அத்தியாயம்: 13, பாடம்: 15, ஹதீஸ் எண்: 1885

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ الْأَحْمَرُ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏خَرَجْتُ فَصُمْتُ فَقَالُوا لِي أَعِدْ قَالَ فَقُلْتُ إِنَّ ‏ ‏أَنَسًا ‏ ‏أَخْبَرَنِي ‏

‏أَنَّ ‏ ‏أَصْحَابَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانُوا ‏ ‏يُسَافِرُونَ فَلَا يَعِيبُ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ وَلَا الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ ‏

‏فَلَقِيتُ ‏ ‏ابْنَ أَبِي مُلَيْكَةَ ‏ ‏فَأَخْبَرَنِي عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏بِمِثْلِهِ

நான் (பயணம்) புறப்பட்டேன். நோன்பு நோற்றிருந்தேன். அப்போது மக்கள் என்னிடம், “(பயணத்தில் நோன்பு நோற்காதீர்) பின்னர் (ஊர் திரும்பிய பின்) நோற்றுக்கொள்ளுங்கள்!” என்றார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் பயணம் செய்யும்போது (சிலர் நோன்பு நோற்பர். சிலர் நோற்பதில்லை. அப்போது) நோன்பு நோற்றவர் நோன்பு நோற்காதவரையோ, நோன்பு நோற்காதவர் நோன்பு நோற்றவரையோ குறை கூறமாட்டார்” என என்னிடம் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்றேன்.

பின்னர் நான் இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது “மேற்கண்டவாறுதான் ஆயிஷா (ரலி) என்னிடம் அறிவித்தார்கள்” என்று கூறினார்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக ஹுமைத் பின் அபீஹுமைத் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 15, ஹதீஸ் எண்: 1884

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدٍ ‏ ‏قَالَ ‏

‏سُئِلَ ‏ ‏أَنَسٌ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏عَنْ صَوْمِ رَمَضَانَ فِي السَّفَرِ فَقَالَ ‏ ‏سَافَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي رَمَضَانَ فَلَمْ يَعِبْ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ وَلَا الْمُفْطِرُ عَلَى الصَّائِم

அனஸ் (ரலி) அவர்களிடம், ரமளானில் பயணத்தின்போது நோன்பு நோற்பது குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ரமளானில் பயணம் செய்தோம். அப்போது. நோன்பு நோற்றவர் நோன்பு நோற்காதவரையோ, நோன்பு நோற்காதவர் நோன்பு நோற்றவரையோ குறை கூறியதில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக ஹுமைத் பின் அபீஹுமைத் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 15, ஹதீஸ் எண்: 1883

حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ عَمْرٍو الْأَشْعَثِيُّ ‏ ‏وَسَهْلُ بْنُ عُثْمَانَ ‏ ‏وَسُوَيْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَحُسَيْنُ بْنُ حُرَيْثٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏مَرْوَانَ ‏ ‏قَالَ ‏ ‏سَعِيدٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا نَضْرَةَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمْ ‏ ‏قَالَا ‏

‏سَافَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَيَصُومُ الصَّائِمُ وَيُفْطِرُ الْمُفْطِرُ فَلَا يَعِيبُ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் பயணம் செய்துள்ளோம். அப்போது, (எங்களில்) நோற்பாளிகளும் நோன்பு நோற்காதவர்களும் இருந்தனர். இவர்களில் யாரும் மற்றவரைக் குறை கூற மாட்டார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) & ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 15, ஹதீஸ் எண்: 1882

حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْجُرَيْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏كُنَّا ‏ ‏نَغْزُو مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي رَمَضَانَ فَمِنَّا الصَّائِمُ وَمِنَّا الْمُفْطِرُ فَلَا يَجِدُ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ وَلَا الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ يَرَوْنَ أَنَّ مَنْ وَجَدَ قُوَّةً فَصَامَ فَإِنَّ ذَلِكَ حَسَنٌ وَيَرَوْنَ أَنَّ مَنْ وَجَدَ ضَعْفًا فَأَفْطَرَ فَإِنَّ ذَلِكَ حَسَنٌ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இணைந்து ரமளான் மாதத்தில் போர் புரிந்திருக்கிறோம். எங்களில் நோன்பு நோற்றவரும் இருந்தார்; நோன்பு நோற்காதவரும் இருந்தார். நோன்பு நோற்றவர் நோன்பு நோற்காதவர்மீதோ, நோன்பு நோற்காதவர் நோன்பு நோற்றவர்மீதோ அதிருப்தி கொள்ளமாட்டார். (பயணத்தில்) சக்தி இருப்பவர் நோன்பு நோற்றால் அது நன்று; பலவீனம் உள்ளவர் நோன்பை விட்டால் அதுவும் நன்றே என்றுதான் நபித்தோழர்கள் கருதினர்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 15, ஹதீஸ் எண்: 1881

حَدَّثَنَا ‏ ‏نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بِشْرٌ يَعْنِي ابْنَ مُفَضَّلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَسْلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏كُنَّا ‏ ‏نُسَافِرُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي رَمَضَانَ فَمَا يُعَابُ عَلَى الصَّائِمِ صَوْمُهُ وَلَا عَلَى الْمُفْطِرِ إِفْطَارُهُ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ரமளான் மாதத்தில் பயணம் செய்திருக்கின்றோம். அப்போது நோன்பு நோற்றவர் நோற்றதற்காகவோ, நோன்பு நோற்காதவர் நோற்காததற்காகவோ குறை கூறப்படவில்லை.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 15, ஹதீஸ் எண்: 1880

حَدَّثَنَا ‏ ‏هَدَّابُ بْنُ خَالِدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامُ بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قَتَادَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِسِتَّ عَشْرَةَ مَضَتْ مِنْ رَمَضَانَ فَمِنَّا مَنْ صَامَ وَمِنَّا مَنْ أَفْطَرَ فَلَمْ يَعِبْ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ وَلَا الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ ‏

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏التَّيْمِيِّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ مَهْدِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏ح ‏ ‏وَقَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَامِرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏وَقَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَالِمُ بْنُ نُوحٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُمَرُ يَعْنِي ابْنَ عَامِرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏هَمَّامٍ ‏ ‏غَيْرَ أَنَّ فِي حَدِيثِ ‏ ‏التَّيْمِيِّ ‏ ‏وَعُمَرَ بْنِ عَامِرٍ ‏ ‏وَهِشَامٍ ‏ ‏لِثَمَانَ عَشْرَةَ خَلَتْ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏سَعِيدٍ ‏ ‏فِي ثِنْتَيْ عَشْرَةَ ‏ ‏وَشُعْبَةَ ‏ ‏لِسَبْعَ عَشْرَةَ ‏ ‏أَوْ تِسْعَ عَشْرَةَ

நாங்கள் ரமளான் மாதம் பதினாறாவது நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து போர் புரிந்தோம். அப்போது எங்களில் சிலர் நோன்பு நோற்றிருந்தனர். வேறு சிலர் நோன்பு நோற்காமலிருந்தனர். அப்போது நோன்பு நோற்றிருந்தவர் நோன்பு நோற்காதவரையோ, நோன்பு நோற்காதவர் நோன்பு நோற்றவரையோ குறை சொல்லவில்லை.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

குறிப்பு : ஸுலைமான் பின் தர்கான் அத்தைமீ, உமர் பின் ஆமிர், ஹிஷாம் பின் அபீஅப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் “(ரமளான் மாதம்) பதினெட்டாவது நாளில்” என்றும், ஸஈத் பின் அபீஅரூபா (ரஹ்) அறிவிப்பில் “பன்னிரண்டாவது நாளில்” என்றும், ஷுஅபா (ரஹ்) அறிவிப்பில் “பதினேழாவது நாளில், அல்லது பத்தொன்பதாவது நாளில்” என்றும் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 13, பாடம்: 15, ஹதீஸ் எண்: 1879

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏غُنْدَرٌ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ الْحَسَنِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي سَفَرٍ فَرَأَى رَجُلًا قَدْ اجْتَمَعَ النَّاسُ عَلَيْهِ وَقَدْ ظُلِّلَ عَلَيْهِ فَقَالَ مَا لَهُ قَالُوا رَجُلٌ صَائِمٌ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيْسَ مِنْ الْبِرِّ أَنْ تَصُومُوا فِي السَّفَرِ ‏

‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُحَمَّدَ بْنَ عَمْرِو بْنِ الْحَسَنِ ‏ ‏يُحَدِّثُ أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يَقُولُا ‏ ‏رَأَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَجُلًا ‏ ‏بِمِثْلِهِ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏أَحْمَدُ بْنُ عُثْمَانَ النَّوْفَلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو دَاوُدَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ وَزَادَ ‏ ‏قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏وَكَانَ يَبْلُغُنِي عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏أَنَّهُ كَانَ يَزِيدُ فِي هَذَا الْحَدِيثِ وَفِي هَذَا الْإِسْنَادِ أَنَّهُ قَالَ عَلَيْكُمْ بِرُخْصَةِ اللَّهِ الَّذِي رَخَّصَ لَكُمْ قَالَ فَلَمَّا سَأَلْتُهُ لَمْ يَحْفَظْهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு பயணத்தில் இருந்தபோது, ஒருவர் நிழலில் தங்கவைக்கப்பட்டு, அவரைச் சுற்றிலும் மக்கள் குழுமியிருந்ததைக் கண்டு, “இவருக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “இவர் நோன்பு நோற்றிருக்கிறார்” என்று மக்கள் கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “பயணத்தில் நீங்கள் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

குறிப்பு : முஹம்மது பின் அம்ருல் ஹஸன் (ரஹ்) வழி அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கண்டார்கள் …” என்று தொடங்குகிறது.

யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்), “அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள சலுகையைப் பயன் படுத்திக்கொள்ளுங்கள்” என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என) அதிகப்படியாக அறிவித்தார்கள். அது பற்றி அவர்களிடம் நான் கேட்டபோது, அது அவர்களது நினைவில் இருக்கவில்லை என்று ஷுஅபா (ரஹ்) கூறியுள்ளார்.

அத்தியாயம்: 13, பாடம்: 15, ஹதீஸ் எண்: 1878

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ يَعْنِي ابْنَ عَبْدِ الْمَجِيدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَعْفَرٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَرَجَ عَامَ الْفَتْحِ إِلَى ‏ ‏مَكَّةَ ‏ ‏فِي رَمَضَانَ فَصَامَ حَتَّى بَلَغَ ‏ ‏كُرَاعَ الْغَمِيمِ ‏ ‏فَصَامَ النَّاسُ ثُمَّ دَعَا بِقَدَحٍ مِنْ مَاءٍ فَرَفَعَهُ حَتَّى نَظَرَ النَّاسُ إِلَيْهِ ثُمَّ شَرِبَ فَقِيلَ لَهُ بَعْدَ ذَلِكَ إِنَّ بَعْضَ النَّاسِ قَدْ صَامَ فَقَالَ ‏ ‏أُولَئِكَ الْعُصَاةُ أُولَئِكَ الْعُصَاةُ ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَزَادَ فَقِيلَ لَهُ إِنَّ النَّاسَ قَدْ شَقَّ عَلَيْهِمْ الصِّيَامُ وَإِنَّمَا يَنْظُرُونَ فِيمَا فَعَلْتَ فَدَعَا بِقَدَحٍ مِنْ مَاءٍ بَعْدَ الْعَصْرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்கா வெற்றி ஆண்டில் ரமளான் மாதத்தில் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றார்கள். மக்களும் அவர்களுடன் நோன்பு நோற்றனர். ‘குராஉல் ஃகமீம்’ எனும் இடத்தை அடைந்ததும் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டுவரச் சொல்லி மக்கள் பார்க்கும் அளவுக்கு உயர்த்திக் காட்டிய பின் அருந்தினார்கள். அதன் பிறகு அவர்களிடம், “மக்களில் சிலர் நோன்புடனேயே இருக்கின்றனர்” என்று சொல்லப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இத்தகையோரே (எனக்கு) மாறு செய்பவர்கள்; இத்தகையோரே (எனக்கு) மாறு செய்பவர்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

குறிப்பு : குதைபா பின் ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பில் “மக்களுக்கு நோன்பு நோற்பது சிரமமாக இருக்கிறது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லப்பட்டது. எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அஸ்ருத் தொழுகைக்குப் பின் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டுவரச் சொன்னார்கள்” என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 13, பாடம்: 15, ஹதீஸ் எண்: 1877

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْكَرِيمِ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏

‏لَا تَعِبْ عَلَى مَنْ صَامَ وَلَا عَلَى مَنْ أَفْطَرَ قَدْ صَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي السَّفَرِ وَأَفْطَرَ

பயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்; விட்டவரையும் குறை கூறாதீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பயணத்தில் நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்; விட்டும் இருக்கிறார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 15, ஹதீஸ் எண்: 1876

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏مُجَاهِدٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏

‏سَافَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي رَمَضَانَ فَصَامَ حَتَّى بَلَغَ ‏ ‏عُسْفَانَ ‏ ‏ثُمَّ دَعَا بِإِنَاءٍ فِيهِ شَرَابٌ فَشَرِبَهُ نَهَارًا لِيَرَاهُ النَّاسُ ثُمَّ أَفْطَرَ حَتَّى دَخَلَ ‏ ‏مَكَّةَ ‏

‏قَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏فَصَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَفْطَرَ فَمَنْ شَاءَ صَامَ وَمَنْ شَاءَ أَفْطَرَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ரமளான் மாதத்தில் (மதீனாவிலிருந்து மக்காவிற்குப்) பயணம் மேற்கொண்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். “உஸ்ஃபான்’ எனும் இடத்தை அடைந்ததும் குடிநீருள்ள பாத்திரத்தைக் கொண்டுவரச் சொல்லி, மக்கள் காணும்படி பகல் நேரத்திலேயே அதை அருந்தி நோன்பை விட்டார்கள். இறுதியில் மக்காவிற்குள் நுழை(யும்வரை நோன்பு நோற்கமாலேயே இரு)ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (பயணத்தில்) நோன்பு நோற்றும் இருக்கின்றார்கள்; நோன்பை விட்டும் இருக்கின்றார்கள். எனவே, (நோன்பு நோற்க) விரும்புகின்றவர் நோன்பு நோற்கலாம்; (விட்டுவிட) விரும்புகின்றவர் விட்டுவிடலாம்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)