அத்தியாயம்: 1, பாடம்: 1.10, ஹதீஸ் எண்: 43

حَدَّثَنَا ‏ ‏هَدَّابُ بْنُ خَالِدٍ الْأَزْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قَتَادَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاذِ بْنِ جَبَلٍ ‏ ‏قَالَ ‏
‏كُنْتُ ‏ ‏رِدْفَ ‏ ‏النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيْسَ بَيْنِي وَبَيْنَهُ إِلَّا ‏ ‏مُؤْخِرَةُ الرَّحْلِ ‏ ‏فَقَالَ يَا ‏ ‏مُعَاذَ بْنَ جَبَلٍ ‏ ‏قُلْتُ لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ ثُمَّ سَارَ سَاعَةً ثُمَّ قَالَ يَا ‏ ‏مُعَاذَ بْنَ جَبَلٍ ‏ ‏قُلْتُ لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ ثُمَّ سَارَ سَاعَةً ثُمَّ قَالَ يَا ‏ ‏مُعَاذَ بْنَ جَبَلٍ ‏ ‏قُلْتُ لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ قَالَ ‏ ‏هَلْ تَدْرِي مَا حَقُّ اللَّهِ عَلَى الْعِبَادِ قَالَ قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ فَإِنَّ حَقَّ اللَّهِ عَلَى الْعِبَادِ أَنْ يَعْبُدُوهُ وَلَا يُشْرِكُوا بِهِ شَيْئًا ثُمَّ سَارَ سَاعَةً قَالَ يَا ‏ ‏مُعَاذَ بْنَ جَبَلٍ ‏ ‏قُلْتُ لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ قَالَ هَلْ تَدْرِي مَا حَقُّ الْعِبَادِ عَلَى اللَّهِ إِذَا فَعَلُوا ذَلِكَ قَالَ قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ أَنْ لَا يُعَذِّبَهُم

(ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களுடன் (வாகனத்தில்) இருந்தேன். எனக்கும் அவர்களுக்கும் இடையே (ஒட்டகச்) சேனத்துடன் இணைந்த சாய்வுக்கட்டைதான் இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “முஆத் பின் ஜபலே!” என்று அழைத்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)” என்றேன். சிறிது தூரம் சென்ற பின் (மீண்டும்) “முஆத் பின் ஜபலே!” என்று அழைத்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)” என்றேன். இன்னும் சிறிது தூரம் சென்ற பின் (மீண்டும்) “முஆத் பின் ஜபலே!” என்று அழைத்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)” என்றேன்.

நபி (ஸல்) அவர்கள், “அடியார்கள்மீது அல்லாஹ்வுக்கு உள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரோ?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், “அடியார்கள் மீது அல்லாஹ்வுக்கு உள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனையே வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணை கற்பிக்கக்கூடாது” என்றார்கள்.

இன்னும் சிறிது தூரம் சென்றபின் “முஆத் பின் ஜபலே!” என்று அழைத்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)” என்றேன். அவர்கள், “அவ்வாறு அல்லாஹ்வையே வழிபட்டு அவனுக்கு இணைவைக்காமல் செயல்பட்டு வரும் அடியார்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், (இத்தகைய அடியார்களை) அவன் (மறுமையில்) வேதனை செய்யாமல் இருப்பதுதான்!” என்று சொன்னார்கள்.

(முஆத் பின் ஜபல் வழியாக) அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

Share this Hadith:

Leave a Comment