அத்தியாயம்: 56, பாடம்: 7, ஹதீஸ் எண்: 5333

حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي هَاشِمٍ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ قَيْسِ بْنِ عُبَادٍ قَالَ :‏ ‏

سَمِعْتُ أَبَا ذَرٍّ، يُقْسِمُ قَسَمًا إِنَّ ‏{‏ هَذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ‏}‏ إِنَّهَا نَزَلَتْ فِي الَّذِينَ بَرَزُوا يَوْمَ بَدْرٍ حَمْزَةُ وَعَلِيٌّ وَعُبَيْدَةُ بْنُ الْحَارِثِ وَعُتْبَةُ وَشَيْبَةُ ابْنَا رَبِيعَةَ وَالْوَلِيدُ بْنُ عُتْبَةَ ‏


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، جَمِيعًا عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي هَاشِمٍ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ قَيْسِ بْنِ عُبَادٍ، قَالَ سَمِعْتُ أَبَا ذَرٍّ، يُقْسِمُ لَنَزَلَتْ ‏{‏ هَذَانِ خَصْمَانِ‏}‏ بِمِثْلِ حَدِيثِ هُشَيْمٍ ‏

“இவர்கள், தம் இறைவனின் (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக்கொண்ட இரு பிரிவினர் ஆவர்” (22:19) எனும் வசனம், பத்ருப் போரன்று (பொதுச் சண்டை நடைபெறுவதற்குமுன்) ஒற்றைக்கு ஒற்றை சண்டையில் (முஸ்லிம்கள் தரப்பில்) நின்று போராடிய, ஹம்ஸா, அலீ, உபைதா பின் அல்ஹாரிஸ் (ரலி) ஆகியோர் தொடர்பாகவும், (இணைவைப்பாளர்கள் தரப்பில்) ரபீஆவின் மகன்களான உத்பா, ஷைபா மற்றும் வலீத் பின் உத்பா ஆகியோர் தொடர்பாகவும் அருளப்பட்டது” என்று அபூதர் (ரலி) சத்தியமிட்டுக் கூறியதை நான் செவியுற்றேன்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) வழியாக கைஸ் பின் உபாத் (ரஹ்)

அல்ஹம்து லில்லாஹ்! ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம் நிறைவுற்றது!

அத்தியாயம்: 56, பாடம்: 6, ஹதீஸ் எண்: 5332

وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، أَخْبَرَنَا ابْنُ إِدْرِيسَ، حَدَّثَنَا أَبُو حَيَّانَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ :‏ ‏

سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، عَلَى مِنْبَرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ أَمَّا بَعْدُ أَيُّهَا النَّاسُ فَإِنَّهُ نَزَلَ تَحْرِيمُ الْخَمْرِ وَهْىَ مِنْ خَمْسَةٍ مِنَ الْعِنَبِ وَالتَّمْرِ وَالْعَسَلِ وَالْحِنْطَةِ وَالشَّعِيرِ وَالْخَمْرُ مَا خَامَرَ الْعَقْلَ وَثَلاَثٌ أَيُّهَا النَّاسُ وَدِدْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ عَهِدَ إِلَيْنَا فِيهِنَّ عَهْدًا نَنْتَهِي إِلَيْهِ الْجَدُّ وَالْكَلاَلَةُ وَأَبْوَابٌ مِنْ أَبْوَابِ الرِّبَا ‏


وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، كِلاَهُمَا عَنْ أَبِي حَيَّانَ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ بِمِثْلِ حَدِيثِهِمَا غَيْرَ أَنَّ ابْنَ عُلَيَّةَ فِي حَدِيثِهِ الْعِنَبِ ‏.‏ كَمَا قَالَ ابْنُ إِدْرِيسَ وَفِي حَدِيثِ عِيسَى الزَّبِيبِ ‏.‏ كَمَا قَالَ ابْنُ مُسْهِرٍ ‏

(என் தந்தை, கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது மிம்பர் மீதிருந்தபடி பின்வருமாறு கூறியதை நான் கேட்டேன்:

இறைவாழ்த்துக்குப்பின்! மக்களே! மது ஐந்து வகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் மதுபானத் தடை(ச் சட்டம் நடைமுறைக்கு) வந்தது. திராட்சைப் பழம், பேரீச்சம் பழம், தேன், தொலி நீக்கப்பட்ட கோதுமை (பார்லி), தொலி நீக்கப்படாத கோதுமை ஆகியவையே அப்பொருட்களாகும். (இவையன்றி) அறிவுக்குத் திரையிடக்கூடிய அனைத்தும் மதுவாகும்.

மக்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மூன்று விஷயங்கள் குறித்துத் தெளிவானதொரு முடிவை நமக்கு எடுத்துரைத்திருந்தால், நாம் தெளிவு பெற்றிருப்போம் என்று நான் விரும்பியதுண்டு. அவை:

  1. பாட்டனார். (அதாவது ஒருவருடைய சொத்தில் அவருக்குப் பெற்றோரோ மக்களோ இல்லாமல் சகோதரன் இருக்கும்போது பாட்டனாருக்கு எவ்வளவு பங்கு?)
  2. ’கலாலா’ (என்றால் என்ன?)
  3. வட்டியின் சில வகைகள் குறித்த சட்டம்

அறிவிப்பாளர் : – அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்புகள் :

இஸ்மாயீல் பின் உலய்யா (ரஹ்) வழி அறிவிப்பில், மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று (மது தயாரிக்கப்படும் பொருட்களில் ஒன்றாக) ’திராட்சை’ என்பது இடம்பெற்றுள்ளது;.

ஈஸா பின் யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பில் வேறொரு ஹதீஸில் இடம்பெற்றுள்ளதைப் போன்று ’உலர்ந்த திராட்சை’ என்று காணப்படுகிறது.

அத்தியாயம்: 56, பாடம்: 6, ஹதீஸ் எண்: 5331

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ أَبِي حَيَّانَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ :‏ ‏

خَطَبَ عُمَرُ عَلَى مِنْبَرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ أَمَّا بَعْدُ أَلاَ وَإِنَّ الْخَمْرَ نَزَلَ تَحْرِيمُهَا يَوْمَ نَزَلَ وَهْىَ مِنْ خَمْسَةِ أَشْيَاءَ مِنَ الْحِنْطَةِ وَالشَّعِيرِ وَالتَّمْرِ وَالزَّبِيبِ وَالْعَسَلِ ‏.‏ وَالْخَمْرُ مَا خَامَرَ الْعَقْلَ وَثَلاَثَةُ أَشْيَاءَ وَدِدْتُ أَيُّهَا النَّاسُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ عَهِدَ إِلَيْنَا فِيهَا الْجَدُّ وَالْكَلاَلَةُ وَأَبْوَابٌ مِنْ أَبْوَابِ الرِّبَا ‏

(என் தந்தை, கலீஃபா) உமர் (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது மிம்பர் மீதிருந்தபடி உரை நிகழ்த்தினார்கள். அப்போது அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:

இறைவாழ்த்துக்குப்பின்! கவனத்தில் கொள்ளுங்கள்! மது ஐந்து வகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டுவந்த நிலையில் மதுபானத் தடை(ச் சட்டம் நடைமுறைக்கு) வந்தது.

  1. தொலி நீக்கப்பட்ட கோதுமை (பார்லி),
  2. தொலி நீக்கப்படாத கோதுமை,
  3. பேரீச்சம் பழம்,
  4. உலர்ந்த திராட்சை,
  5. தேன் ஆகியவையே அந்த(ஐந்து)ப் பொருட்கள் ஆகும். (இவையன்றி,) அறிவுக்குத் திரையிடக்கூடிய அனைத்தும் மதுவாகும்.

மக்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மூன்று விஷயங்கள் குறித்துத் தெளிவானதொரு முடிவை நமக்கு எடுத்துரைத்துவிட்டு நம்மைப் பிரிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நான் விரும்பியதுண்டு:

  1. ஒருவரின் சொத்தில் (அவருக்குப் பெற்றோரோ மக்களோ இல்லாமல் சகோதரனும் பாட்டனும் இருக்கும்போது) அவருடைய பாட்டனாருக்கு எவ்வளவு பங்கு கிடைக்கும்?*
  2. ’கலாலா’ என்றால் என்ன?#
  3. சில வகை வட்டிகள் குறித்த சட்டம்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்புகள் :

*  இறந்துபோனவருக்குத் தந்தையும், தந்தையின் தந்தையான பாட்டனும் உயிருடனிருந்தால் இறந்தவரின் பாட்டனுக்குப் பங்கு கிடைக்காது. இறந்தவரின் தந்தை இறந்து, இறந்தவருக்குப் பிள்ளைகளும் பாட்டனும் உயிருடனிருந்தால் இறந்தவரின் சொத்தில் பாட்டனுக்கு 1/6 பங்கு உண்டு.

இறந்துபோனவருக்குப் பிள்ளைகள் இல்லையென்றால், இறந்தவரின் தாய்க்கு 1/3 பங்கும், மீதி பாட்டனுக்கும் கிடைக்கும்.

இறந்துபோனவருக்கு உடன்பிறந்த சகோதர்கள் இருந்தால், பெற்ற தாய்க்கு 1/6 பங்கும், மீதி பாட்டனுக்கும் கிடைக்கும்.

# கலாலா : முன்னுரிமை வாரிசுகளான தகப்பனும் பாட்டனும் பின்னுரிமை வாரிசுகளான பிள்ளைகளும் பேரன்களும் இல்லாமல் இறந்துபோனவருடைய சொத்துகள் ‘கலாலா’ எனப்படும். இறந்துபோனவர் ஆணாகவோ பெண்ணாகவோ இருந்து, அவரது சொத்து ‘கலாலா’வாக இருப்பின், அதிலிருந்து இறந்தவருடைய கடன்கள் கொடுத்துத் தீர்க்கப்பட்டு, வஸியத் எனும் மரண சாசனம் நிறைவேற்றிய பின்னர் எஞ்சியுள்ளதில் இறந்துபோனவருக்கு ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் மட்டுமிருந்தால் ஆளுக்கு 1/6 பங்கு கிடைக்கும். அதிகமான சகோதர-சகோதரிகளிருந்தால், 1/3 பங்கை, சமமாகப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும் (அல்குர்ஆன் 4:12).

இறந்துபோனவருக்குப் பிள்ளைகள் இல்லாமல், ஒரு சகோதரி மட்டுமிருந்தால் இறந்தவருடைய கடன்கள் கொடுத்துத் தீர்க்கப்பட்டு, வஸியத் எனும் மரண சாசனம் நிறைவேற்றிய பின்னர் எஞ்சியுள்ளதில், இறந்துபோனவரின் சகோதரிக்கு ½ பங்கு உண்டு.

இறந்துபோனவர் பிள்ளைகளில்லாத பெண்ணாக இருந்து, அவளுடைய கடன்கள் கொடுத்துத் தீர்க்கப்பட்டு, வஸியத் எனும் மரண சாசனம் நிறைவேற்றிய பின்னர் எஞ்சியுள்ள மொத்தச் சொத்துக்கும் இறந்துபோனவளின் சகோதரன் வாரிசாவான் (அல்குர்ஆன் 4:176).

அத்தியாயம்: 56, பாடம்: 5, ஹதீஸ் எண்: 5330

حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُطِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ :‏ ‏

قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ سُورَةُ التَّوْبَةِ قَالَ آلتَّوْبَةِ قَالَ بَلْ هِيَ الْفَاضِحَةُ مَا زَالَتْ تَنْزِلُ وَمِنْهُمْ وَمِنْهُمْ ‏.‏ حَتَّى ظَنُّوا أَنْ لاَ يَبْقَى مِنَّا أَحَدٌ إِلاَّ ذُكِرَ فِيهَا ‏.‏ قَالَ قُلْتُ سُورَةُ الأَنْفَالِ قَالَ تِلْكَ سُورَةُ بَدْرٍ ‏.‏ قَالَ قُلْتُ فَالْحَشْرُ قَالَ نَزَلَتْ فِي بَنِي النَّضِيرِ ‏

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ’அத்தவ்பா’ எனும் (9ஆவது) அத்தியாயம் பற்றிக் கேட்டேன். அவர்கள் ’தவ்பா அத்தியாயமா? அது (நயவஞ்சகர்களை) அம்பலப்படுத்தக்கூடிய அத்தியாயமாகும். அவர்களில் இத்தகையோரும், இத்தகையோரும் உள்ளனர் என (நயவஞ்சகர்களிலுள்ள எல்லாப் பிரிவினரையும் இனங்காட்டி) இவ்வத்தியாயம் இறங்கிக் கொண்டேயிருந்தது. எந்த அளவுக்கென்றால், நம்மில் ஒருவரைக்கூட விட்டுவைக்காமல் அனைத்துத் தரப்பினரைப் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுவிட்டது என நயவஞ்சகர்கள் எண்ணினார்கள்” என்று கூறினார்கள்.

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ’அல்அன்ஃபால்’ எனும் (8ஆவது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள் “அது பத்ருப் போர் (பற்றிப் பேசும்) அத்தியாயமாகும்” என்றார்கள்.

நான் ’அல்ஹஷ்ரு’ எனும் (59ஆவது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், “அது (யூத) பனூ நளீர் குலத்தார் குறித்து அருளப்பட்டதாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 56, பாடம்: 4, ஹதீஸ் எண்: 5329

وَحَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا حُسَيْنٌ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ، مَسْعُودٍ ‏{‏ أُولَئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَى رَبِّهِمُ الْوَسِيلَةَ‏}‏ قَالَ :‏ ‏

نَزَلَتْ فِي نَفَرٍ مِنَ الْعَرَبِ كَانُوا يَعْبُدُونَ نَفَرًا مِنَ الْجِنِّ فَأَسْلَمَ الْجِنِّيُّونَ وَالإِنْسُ الَّذِينَ كَانُوا يَعْبُدُونَهُمْ لاَ يَشْعُرُونَ فَنَزَلَتْ ‏{‏ أُولَئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَى رَبِّهِمُ الْوَسِيلَةَ‏}‏

“இந்த இணைவைப்பாளர்களால் (தெய்வங்களாக) அழைக்கப்படுகின்றவர்களும் தம்முடைய (உண்மையான) இறைவனின் நெருக்கத்தை அடைவதற்கான வழியைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்” எனும் (17:57) வசனம் தொடர்பாக,

”இந்த வசனம் அரபியரில் சிலர் தொடர்பாக அருளப்பெற்றது. அவர்கள் ’ஜின்’ இனத்தாரில் சிலரை வழிபட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், அந்த ’ஜின்’கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டனர். இதை உணராமல் அந்த (அரபு) மக்கள் அந்த ’ஜின்’களையே தொடர்ந்து வழிபட்டுக்கொண்டிருந்தனர். அப்போதுதான் இந்த வசனம் அருளப்பெற்றது” என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்)

அத்தியாயம்: 56, பாடம்: 4, ஹதீஸ் எண்: 5328

حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْعَبْدِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ ‏{‏ أُولَئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَى رَبِّهِمُ الْوَسِيلَةَ‏}‏ قَالَ :‏ ‏

كَانَ نَفَرٌ مِنَ الإِنْسِ يَعْبُدُونَ نَفَرًا مِنَ الْجِنِّ فَأَسْلَمَ النَّفَرُ مِنَ الْجِنِّ ‏.‏ وَاسْتَمْسَكَ الإِنْسُ بِعِبَادَتِهِمْ فَنَزَلَتْ ‏{‏ أُولَئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَى رَبِّهِمُ الْوَسِيلَةَ‏}‏


وَحَدَّثَنِيهِ بِشْرُ بْنُ خَالِدٍ، أَخْبَرَنَا مُحَمَّدٌ، – يَعْنِي ابْنَ جَعْفَرٍ – عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، بِهَذَا الإِسْنَادِ ‏

“இந்த இணைவைப்பாளர்களால் (தெய்வங்களாக) அழைக்கப்படுகின்றவர்களும் தம்முடைய (உண்மையான) இறைவனின் நெருக்கத்தை அடைவதற்கான வழியைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்” எனும் (17:57) வசனம் தொடர்பாக,

”மக்களில் சிலர் ’ஜின்’ இனத்தாரில் சிலரை வழிபட்டுவந்தனர். அப்போது அந்த ’ஜின்’கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். மக்கள் தங்களது (ஜின்) வழிபாட்டையே பலமாகப் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் இந்த 17:57ஆவது வசனம் அருளப்பெற்றது” என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) வழியாக அபூமஅமர் (ரஹ்)

அத்தியாயம்: 56, பாடம்: 4, ஹதீஸ் எண்: 5327

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ :‏ ‏

فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ ‏{‏ أُولَئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَى رَبِّهِمُ الْوَسِيلَةَ أَيُّهُمْ أَقْرَبُ‏}‏ قَالَ كَانَ نَفَرٌ مِنَ الْجِنِّ أَسْلَمُوا وَكَانُوا يُعْبَدُونَ فَبَقِيَ الَّذِينَ كَانُوا يَعْبُدُونَ عَلَى عِبَادَتِهِمْ وَقَدْ أَسْلَمَ النَّفَرُ مِنَ الْجِنِّ ‏

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “இந்த இணைவைப்பாளர்களால் (தெய்வங்களாக) அழைக்கப்படுகின்றவர்களும் தம்முடைய (உண்மையான) இறைவனின் நெருக்கத்தை அடைவதற்கான வழியைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்” எனும் (17:57) வசனத்திற்கு,

”(அன்றைய இணைவைப்பாளர்களால்) வழிபாடு செய்யப்பட்டுவந்த ’ஜின்’ இனத்தாரில் சிலர், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டனர். அவர்களை வழிபட்டுவந்த மக்கள் அவ்வழிபாட்டிலேயே நீடித்துக்கொண்டிருக்க, அந்த ’ஜின்’ இனத்தாரில் சிலர் இஸ்லாத்தை தழுவிவிட்டனர்” என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) வழியாக அபூமஅமர் (ரஹ்)

அத்தியாயம்: 56, பாடம்: 3, ஹதீஸ் எண்: 5326

وَحَدَّثَنِي أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ :‏ ‏

أَنَّ جَارِيَةً، لِعَبْدِ اللَّهِ بْنِ أُبَىٍّ ابْنِ سَلُولَ يُقَالُ لَهَا مُسَيْكَةُ وَأُخْرَى يُقَالُ لَهَا أُمَيْمَةُ فَكَانَ يُكْرِهُهُمَا عَلَى الزِّنَى فَشَكَتَا ذَلِكَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَنْزَلَ اللَّهُ ‏{‏ وَلاَ تُكْرِهُوا فَتَيَاتِكُمْ عَلَى الْبِغَاءِ‏}‏ إِلَى قَوْلِهِ ‏{‏ غَفُورٌ رَحِيمٌ‏}‏

அப்துல்லாஹ் பின் உபை பின் ஸலூலிடம், ’முஸைக்கா’, ’உமைமா’ எனப்படும் இரு அடிமைப் பெண்கள் இருந்தனர். அவன், அவ்விருவரையும் நிர்பந்தித்து விபசாரத்தில் ஈடுபடுத்திவந்தான். அவ்விரு (அடிமைப்) பெண்களும் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) அதைப் பற்றி முறையிட்டனர். அப்போதுதான், “உங்கள் (பொறுப்பிலுள்ள) பெண்களை விபசாரத்திற்கு நிர்பந்திக்காதீர்கள் …” என்று தொடங்கி, “… மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்பது வரையான (24:33) வசனங்களை அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 56, பாடம்: 3, ஹதீஸ் எண்: 5325

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ جَمِيعًا عَنْ أَبِي مُعَاوِيَةَ، – وَاللَّفْظُ لأَبِي كُرَيْبٍ – حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ قَالَ :‏ ‏

كَانَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ ابْنُ سَلُولَ يَقُولُ لِجَارِيَةٍ لَهُ اذْهَبِي فَابْغِينَا شَيْئًا فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{‏ وَلاَ تُكْرِهُوا فَتَيَاتِكُمْ عَلَى الْبِغَاءِ إِنْ أَرَدْنَ تَحَصُّنًا لِتَبْتَغُوا عَرَضَ الْحَيَاةِ الدُّنْيَا وَمَنْ يُكْرِهْهُنَّ فَإِنَّ اللَّهَ مِنْ بَعْدِ إِكْرَاهِهِنَّ‏}‏ لَهُنَّ ‏{‏ غَفُورٌ رَحِيمٌ‏}‏

அப்துல்லாஹ் பின் உபை பின் ஸலூல், தன் அடிமைப் பெண்ணிடம், “நீ சென்று விபசாரத்தில் ஈடுபட்டு எதையேனும் கொண்டு வா” என்று சொன்னான். அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “கற்பொழுக்கம் நாடும் உங்கள் பெண்களை இவ்வுலக வாழ்க்கையின் சாதனங்களைப் பெறுவதற்காக விபசாரத்துக்கு நிர்பந்திக்காதீர்கள். யாரேனும் அவர்களை நிர்பந்தித்தால் நிர்பந்திக்கப்பட்ட அப்பெண்களை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” எனும் (24:33) வசனத்தை அருளினான்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

அப்துல்லாஹ் பின் உபை பின் ஸலூல் என்பவன், இஸ்லாமிய வரலாற்றில் ’நயவஞ்சகர்களின் தலைவன்’ என்று குறிப்பிடப்படுபவனாவான்.

அத்தியாயம்: 56, பாடம்: 2, ஹதீஸ் எண்: 5324

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، ح وَحَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ، – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ مُسْلِمٍ الْبَطِينِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ :‏ ‏

كَانَتِ الْمَرْأَةُ تَطُوفُ بِالْبَيْتِ وَهِيَ عُرْيَانَةٌ فَتَقُولُ مَنْ يُعِيرُنِي تِطْوَافًا تَجْعَلُهُ عَلَى فَرْجِهَا وَتَقُولُ  : الْيَوْمَ يَبْدُو بَعْضُهُ أَوْ كُلُّهُ فَمَا بَدَا مِنْهُ فَلاَ أُحِلُّهُ فَنَزَلَتْ هَذِهِ الآيَةَ ‏{‏ خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ‏}‏

பெண்கள் (அறியாமைக் காலத்தில்) இறையில்லம் கஅபாவை நிர்வாணமாகச் சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருந்தனர். அப்போது அவர்கள், “தவாஃப் (செய்யத் தக்கத் தூய) ஆடையை இரவல் தருபவர் யார்?” என்று கேட்டு, (அதைப் பெற்றுத்) தமது இன உறுப்பின் மீது வைத்துக்கொண்டு,

“இன உறுப்பில்
சிறிதளவோ முழுவதுமோ
வெளிப்படும்
இந்நாள்.

இதை
எவரும் பார்க்க நான்
அனுமதிக்க மாட்டேன்”

என்று பாடுவார்கள். எனவேதான், “நீங்கள் தொழும் மஸ்ஜித்களில் உங்களை (உங்களது தூய ஆடைகளால்) அழகாக்கிக் கொள்ளுங்கள்” எனும் (7:31) இறைவசனம் அருளப்பெற்றது.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

தங்களது தூய்மையற்ற ஆடைகளோடு இறையில்லத்தை வலம் வரக்கூடாது என்ற எண்ணத்தில், தூய்மையான ஆடையைப் பிறரிடம்  இரவல் கேட்கும் பழக்கம் அக்காலப் பெண்களிடம் இருந்துள்ளது. தூய்மையான இரவல் ஆடை கிடைக்காத பெண்கள், நிர்வாணமாக இறையில்லத்தை வலம் வரும் வழக்கமும் நடைமுறையில் இருந்துள்ளது.