அத்தியாயம்: 44, பாடம்: 25, ஹதீஸ் எண்: 4500

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَخَذَ سَيْفًا يَوْمَ أُحُدٍ فَقَالَ ‏”‏ مَنْ يَأْخُذُ مِنِّي هَذَا ‏”‏ ‏.‏ فَبَسَطُوا أَيْدِيَهُمْ كُلُّ إِنْسَانٍ مِنْهُمْ يَقُولُ أَنَا أَنَا ‏.‏ قَالَ ‏”‏ فَمَنْ يَأْخُذُهُ بِحَقِّهِ ‏”‏ ‏.‏ قَالَ فَأَحْجَمَ الْقَوْمُ فَقَالَ سِمَاكُ بْنُ خَرَشَةَ أَبُو دُجَانَةَ أَنَا آخُذُهُ بِحَقِّهِ ‏.‏ قَالَ فَأَخَذَهُ فَفَلَقَ بِهِ هَامَ الْمُشْرِكِينَ ‏‏

உஹுதுப் போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வாள் ஒன்றை எடுத்து, “என்னிடமிருந்து இதைப் பெற்றுக்கொள்பவர் யார்?” என்று கேட்டார்கள். மக்களில் ஒவ்வொருவரும் “நான், நான்” எனத் தம் கைகளை நீட்டினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இதற்குரிய கடமை(யை நிறைவேற்றும் வாக்குறுதி)யுடன் இதை வாங்கிக்கொள்பவர் யார்?” என்று கேட்டார்கள். மக்கள் அனைவரும் பின்வாங்கினார்கள்.

அப்போது அபூதுஜானா ஸிமாக் பின் கரஷா (ரலி), “நான் அதற்குரிய கடமை(யை நிறைவேற்றும் வாக்குறுதி)யுடன் இதை வாங்கிக்கொள்கிறேன்” என்று கூறி, அதைப் பெற்றுச் சென்று, (போரில் எதிரணியிலிருந்த) இணைவைப்பாளர்களின் மண்டையைப் பிளந்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)