அத்தியாயம்: 15, பாடம்: 15.20, ஹதீஸ் எண்: 2139

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمَّا قَدِمَ ‏ ‏مَكَّةَ ‏ ‏أَتَى الْحَجَرَ ‏ ‏فَاسْتَلَمَهُ ‏ ‏ثُمَّ مَشَى عَلَى يَمِينِهِ فَرَمَلَ ثَلَاثًا وَمَشَى أَرْبَعًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்கா(விலுள்ள கஅபா)விற்கு வந்ததும் ‘ஹஜருல் அஸ்வது’க்குச் சென்று அதைத் தொட்டு முத்தமிட்டார்கள். பின்னர் வலப் புறமாக நடந்து சென்று (கஅபாவைச்) சுற்றலானார்கள். மூன்று சுற்றுகள் (தோள்களைக் குலுக்கியவாறு) வேகமாகவும் நான்கு சுற்றுகள் இயல்பாக நடந்தும் சுற்றினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.20, ஹதீஸ் எண்: 2138

حَدَّثَنَا ‏ ‏عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏فِي حَدِيثِهِ ذَلِكَ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏نَحَرْتُ هَاهُنَا ‏ ‏وَمِنًى ‏ ‏كُلُّهَا مَنْحَرٌ فَانْحَرُوا فِي ‏ ‏رِحَالِكُمْ ‏ ‏وَوَقَفْتُ هَاهُنَا ‏ ‏وَعَرَفَةُ ‏ ‏كُلُّهَا مَوْقِفٌ وَوَقَفْتُ هَاهُنَا ‏ ‏وَجَمْعٌ ‏ ‏كُلُّهَا مَوْقِفٌ

“நான் (மினாவில் மஸ்ஜிதுல் கைஃப் அருகிலுள்ள) இந்த இடத்தில்தான் அறுத்துப் பலியிட்டேன். ஆனால், மினா முழுவதும் பலியிடும் இடமே. எனவே, (மினாவில்) நீங்கள் தங்கியிருக்கும் இடங்களிலேயே பலியிட்டுக் கொள்ளுங்கள். நான் (அரஃபா நடுவிலுள்ள ‘ஜபலுர் ரஹ்மத்’ மலைக்குக் கீழேயுள்ள) இந்த இடத்தில் தங்கினேன். ஆனால், அரஃபா முழுவதும் தங்குமிடம்தான். நான் முஸ்தலிஃபாவில் (‘மஷ்அருல் ஹராம்’ குன்றின் அருகிலுள்ள) இந்த இடத்தில் தங்கினேன். ஆனால், முஸ்தலிஃபா முழுவதும் தங்குமிடம்தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)