அத்தியாயம்: 15, பாடம்: 15.02, ஹதீஸ் எண்: 2028

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏رَوْحُ بْنُ عُبَادَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يُسْأَلُ عَنْ الْمُهَلِّ فَقَالَ سَمِعْتُ ثُمَّ انْتَهَى فَقَالَ أُرَاهُ ‏ ‏يَعْنِي النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ بَكْرٍ ‏ ‏قَالَ ‏ ‏عَبْدٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏

‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يُسْأَلُ عَنْ ‏ ‏الْمُهَلِّ ‏ ‏فَقَالَ سَمِعْتُ ‏ ‏أَحْسَبُهُ رَفَعَ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏مُهَلُّ ‏ ‏أَهْلِ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏مِنْ ‏ ‏ذِي الْحُلَيْفَةِ ‏ ‏وَالطَّرِيقُ الْآخَرُ ‏ ‏الْجُحْفَةُ ‏ ‏وَمُهَلُّ أَهْلِ ‏ ‏الْعِرَاقِ ‏ ‏مِنْ ‏ ‏ذَاتِ عِرْقٍ ‏ ‏وَمُهَلُّ أَهْلِ ‏ ‏نَجْدٍ ‏ ‏مِنْ ‏ ‏قَرْنٍ ‏ ‏وَمُهَلُّ أَهْلِ ‏ ‏الْيَمَنِ ‏ ‏مِنْ ‏ ‏يَلَمْلَمَ

மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவிலும், மற்றொரு வழியான அல்ஜுஹ்ஃபாவிலும் இஹ்ராம் பூணுவார்கள். இராக்வாசிகள் தாத்து இர்க்கிலும், நஜ்துவாசிகள் கர்னிலும், யமன்வாசிகள் யலம்லமிலும் இஹ்ராம் பூணுவார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

குறிப்பு : “ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இஹ்ராம் பூணும் இடம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு கூறியதை நான் செவியுற்றேன். நபி (ஸல்) கூறியதாகவே ஜாபிர் (ரலி) அவ்வாறு அறிவித்தார்கள் என நான் எண்ணுகின்றேன்” என்று இதன் அறிவிப்பாளரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 15, பாடம்: 15.02, ஹதீஸ் எண்: 2027

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَيَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَعَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرُونَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏

‏أَمَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَهْلَ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏أَنْ يُهِلُّوا مِنْ ‏ ‏ذِي الْحُلَيْفَةِ ‏ ‏وَأَهْلَ ‏ ‏الشَّامِ ‏ ‏مِنْ ‏ ‏الْجُحْفَةِ ‏ ‏وَأَهْلَ ‏ ‏نَجْدٍ ‏ ‏مِنْ ‏ ‏قَرْنٍ ‏ ‏وَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏وَأُخْبِرْتُ أَنَّهُ قَالَ ‏ ‏وَيُهِلُّ أَهْلُ ‏ ‏الْيَمَنِ ‏ ‏مِنْ ‏ ‏يَلَمْلَمَ

மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவிலும், ஷாம்(சிரியா)வாசிகள் அல்ஜுஹ்ஃபாவிலும், நஜ்துவாசிகள் கர்னிலும் இஹ்ராம் பூணுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கட்டளையிட்டார்கள்.

“யமன்வாசிகள் யலம்லமில் இஹ்ராம் பூணுவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.02, ஹதீஸ் எண்: 2026

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مُهَلُّ ‏ ‏أَهْلِ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏ذُو الْحُلَيْفَةِ ‏ ‏وَمُهَلُّ أَهْلِ ‏ ‏الشَّامِ ‏ ‏مَهْيَعَةُ ‏ ‏وَهِيَ ‏ ‏الْجُحْفَةُ ‏ ‏وَمُهَلُّ أَهْلِ ‏ ‏نَجْدٍ ‏ ‏قَرْنٌ ‏ ‏قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏وَزَعَمُوا أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلَمْ أَسْمَعْ ذَلِكَ مِنْهُ قَالَ وَمُهَلُّ أَهْلِ ‏ ‏الْيَمَنِ ‏ ‏يَلَمْلَمُ

“மதீனாவாசிகள் இஹ்ராம் பூணும் இடம் துல்ஹுலைஃபா ஆகும். ஷாம்(சிரியா)வாசிகள் இஹ்ராம் பூணும் இடம் ‘மஹ்யஆ’ எனும் அல்ஜுஹ்ஃபா ஆகும். நஜ்துவாசிகள் இஹ்ராம் பூணும் இடம் “கர்னு’ ஆகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

குறிப்பு : “யமன்வாசிகள் யலம்லமில் இஹ்ராம் பூணுவார்கள்” என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என நபித் தோழர்கள்தாம் என்னிடம் கூறினர்; (நேரடியாக) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அதைச் செவியுறவில்லை என்று அறிவிப்பாளர் இபுனு உமர் (ரலி) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 15, பாடம்: 15.02, ஹதீஸ் எண்: 2025

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏يُهِلُّ أَهْلُ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏مِنْ ‏ ‏ذِي الْحُلَيْفَةِ ‏ ‏وَيُهِلُّ أَهْلُ ‏ ‏الشَّامِ ‏ ‏مِنْ ‏ ‏الْجُحْفَةِ ‏ ‏وَيُهِلُّ أَهْلُ ‏ ‏نَجْدٍ ‏ ‏مِنْ ‏ ‏قَرْنٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏وَذُكِرَ لِي وَلَمْ أَسْمَعْ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ وَيُهِلُّ أَهْلُ ‏ ‏الْيَمَنِ ‏ ‏مِنْ ‏ ‏يَلَمْلَمَ

“மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவிலும், ஷாம்(சிரியா)வாசிகள் அல்ஜுஹ்ஃபாவிலும், நஜ்துவாசிகள் கர்னிலும் இஹ்ராம் பூணுவார்கள்” என்று . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

குறிப்பு : “யமன்வாசிகள் யலம்லமில் இஹ்ராம் பூணுவார்கள்” என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என (நபித் தோழர்களால்) எனக்குச் சொல்லப்பட்டது; (நேரடியாக) நான் அதைச் செவியுறவில்லை என்று அறிவிப்பாளர் இபுனு உமர் (ரலி) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 15, பாடம்: 15.02, ஹதீஸ் எண்: 2024

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏يُهِلُّ أَهْلُ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏مِنْ ‏ ‏ذِي الْحُلَيْفَةِ ‏ ‏وَأَهْلُ ‏ ‏الشَّامِ ‏ ‏مِنْ ‏ ‏الْجُحْفَةِ ‏ ‏وَأَهْلُ ‏ ‏نَجْدٍ ‏ ‏مِنْ ‏ ‏قَرْنٍ ‏ ‏قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏وَبَلَغَنِي أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ وَيُهِلُّ أَهْلُ ‏ ‏الْيَمَنِ ‏ ‏مِنْ ‏ ‏يَلَمْلَمَ

“மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவிலும், ஷாம்(சிரியா)வாசிகள் அல்ஜுஹ்ஃபாவிலும், நஜ்துவாசிகள் கர்னிலும் இஹ்ராம் பூணுவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)

குறிப்பு : “யமன்வாசிகள் யலம்லமில் இஹ்ராம் பூணுவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் எனும் செய்தியும் எனக்குக் கிடைத்துள்ளது” என்று இபுனு உமர் (ரலி) கூறியுள்ளார்.

அத்தியாயம்: 15, பாடம்: 15.02, ஹதீஸ் எண்: 2023

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَّتَ لِأَهْلِ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏ذَا الْحُلَيْفَةِ ‏ ‏وَلِأَهْلِ ‏ ‏الشَّامِ ‏ ‏الْجُحْفَةَ ‏ ‏وَلِأَهْلِ ‏ ‏نَجْدٍ ‏ ‏قَرْنَ الْمَنَازِلِ ‏ ‏وَلِأَهْلِ ‏ ‏الْيَمَنِ ‏ ‏يَلَمْلَمَ ‏ ‏وَقَالَ هُنَّ لَهُمْ وَلِكُلِّ آتٍ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِهِنَّ مِمَّنْ أَرَادَ الْحَجَّ وَالْعُمْرَةَ وَمَنْ كَانَ دُونَ ذَلِكَ فَمِنْ حَيْثُ ‏ ‏أَنْشَأَ ‏ ‏حَتَّى أَهْلُ ‏ ‏مَكَّةَ ‏ ‏مِنْ ‏ ‏مَكَّةَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும், ஷாம்(சிரியா)வாசிகளுக்கு அல்ஜுஹ்ஃபாவையும், நஜ்துவாசிகளுக்குக் கர்னுல் மனாஸிலையும், யமன்வாசிகளுக்கு யலம்லமையும் இஹ்ராம் பூணும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள்.

மேலும், “இந்த எல்லைகள், இவர்களுக்கும் ஹஜ்/உம்ராவிற்காக இவ்வழியே வரக்கூடிய ஒவ்வொருவருக்கும் பொருந்தும்; அவர்கள் இவ்வூர்வாசிகளாக இல்லாவிட்டாலும் சரியே! இந்த எல்லைகளுக்கு உள்ளே இருப்பவர், தாம் பயணம் புறப்படும் இடத்திலிருந்தும் மக்காவாசிகள் மக்காவிலிருந்தும் இஹ்ராம் பூணுவர்“ என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.02, ஹதீஸ் எண்: 2022

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَخَلَفُ بْنُ هِشَامٍ ‏ ‏وَأَبُو الرَّبِيعِ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏حَمَّادٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏

‏وَقَّتَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِأَهْلِ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏ذَا الْحُلَيْفَةِ ‏ ‏وَلِأَهْلِ ‏ ‏الشَّامِ ‏ ‏الْجُحْفَةَ ‏ ‏وَلِأَهْلِ ‏ ‏نَجْدٍ ‏ ‏قَرْنَ الْمَنَازِلِ ‏ ‏وَلِأَهْلِ ‏ ‏الْيَمَنِ ‏ ‏يَلَمْلَمَ ‏ ‏قَالَ فَهُنَّ لَهُنَّ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِ ‏ ‏أَهْلِهِنَّ ‏ ‏مِمَّنْ أَرَادَ الْحَجَّ وَالْعُمْرَةَ فَمَنْ كَانَ دُونَهُنَّ فَمِنْ ‏ ‏أَهْلِهِ ‏ ‏وَكَذَا فَكَذَلِكَ حَتَّى أَهْلُ ‏ ‏مَكَّةَ ‏ ‏يُهِلُّونَ ‏ ‏مِنْهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும், ஷாம்(சிரியா)வாசிகளுக்கு அல்ஜுஹ்ஃபாவையும், நஜ்துவாசிகளுக்குக் கர்னுல் மனாஸிலையும், யமன்வாசிகளுக்கு யலம்லமையும் இஹ்ராம் பூணும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள்.
மேலும், “இந்த எல்லைகள், இ(ங்குக் குறிப்பிடப்பட்ட)வர்களுக்கும் ஹஜ்/உம்ராவிற்காக இவ்வழிகளில் வருகின்ற மற்றவர்களுக்கும் பொருந்தும். அவர்கள் இவ்வூர்வாசிகளாக இல்லாவிட்டாலும் சரியே! இந்த எல்லைகளுக்கு உள்ளே இருப்பவர்கள், தாம் வசிக்கும் இடத்திலிருந்தும் மக்காவாசிகள் மக்காவிலிருந்தும் இஹ்ராம் பூணுவர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)