அத்தியாயம்: 1, பாடம்: 1.12, ஹதீஸ் எண்: 54

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏إِسْحَقَ وَهُوَ ابْنُ سُوَيْدٍ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا قَتَادَةَ ‏ ‏حَدَّثَ قَالَ ‏
‏كُنَّا عِنْدَ ‏ ‏عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ‏ ‏فِي رَهْطٍ مِنَّا وَفِينَا ‏ ‏بُشَيْرُ بْنُ كَعْبٍ ‏ ‏فَحَدَّثَنَا ‏ ‏عِمْرَانُ ‏ ‏يَوْمَئِذٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْحَيَاءُ خَيْرٌ كُلُّهُ قَالَ ‏ ‏أَوْ قَالَ الْحَيَاءُ كُلُّهُ خَيْرٌ ‏
‏فَقَالَ ‏ ‏بُشَيْرُ بْنُ كَعْبٍ ‏ ‏إِنَّا لَنَجِدُ فِي بَعْضِ الْكُتُبِ ‏ ‏أَوْ الْحِكْمَةِ ‏ ‏أَنَّ مِنْهُ سَكِينَةً وَوَقَارًا لِلَّهِ وَمِنْهُ ضَعْفٌ قَالَ فَغَضِبَ ‏ ‏عِمْرَانُ ‏ ‏حَتَّى احْمَرَّتَا عَيْنَاهُ وَقَالَ أَلَا أَرَانِي أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَتُعَارِضُ ‏ ‏فِيهِ قَالَ فَأَعَادَ ‏ ‏عِمْرَانُ ‏ ‏الْحَدِيثَ قَالَ فَأَعَادَ ‏ ‏بُشَيْرٌ ‏ ‏فَغَضِبَ ‏ ‏عِمْرَانُ ‏ ‏قَالَ فَمَا زِلْنَا نَقُولُ فِيهِ إِنَّهُ مِنَّا يَا ‏ ‏أَبَا نُجَيْدٍ ‏ ‏إِنَّهُ لَا بَأْسَ بِهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏النَّضْرُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو نَعَامَةَ الْعَدَوِيُّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏حُجَيْرَ بْنَ الرَّبِيعِ الْعَدَوِيَّ ‏ ‏يَقُولُ عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏حَمَّادِ بْنِ زَيْد

நாங்கள் ஒரு குழுவாக இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களுடன் இருந்தோம். எங்களிடையே புஷைர் பின் கஅப் (ரஹ்) அவர்களும் இருந்தார். அன்றைய தினம் இம்ரான் (ரலி) அவர்கள், “நாணம், முழுக்க முழுக்க நன்மையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என எங்களுக்கு அறிவித்தார்கள்.

அப்போது புஷைர் பின் கஅப் (ரஹ்) அவர்கள், “நாங்கள் ‘சில நூல்களில்’ அல்லது ‘தத்துவ(புத்தகத்)தில்’ அல்லாஹ்விற்காக மேற்கொள்ளப்படும் சில (வகை) நாணத்தில் நிம்மதியும் பெருமையும் இருக்கின்றன; பலவீனமும் உண்டு என்று (எழுதப்பட்டிருப்பதைக்) கண்டிருக்கிறோம்” என்று கூறினார்.

(இதைக் கேட்ட) இம்ரான் (ரலி) அவர்கள் தம் கண்கள் சிவக்கும் அளவிற்குக் கோபமடைந்தார்கள். “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நாணம் முழுக்க நன்மைதான் என்று) கூறியதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்களோ அதற்கு எதிர்கருத்துக் கூறுகிறீர்களே?” என்று சொல்லி விட்டுத் தாம் முன்பு சொன்ன ஹதீஸையே மீண்டும் சொன்னார்கள்.

புஷைரும் முன்பு தாம் சொன்னதையே மீண்டும் கூறினார். அப்போதும் இம்ரான் (ரலி) அவர்கள் கோபமடைந்தார்கள். நாங்கள், “அபூநுஜைதே! அவர் நம்மைச் சார்ந்தவர்தாம். அவரிடம் (கொள்கைக்) குறைபாடு ஏதுமில்லை” என்று கூறி (இம்ரான் அவர்களை சமாதானப்படுத்தி)க் கொண்டிருந்தோம்.

அறிவிப்பாளர் : அபூ கத்தாதா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.12, ஹதீஸ் எண்: 53

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ الْمُثَنَّى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا السَّوَّارِ ‏ ‏يُحَدِّثُ أَنَّهُ سَمِعَ ‏ ‏عِمْرَانَ بْنَ حُصَيْنٍ ‏ ‏يُحَدِّثُ ‏
‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏الْحَيَاءُ لَا يَأْتِي إِلَّا بِخَيْرٍ ‏
‏فَقَالَ ‏ ‏بُشَيْرُ بْنُ كَعْبٍ ‏ ‏إِنَّهُ مَكْتُوبٌ فِي ‏ ‏الْحِكْمَةِ ‏ ‏أَنَّ مِنْهُ ‏ ‏وَقَارًا ‏ ‏وَمِنْهُ سَكِينَةً فَقَالَ ‏ ‏عِمْرَانُ ‏ ‏أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَتُحَدِّثُنِي عَنْ صُحُفِكَ

“நன்மையைத் தவிர வேறெதையும் நாணம் தருவதில்லை” என்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதை இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) சொல்லிக் கொண்டிருந்தபோது, “நாணத்தில் கம்பீரமும் நிம்மதியும் உண்டு என்று ஞானநூல்களில் எழுதப் பட்டுள்ளது” என்று புஷைர் பின் கஅப் என்பார் குறுக்கிட்டுக் கூறினார்.

“நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொல்லைக் கூறுகிறேன்; நீங்கள் ஏடுகளில் உள்ளவற்றைச் சொல்லிக் காட்டுகிறீர்களே!” என்று இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவரைக் கடிந்து கொண்டார்கள்.

அறிவிப்பாளர் : அபுஸ் ஸவ்வார் (ரஹ்)

அத்தியாயம்: 1, பாடம்: 1.12, ஹதீஸ் எண்: 52

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏
‏سَمِعَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَجُلًا يَعِظُ أَخَاهُ فِي الْحَيَاءِ فَقَالَ ‏ ‏الْحَيَاءُ مِنْ الْإِيمَانِ ‏
‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَقَالَ مَرَّ بِرَجُلٍ مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏يَعِظُ أَخَاهُ

நாணம் கொள்வது குறித்து ஒருவர் தம் சகோதரருக்கு அறிவுரை கூறிக் கொண்டிருந்ததைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள், “நாணம் என்பது இறை நம்பிக்கையைச் சார்ந்ததாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸாலிம் (ரஹ்) தம் தந்தை இபுனு உமர் (ரலி) வழியாக…


குறிப்பு :

ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள்வழி அறிவிப்பில், அந்தச் சகோதரர்கள் அன்ஸாரீகள் ஆவர் என்ற குறிப்புடன் ஹதீஸ் தொடங்குகிறது.

அத்தியாயம்: 1, பாடம்: 1.12, ஹதீஸ் எண்: 51

حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْإِيمَانُ ‏ ‏بِضْعٌ ‏ ‏وَسَبْعُونَ ‏ ‏أَوْ بِضْعٌ وَسِتُّونَ ‏ ‏شُعْبَةً ‏ ‏فَأَفْضَلُهَا ‏ ‏قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَدْنَاهَا ‏ ‏إِمَاطَةُ ‏ ‏الْأَذَى ‏ ‏عَنْ الطَّرِيقِ وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنْ الْإِيمَانِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“இறைநம்பிக்கை என்பது எழுபதுக்கும் அதிகமான – அல்லது – அறுபதுக்கும் அதிகமான உட்பிரிவுகளைக் கொண்டதாகும். அவற்றில் மிக உயர்ந்தது, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறில்லை என்ற கூற்றாகும். அவற்றில் ஆகத் தாழ்ந்தது, நடைபாதையில் கிடக்கும் (முள் போன்ற) தொல்லை தருவதைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு பிரிவே!”

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.12, ஹதீஸ் எண்: 50

حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏
‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏الْإِيمَانُ ‏ ‏بِضْعٌ ‏ ‏وَسَبْعُونَ ‏ ‏شُعْبَةً ‏ ‏وَالْحَيَاءُ ‏ ‏شُعْبَةٌ ‏ ‏مِنْ الْإِيمَانِ

“இறைநம்பிக்கை (ஈமான்) என்பது எழுபதுக்கும் அதிகமான உட்பிரிவுகளைக் கொண்டதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு பிரிவாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)