அத்தியாயம்: 15, பாடம்: 51, ஹதீஸ் எண்: 2288

‏و حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ حَنْبَلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَبْدِ الرَّحِيمِ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ الْحُصَيْنِ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ الْحُصَيْنِ ‏ ‏جَدَّتِهِ ‏ ‏قَالَتْ: ‏

‏حَجَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَجَّةَ الْوَدَاعِ فَرَأَيْتُ ‏ ‏أُسَامَةَ ‏ ‏وَبِلَالًا ‏ ‏وَأَحَدُهُمَا آخِذٌ ‏ ‏بِخِطَامِ ‏ ‏نَاقَةِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَالْآخَرُ رَافِعٌ ثَوْبَهُ يَسْتُرُهُ مِنْ الْحَرِّ حَتَّى رَمَى ‏ ‏جَمْرَةَ الْعَقَبَةِ ‏

قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏وَاسْمُ ‏ ‏أَبِي عَبْدِ الرَّحِيمِ خَالِدُ بْنُ أَبِي يَزِيدَ ‏ ‏وَهُوَ خَالُ ‏ ‏مُحَمَّدِ بْنِ سَلَمَةَ ‏ ‏رَوَى عَنْهُ ‏ ‏وَكِيعٌ ‏ ‏وَحَجَّاجٌ الْأَعْوَرُ

விடைபெறும் ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் ஹஜ் செய்தேன். உஸாமா (ரலி), பிலால் (ரலி) ஆகிய இருவரையும் நான் கண்டேன். அவர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களது ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார். மற்றவர் வெயில் படாமலிருக்கத் தமது ஆடையை உயர்த்திப் பிடித்து அவர்களை மறைத்துக் கொண்டிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘ஜம்ரத்துல் அகபா’வில் கல் எறியும்வரை (இவ்வாறு அவ்விருவரும் செய்துகொண்டிருந்தனர்).

அறிவிப்பாளர் : உம்முல் ஹுஸைன் (ரலி)


குறிப்பு :

“இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஅப்திர்ரஹீம் (ரஹ்) என்பவரது இயற்பெயர் காலித் பின் அபீயஸீத் என்பதாகும். அவர் முஹம்மது பின் ஸலமா (ரஹ்) அவர்களின் தாய்மாமன் ஆவார். அவரிடமிருந்து வகீஉ பின் அல்ஜர்ராஹ் (ரஹ்), ஹஜ்ஜாஜ் அல்அஃவர் (ரஹ்) ஆகியோர் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்” என்று ஸஹீஹ் முஸ்லிம் தொகுப்பாளாரான இமாம் முஸ்லிம் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 15, பாடம்: 51, ஹதீஸ் எண்: 2287

‏و حَدَّثَنِي ‏ ‏سَلَمَةُ بْنُ شَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ أَعْيَنَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْقِلٌ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ حُصَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏جَدَّتِهِ ‏ ‏أُمِّ الْحُصَيْنِ ‏ ‏قَالَ سَمِعْتُهَا تَقُولُ: ‏

‏حَجَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَجَّةَ الْوَدَاعِ فَرَأَيْتُهُ حِينَ رَمَى ‏ ‏جَمْرَةَ الْعَقَبَةِ ‏ ‏وَانْصَرَفَ وَهُوَ عَلَى ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏وَمَعَهُ ‏ ‏بِلَالٌ ‏ ‏وَأُسَامَةُ ‏ ‏أَحَدُهُمَا يَقُودُ بِهِ ‏ ‏رَاحِلَتَهُ ‏ ‏وَالْآخَرُ رَافِعٌ ثَوْبَهُ عَلَى رَأْسِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ الشَّمْسِ قَالَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَوْلًا كَثِيرًا ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ ‏ ‏إِنْ أُمِّرَ عَلَيْكُمْ عَبْدٌ ‏ ‏مُجَدَّعٌ ‏ ‏حَسِبْتُهَا قَالَتْ أَسْوَدُ ‏ ‏يَقُودُكُمْ بِكِتَابِ اللَّهِ تَعَالَى فَاسْمَعُوا لَهُ وَأَطِيعُوا

விடைபெறும் ஹஜ்ஜின்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தேன். அவர்கள் தமது வாகனத்தில் அமர்ந்தபடி ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறிந்துவிட்டுத் திரும்பிச் சென்றதை நான் கண்டேன். அப்போது அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களும் இருந்தனர். அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஒட்டகத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார். மற்றவர், வெயில் படாமலிருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலைக்கு மேல் தமது ஆடையை உயர்த்திப் பிடித்து(நிழலிட்டு)க் கொண்டிருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), நிறைய அறிவுரைகளைக் கூறினார்கள். “அல்லாஹ்வின் வேதத்தின்படி உங்களை வழி நடத்தக்கூடிய, உறுப்புகள் துண்டிக்கப்பட்ட, கருப்பு நிற அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக்கப்பட்டாலும் அவரது சொல்லைக் கேளுங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்” என்று அவர்கள் கூறியதையும் நான் செவியுற்றேன்.

அறிவிப்பாளர் : உம்முல் ஹுஸைன் பின்த் இஸ்ஹாக் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 51, ஹதீஸ் எண்: 2286

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عِيسَى بْنِ يُونُسَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ خَشْرَمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرًا ‏ ‏يَقُولُ: ‏

‏رَأَيْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَرْمِي عَلَى ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏يَوْمَ النَّحْرِ ‏ ‏وَيَقُولُ ‏ ‏لِتَأْخُذُوا ‏ ‏مَنَاسِكَكُمْ ‏ ‏فَإِنِّي لَا أَدْرِي لَعَلِّي لَا أَحُجُّ بَعْدَ حَجَّتِي هَذِهِ

நபி (ஸல்) நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் தமது வாகன ஒட்டகத்தில் அமர்ந்தவாறு (ஜம்ரத்துல் அகபாவின் மீது) கல் எறிவதை நான் கண்டேன். மேலும் அவர்கள், “நீங்கள் உங்களது ஹஜ்ஜின் கிரியைகளை (என்னிடமிருந்து) கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான், எனது இந்த ஹஜ்ஜிற்குப் பிறகு ஹஜ் (செய்வேனா,) செய்யமாட்டேனா என்பதை அறியமாட்டேன்” என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)