அத்தியாயம்: 15, பாடம்: 42, ஹதீஸ் எண்: 2238

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ سَلَمَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ: ‏

شَكَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنِّي ‏ ‏أَشْتَكِي ‏ ‏فَقَالَ ‏ ‏طُوفِي مِنْ وَرَاءِ النَّاسِ وَأَنْتِ رَاكِبَةٌ قَالَتْ فَطُفْتُ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَئِذٍ ‏ ‏يُصَلِّي إِلَى جَنْبِ ‏ ‏الْبَيْتِ ‏ ‏وَهُوَ يَقْرَأُ ‏ ‏بِالطُّورِ وَكِتَابٍ مَسْطُورٍ

“எனக்கு உடல் நலமில்லை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (ஹஜ்ஜின்போது) முறையிட்டேன். அதற்கு அவர்கள், “நீ மக்கள் (கூட்டத்தின்) பின்னால் (சென்று) வாகனத்தில் அமர்ந்து (கஅபாவைச்) சுற்றிவருவாயாக!” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் சுற்றிவந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அத்தூர் எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதியவாறு கஅபாவின் ஓர் ஓரத்தில் தொழுதுகொண்டிருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஸலமா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 42, ஹதீஸ் எண்: 2237

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ دَاوُدَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْرُوفُ بْنُ خَرَّبُوذَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا الطُّفَيْلِ ‏ ‏يَقُولُ: ‏

رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَطُوفُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَيَسْتَلِمُ ‏ ‏الرُّكْنَ ‏ ‏بِمِحْجَنٍ ‏ ‏مَعَهُ وَيُقَبِّلُ ‏ ‏الْمِحْجَنَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறையில்லம் கஅபாவைச் சுற்றிவந்தபோது ஹஜருல் அஸ்வதைத் தம்மிடமிருந்த முனை வளைந்த கைத்தடியால் தொட்டு, அந்தக் கைத்தடியை முத்தமிட்டதை நான் கண்டேன்.

அறிவிப்பாளர் : அபுத்துஃபைல் அலீ பின் வாஸிலா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 42, ஹதீஸ் எண்: 2236

حَدَّثَنِي ‏ ‏الْحَكَمُ بْنُ مُوسَى الْقَنْطَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعَيْبُ بْنُ إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ:

طَافَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي حَجَّةِ الْوَدَاعِ حَوْلَ ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏عَلَى بَعِيرِهِ ‏ ‏يَسْتَلِمُ ‏ ‏الرُّكْنَ كَرَاهِيَةَ أَنْ يُضْرَبَ عَنْهُ النَّاسُ

நபி (ஸல்), விடைபெறும் ஹஜ்ஜின்போது (கூட்ட நெரிசலில்) தம்மைவிட்டு மக்கள் விரட்டியடிக்கப்படுவதை விரும்பவில்லையாதலால் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள்; அப்போது (கைத்தடியால்) ஹஜருல் அஸ்வதைத் தொட்(டு, முத்தமிட்)டார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 42, ஹதீஸ் எண்: 2235

‏و حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدٌ يَعْنِي ابْنَ بَكْرٍ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُ:‏

‏طَافَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي حَجَّةِ الْوَدَاعِ عَلَى ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبِالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏لِيَرَاهُ النَّاسُ ‏ ‏وَلِيُشْرِفَ ‏ ‏وَلِيَسْأَلُوهُ فَإِنَّ النَّاسَ ‏ ‏غَشُوهُ ‏

وَلَمْ يَذْكُرْ ‏ ‏ابْنُ خَشْرَمٍ ‏ ‏وَلِيَسْأَلُوهُ ‏ ‏فَقَطْ

நபி (ஸல்), விடைபெறும் ஹஜ்ஜின்போது தமது வாகனத்தின் மீதமர்ந்து இறையில்லம் கஅபாவையும் ஸஃபா-மர்வாவுக்கு இடையேயும் சுற்றிவந்தார்கள். மக்கள் தம்மைப் பார்த்து, தம்மிடம் (வழிப்பாட்டு விளக்கங்கள்) கேட்க வேண்டும் என்பதற்காகவே (வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள்). ஏனெனில், அப்போது மக்கள் (திரளாக) அவர்களைச் சூழ்ந்துகொண்டிருந்தனர்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

இபுனு கஷ்ரம் (ரஹ்) வழி அறிவிப்பில், “தம்மிடம் அவர்கள் (வழிபாட்டு விளக்கங்கள்) கேட்க வேண்டும் என்பதற்காக” என்பது மட்டும் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 15, பாடம்: 42, ஹதீஸ் எண்: 2234

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ: ‏

طَافَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏فِي حَجَّةِ الْوَدَاعِ عَلَى ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏يَسْتَلِمُ ‏ ‏الْحَجَرَ ‏ ‏بِمِحْجَنِهِ ‏ ‏لِأَنْ يَرَاهُ النَّاسُ ‏ ‏وَلِيُشْرِفَ ‏ ‏وَلِيَسْأَلُوهُ فَإِنَّ النَّاسَ ‏ ‏غَشُوهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), விடைபெறும் ஹஜ்ஜின்போது தமது வாகனத்தின் மீதமர்ந்து இறையில்லத்தைச் சுற்றிவந்தார்கள்; அப்போது அவர்கள் தமது முனை வளைந்த கைத்தடியால் ஹஜருல் அஸ்வதைத் தொட்(டு, முத்தமிட்)டார்கள். மக்கள் தம்மைப் பார்த்து, தம்மிடம் (வழிபாட்டு விளக்கங்களைக்) கேட்க வேண்டும் என்பதற்காகவே (வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள்). ஏனெனில், அப்போது மக்கள் (திரளாக) அவர்களைச் சூழ்ந்துகொண்டிருந்தனர்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 42, ஹதீஸ் எண்: 2233

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏طَافَ فِي حَجَّةِ الْوَدَاعِ عَلَى بَعِيرٍ ‏ ‏يَسْتَلِمُ ‏ ‏الرُّكْنَ ‏ ‏بِمِحْجَنٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), விடைபெறும் ஹஜ்ஜின்போது ஒட்டகத்தின் மீதமர்ந்து தவாஃப் செய்தார்கள். அப்போது, முனை வளைந்த கைத்தடியால் ஹஜருல் அஸ்வதைத் தொட்(டு, முத்தமிட்)டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)