அத்தியாயம்: 13, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1893

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُثْمَانَ بْنِ حَيَّانَ الدِّمَشْقِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ الدَّرْدَاءِ ‏ ‏قَالَتْ ‏

‏قَالَ ‏ ‏أَبُو الدَّرْدَاءِ ‏ ‏لَقَدْ رَأَيْتُنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي بَعْضِ أَسْفَارِهِ فِي يَوْمٍ شَدِيدِ الْحَرِّ حَتَّى إِنَّ الرَّجُلَ لَيَضَعُ يَدَهُ عَلَى رَأْسِهِ مِنْ شِدَّةِ الْحَرِّ وَمَا مِنَّا أَحَدٌ صَائِمٌ إِلَّا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَعَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மேற்கொண்ட பயணமொன்றில் கடுமையான வெப்பமுள்ள நாளில் அவர்களுடன் நாங்களும் இருந்தோம். கடும் வெப்பத்தின் காரணமாக சிலர் தமது கையைத் தமது தலைமீது வைத்துக்கொண்டனர். அப்(பயணத்தின்)போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களையும் தவிர வேறு யாரும் நோன்பு நோற்றிருக்கவில்லை.

அறிவிப்பாளர் : அபுத்தர்தா (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1892

حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ بْنُ رُشَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ الدَّرْدَاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الدَّرْدَاءِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي شَهْرِ رَمَضَانَ فِي حَرٍّ شَدِيدٍ حَتَّى إِنْ كَانَ أَحَدُنَا لَيَضَعُ يَدَهُ عَلَى رَأْسِهِ مِنْ شِدَّةِ الْحَرِّ وَمَا فِينَا صَائِمٌ إِلَّا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَعَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ரமளான் மாதத்தில் கடுமையான வெப்பத்தில் (பயணம்) புறப்பட்டோம். கடும் வெப்பம் காரணமாக எங்களில் சிலர் தமது கையைத் தமது தலைமீது வைத்துக்கொண்டனர். அப்(பயணத்தின்)போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களையும் தவிர எங்களில் வேறு யாரும் நோன்பு நோற்றிருக்கவில்லை.

அறிவிப்பாளர் : அபுத்தர்தா (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1891

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَهَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏قَالَ ‏ ‏هَارُونُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏و قَالَ ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُرَاوِحٍ ‏ ‏عَنْ ‏ ‏حَمْزَةَ بْنِ عَمْرٍو الْأَسْلَمِيِّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏

‏أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ أَجِدُ بِي قُوَّةً عَلَى الصِّيَامِ فِي السَّفَرِ فَهَلْ عَلَيَّ جُنَاحٌ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هِيَ رُخْصَةٌ مِنْ اللَّهِ فَمَنْ أَخَذَ بِهَا فَحَسَنٌ وَمَنْ أَحَبَّ أَنْ يَصُومَ فَلَا جُنَاحَ عَلَيْهِ ‏

‏قَالَ ‏ ‏هَارُونُ ‏ ‏فِي حَدِيثِهِ هِيَ رُخْصَةٌ وَلَمْ يَذْكُرْ مِنْ اللَّهِ

நான், “அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் நோன்பு நோற்க எனக்குச் சக்தி உண்டு என உணர்கிறேன். (பயணத்தில் நான் நோன்பு நோற்பது) என்மீது குற்றமாகுமா?” என்று கேட்டேன். அதற்கு, “இது அல்லாஹ்விடமிருந்து (வந்துள்ள) சலுகையாகும். யார் அதைப் பயன்படுத்திக்கொள்கிறாரோ அது நல்லதே. (பயணத்தில்) நோன்பு நோற்க விரும்புகின்றவர் மீதும் குற்றம் இல்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஹம்ஸா பின் அம்ரு அல்அஸ்லமீ (ரலி)

குறிப்பு : ஹாரூன் பின் ஸஈத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “இது சலுகையாகும்” என்றே இடம்பெற்றுள்ளது. “அல்லாஹ்விடமிருந்து’ எனும் குறிப்பு இல்லை.

அத்தியாயம்: 13, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1890

و حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ وَهُوَ ابْنُ زَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏
‏أَنَّ ‏ ‏حَمْزَةَ بْنَ عَمْرٍو الْأَسْلَمِيَّ ‏ ‏سَأَلَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي رَجُلٌ ‏ ‏أَسْرُدُ الصَّوْمَ ‏ ‏أَفَأَصُومُ فِي السَّفَرِ قَالَ ‏ ‏صُمْ إِنْ شِئْتَ وَأَفْطِرْ إِنْ شِئْتَ ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَ حَدِيثِ ‏ ‏حَمَّادِ بْنِ زَيْدٍ ‏ ‏إِنِّي رَجُلٌ ‏ ‏أَسْرُدُ الصَّوْمَ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏وَقَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏أَنَّ ‏ ‏حَمْزَةَ ‏ ‏قَالَ إِنِّي رَجُلٌ أَصُومُ أَفَأَصُومُ فِي السَّفَرِ

ஹம்ஸா பின் அம்ரு அல்அஸ்லமீ (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் அடுத்தடுத்து நோன்பு நோற்பவன் ஆவேன். பயணத்திலும் நான் நோன்பு நோற்கலாமா?” என்று கேட்டார்கள். அதற்கு, “நாடினால் நோன்பு நோற்பீராக! நாடினால் நோன்பை விட்டுவிடுவீராக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு : அபூமுஆவியா (ரஹ்) வழி அறிவிப்பு,“நான் அடுத்தடுத்து நோன்பு நோற்பவன் ஆவேன். பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா?” என்று ஹம்ஸா பின் அம்ரு (ரலி) கேட்டார்கள் எனத் தொடங்குகிறது.

அத்தியாயம்: 13, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1889

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏

‏سَأَلَ ‏ ‏حَمْزَةُ بْنُ عَمْرٍو الْأَسْلَمِيُّ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ الصِّيَامِ فِي السَّفَرِ فَقَالَ ‏ ‏إِنْ شِئْتَ فَصُمْ وَإِنْ شِئْتَ فَأَفْطِرْ

ஹம்ஸா பின் அம்ரு அல்அஸ்லமீ (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பயணத்தில் நோன்பு நோற்பது குறித்துக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீர் நாடினால் நோன்பு நோற்கலாம்; நாடினால் நோன்பை விட்டுவிடலாம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)