அத்தியாயம்: 22, பாடம்: 13, ஹதீஸ் எண்: 2961

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي بَكْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ: ‏
بَلَغَ ‏ ‏عُمَرَ ‏ ‏أَنَّ ‏ ‏سَمُرَةَ ‏ ‏بَاعَ خَمْرًا فَقَالَ قَاتَلَ اللَّهُ ‏ ‏سَمُرَةَ ‏ ‏أَلَمْ يَعْلَمْ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَعَنَ اللَّهُ ‏ ‏الْيَهُودَ ‏ ‏حُرِّمَتْ عَلَيْهِمْ الشُّحُومُ ‏ ‏فَجَمَلُوهَا ‏ ‏فَبَاعُوهَا ‏


حَدَّثَنَا ‏ ‏أُمَيَّةُ بْنُ بِسْطَامَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحٌ يَعْنِي ابْنَ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

ஸமுரா பின் ஜுன்தப் (ரலி) மதுவை விற்றதாக உமர் (ரலி) அவர்களுக்குத் தகவல் கிடைத்தபோது, “அல்லாஹ் ஸமுராவை நாசமாக்கட்டும்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘யூதர்களுக்குக் கொழுப்புத் தடை செய்யப்பட்டபோது, அவர்கள் அதை உருக்கி விற்றனர். அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக!’ என்று கூறியதை அவர் அறியவில்லையா?” என வினவினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)