃபைரூஸ் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 05, ஹதீஸ் எண்: 1819

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَيَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرُونَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ وَهُوَ ابْنُ أَبِي حَرْمَلَةَ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏أَنَّ ‏ ‏أُمَّ الْفَضْلِ بِنْتَ الْحَارِثِ ‏ ‏بَعَثَتْهُ إِلَى ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏بِالشَّامِ ‏ ‏قَال :لَ

فَقَدِمْتُ ‏ ‏الشَّامَ ‏ ‏فَقَضَيْتُ حَاجَتَهَا ‏ ‏وَاسْتُهِلَّ ‏ ‏عَلَيَّ رَمَضَانُ وَأَنَا ‏ ‏بِالشَّامِ ‏ ‏فَرَأَيْتُ الْهِلَالَ لَيْلَةَ الْجُمُعَةِ ثُمَّ قَدِمْتُ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏فِي آخِرِ الشَّهْرِ فَسَأَلَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏ثُمَّ ذَكَرَ الْهِلَالَ فَقَالَ مَتَى رَأَيْتُمْ الْهِلَالَ فَقُلْتُ رَأَيْنَاهُ لَيْلَةَ الْجُمُعَةِ فَقَالَ أَنْتَ رَأَيْتَهُ فَقُلْتُ نَعَمْ وَرَآهُ النَّاسُ وَصَامُوا وَصَامَ ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏فَقَالَ لَكِنَّا رَأَيْنَاهُ لَيْلَةَ السَّبْتِ فَلَا نَزَالُ نَصُومُ حَتَّى نُكْمِلَ ثَلَاثِينَ أَوْ ‏ ‏نَرَاهُ فَقُلْتُ ‏ ‏أَوَ لَا ‏ ‏تَكْتَفِي بِرُؤْيَةِ ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏وَصِيَامِهِ فَقَالَ ‏‏لَا ‏ ‏هَكَذَا أَمَرَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏


‏وَشَكَّ ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏فِي ‏ ‏نَكْتَفِي أَوْ ‏ ‏تَكْتَفِي

உம்முல் ஃபள்லு பின்த்தி அல்ஹாரிஸ் (ரலி) (ஒரு வேலைக்காக) என்னை ஷாம் (சிரியா) நாட்டிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் ஷாம் சென்று அவர் அனுப்பிய பணியை நிறைவு செய்தேன். நான் ஷாமில் இருந்தபோது ரமளான் (முதல்) பிறை எனக்குத் தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவில் நான் பிறையைக் கண்டேன்.

பிறகு அந்த (ரமளான்) மாதத்தின் இறுதியில் நான் மதீனாவுக்கு வந்து சேர்ந்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) (பயணம் குறித்து) என்னிடம் விசாரித்தார்கள். பின்னர் பிறை குறித்தும் பேசினார்கள். அப்போது “நீங்கள் (ஷாமில்) எப்போது பிறை பார்த்தீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “நாங்கள் வெள்ளியன்று பிறை கண்டோம்” என்று பதிலளித்தேன். அவர்கள், “பிறையை நீ கண்டாயா?” என்று கேட்டார்கள். நான், “ஆம் (நானும் கண்டேன்). மக்களும் அதைக் கண்டார்கள். மக்களும் நோன்பு நோற்றனர். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு நோற்றார்கள்” என்று கூறினேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), “ஆனால், நாங்கள் சனிக்கிழமை இரவுதான் (முதல்) பிறை கண்டோம். எனவே, நாங்கள் (ரமளான் மாதத்தின்) எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமையாக்கும்வரை, அல்லது (ஷவ்வால் மாதத்தின் முதல்) பிறையைப் பார்க்கும்வரை நோன்பு நோற்றுக்கொண்டேயிருப்போம்” என்று சொன்னார்கள். அதற்கு நான், “முஆவியா (ரலி) (முதல் பிறை) கண்டு, நோன்பு நோற்றது உங்களுக்குப் பொருந்தாதா?” என்று கேட்டேன். அதற்கு, “இல்லை. இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்)