அத்தியாயம்: 2, பாடம்: 21, ஹதீஸ் எண்: 400

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِزُهَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ يَعْنِي ابْنَ عُلَيَّةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏رَوْحُ بْنُ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏
‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَتَبَرَّزُ لِحَاجَتِهِ ‏ ‏فَآتِيهِ بِالْمَاءِ ‏ ‏فَيَتَغَسَّلُ بِهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இயற்கைத் தேவைகளை முடிப்பதற்கு ஒதுக்குப்புறங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்காக நான் கொண்டு செல்லும் தண்ணீரால் (மல-ஜலம் கழித்தபின்) கழுவித் துப்புரவு செய்து கொள்வார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி).

அத்தியாயம்: 2, பாடம்: 21, ஹதீஸ் எண்: 399

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏وَغُنْدَرٌ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏يَقُولُا ‏
‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَدْخُلُ الْخَلَاءَ فَأَحْمِلُ أَنَا ‏ ‏وَغُلَامٌ ‏ ‏نَحْوِي إِدَاوَةً مِنْ مَاءٍ وَعَنَزَةً ‏ ‏فَيَسْتَنْجِي بِالْمَاءِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றால் நானும் என்னைப் போன்ற இன்னொரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய ஒரு தோல் பாத்திரத்தையும் கைத்தடி ஒன்றையும் உடன் கொண்டு செல்வோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இயற்கைக் கடனை நிறைவேற்றிய பின்) அந்தத் தண்ணீரால் துப்புரவு செய்வார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி).

அத்தியாயம்: 2, பாடம்: 21, ஹதீஸ் எண்: 398

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَخَلَ ‏ ‏حَائِطًا ‏ ‏وَتَبِعَهُ ‏ ‏غُلَامٌ ‏ ‏مَعَهُ ‏ ‏مِيضَأَةٌ ‏ ‏هُوَ أَصْغَرُنَا فَوَضَعَهَا عِنْدَ سِدْرَةٍ فَقَضَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَاجَتَهُ فَخَرَجَ عَلَيْنَا وَقَدْ ‏ ‏اسْتَنْجَى ‏ ‏بِالْمَاءِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மல-ஜலம் கழிக்க) ஒரு தோட்டத்திற்குள் சென்றபோது எங்களில் வயதில் சிறியவரான ஒருவர் தம்முடன் தண்ணீருள்ள பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்று, அதை ஓர் இலந்தை மரம் அருகே வைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைத் தேவைகளை முடித்தபின் அந்தத் தண்ணீரால் துப்புரவு செய்து விட்டு எங்களிடம் வந்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி).