அத்தியாயம்: 15, பாடம்: 15.15, ஹதீஸ் எண்: 2105

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَأَبُو أَيُّوبَ الْغَيْلَانِيُّ ‏ ‏وَأَحْمَدُ بْنُ خِرَاشٍ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَامِرٍ وَهُوَ عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَبَاحٌ وَهُوَ ابْنُ أَبِي مَعْروفٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏
‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لِضُبَاعَةَ ‏ ‏حُجِّي وَاشْتَرِطِي أَنَّ مَحِلِّي حَيْثُ ‏ ‏تَحْبِسُنِي ‏

‏وَفِي رِوَايَةِ ‏ ‏إِسْحَقَ ‏ ‏أَمَرَ ‏ ‏ضُبَاعَةَ

நபி (ஸல்), ளுபாஆ (ரலி) அவர்களிடம், “நீ ஹஜ்ஜுக்காக முன் நிபந்தனையுடன், ‘(இறைவா!) நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜுக் கடமை செயல்பாடுகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்’ என்று கூறிவிடு!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு : இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) வழி அறிவிப்பில் “நபி (ஸல்), ளுபாஆ (ரலி) அவர்களிடம் (மேற்கண்டவாறு) உத்தரவிட்டார்கள்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 15.15, ஹதீஸ் எண்: 2104

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَبِيبُ بْنُ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ هَرِمٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏وَعِكْرِمَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏

‏أَنَّ ‏ ‏ضُبَاعَةَ ‏ ‏أَرَادَتْ الْحَجَّ ‏ ‏فَأَمَرَهَا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ تَشْتَرِطَ فَفَعَلَتْ ذَلِكَ عَنْ أَمْرِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

ளுபாஆ (ரலி) ஹஜ் செய்ய விரும்பியபோது, அவருக்கு முன் நிபந்தனை இட்டுக் கொள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உத்தரவிட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுக்கிணங்க அவ்வாறே அவர் (முன் நிபந்தனையுடன் ஹஜ்) செய்து முடித்தார்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.15, ஹதீஸ் எண்: 2103

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ ‏ ‏وَأَبُو عَاصِمٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏طَاوُسًا ‏ ‏وَعِكْرِمَةَ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏

‏أَنَّ ‏ ‏ضُبَاعَةَ بِنْتَ الزُّبَيْرِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏أَتَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ إِنِّي امْرَأَةٌ ثَقِيلَةٌ وَإِنِّي أُرِيدُ الْحَجَّ فَمَا تَأْمُرُنِي قَالَ ‏ ‏أَهِلِّي بِالْحَجِّ وَاشْتَرِطِي أَنَّ مَحِلِّي حَيْثُ ‏ ‏تَحْبِسُنِي ‏ ‏قَالَ ‏ ‏فَأَدْرَكَتْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ளுபாஆ பின்த்தி அஸ்ஸுபைர் பின் அப்தில் முத்தலிப் (ரலி) வந்து, “எனக்கு (நோய் ஏற்பட்டு) உடல் கனத்துவிட்டது. நான் ஹஜ் செய்ய விரும்புகின்றேன். தாங்கள் எனக்கு என்ன உத்தரவிடுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக தல்பியாக் கூறி, ‘(இறைவா!) நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜுக் கடமை செயல்பாடுகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்’ என்று கூறிவிடு!” என்றார்கள்.

எனினும் ளுபாஆ (ரலி) (தடையின்றி) ஹஜ்ஜை நிறைவேற்றினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.15, ஹதீஸ் எண்: 2102

و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏دَخَلَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏ضُبَاعَةَ بِنْتِ الزُّبَيْرِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرِيدُ الْحَجَّ وَأَنَا ‏ ‏شَاكِيَةٌ ‏ ‏فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حُجِّي وَاشْتَرِطِي أَنَّ مَحِلِّي حَيْثُ ‏ ‏حَبَسْتَنِي ‏

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏مِثْلَهُ

நபி (ஸல்), ளுபாஆ பின்த்தி அஸ்ஸுபைர் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் ஹஜ் செய்ய விரும்புகிறேன். ஆனால், நான் நோயாளியாக இருக்கிறேன்” என்றார்.

அதற்கு நபி (ஸல்), “நீ முன் நிபந்தனையிட்டு ‘(இறைவா!) நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜுக் கடமை செயல்களைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்’ என்று கூறிவிடு!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.15, ஹதீஸ் எண்: 2101

حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ الْهَمْدَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏دَخَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏ضُبَاعَةَ بِنْتِ الزُّبَيْرِ ‏ ‏فَقَالَ لَهَا أَرَدْتِ الْحَجَّ قَالَتْ وَاللَّهِ مَا أَجِدُنِي إِلَّا وَجِعَةً فَقَالَ لَهَا ‏ ‏حُجِّي وَاشْتَرِطِي وَقُولِي ‏ ‏اللَّهُمَّ مَحِلِّي حَيْثُ ‏ ‏حَبَسْتَنِي ‏ ‏وَكَانَتْ تَحْتَ ‏ ‏الْمِقْدَادِ

ளுபாஆ பின்த்தி அஸ்ஸுபைர் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சென்று, “நீ ஹஜ் செய்ய விரும்புகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்னும் நோயாளியாக இருக்கிறேன்” என்று சொன்னார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவரிடம், “நீ ஹஜ்ஜுக்காக முன் நிபந்தனையிட்டு, ‘இறைவா, நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜுக் கடமை செயற்பாடுகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்’ என்று கூறிவிடு!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு : ளுபாஆ (ரலி), மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களுடைய துணைவி ஆவார்.