அத்தியாயம்: 33, பாடம்: 36, ஹதீஸ் எண்: 3504

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَوْنٍ الْهِلاَلِيُّ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الْفَزَارِيُّ، إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ لاَ يَجْتَمِعَانِ فِي النَّارِ اجْتِمَاعًا يَضُرُّ أَحَدُهُمَا الآخَرَ ‏”‏ ‏.‏ قِيلَ مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏”‏ مُؤْمِنٌ قَتَلَ كَافِرًا ثُمَّ سَدَّدَ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இரண்டு பேரில், ஒருவர் மற்றவருக்கு இடையூறு செய்யும் வகையில் நரகத்தில் ஒருபோதும் ஒன்றுசேரமாட்டார்கள்” என்று கூறினார்கள். “அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்கப்பட்டது. அதற்கு, “ஓர் இறை நம்பிக்கையாளர், இறைமறுப்பாளனை (அறப் போரில்) கொன்ற பின்னர் அவர் (மார்க்கத்தில்) உறுதியோடு நிலைத்திருக்கின்றார். (இவரும் இவரால் கொல்லப்பட்ட இறைமறுப்பாளனும் நரகத்தில் ஒருபோதும் இணையமாட்டார்கள்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

மரணம் வரும் வரைக்கும் மனத்தில் ஈமானிய உறுதி குலைந்துவிடக் கூடாது என்பது இந்த ஹதீஸின் கருவாகும்.

அத்தியாயம்: 33, பாடம்: 36, ஹதீஸ் எண்: 3503

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ – عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ يَجْتَمِعُ كَافِرٌ وَقَاتِلُهُ فِي النَّارِ أَبَدًا ‏”‏

“ஓர் இறைமறுப்பாளனும் (அறப்போரில்) அவனைக் கொன்ற(இறைநம்பிக்கை கொண்ட)வரும் ஒருபோதும் நரகத்தில் ஒன்றுசேரமாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 33, பாடம்: 35, ஹதீஸ் எண்: 3502

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا :‏ ‏

وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ يَضْحَكُ اللَّهُ لِرَجُلَيْنِ يَقْتُلُ أَحَدُهُمَا الآخَرَ كِلاَهُمَا يَدْخُلُ الْجَنَّةَ ‏”‏ قَالُوا كَيْفَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏”‏ يُقْتَلُ هَذَا فَيَلِجُ الْجَنَّةَ ثُمَّ يَتُوبُ اللَّهُ عَلَى الآخَرِ فَيَهْدِيهِ إِلَى الإِسْلاَمِ ثُمَّ يُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ فَيُسْتَشْهَدُ ‏”‏

“அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கின்றான். அவ்விருவரில் ஒருவர் மற்றவரைக் கொன்றுவிடுகின்றார். அவ்விருவருமே சொர்க்கத்தில் நுழைகின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். மக்கள், “அது எப்படி, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டனர். அதற்கு, “இந்த (முஸ்லிம்) வீரர் (இறைவழியில் போரிட்டுக்) கொல்லப்படுகின்றார்; சொர்க்கத்தில் நுழைந்து விடுகிறார். பின்னர் (அவரைக் கொன்ற முஸ்லிமல்லாத) மற்றவர் பாவமன்னிப்புக் கோர, அல்லாஹ் அவரை மன்னித்து, இஸ்லாத்திற்கு வழிகாட்டுகிறான். பின்னர் அவர் இறைவழியில் போரிட்டுக் கொல்லப்படுகின்றார் (சொர்க்கம் செல்கின்றார்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)


குறிப்பு :

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களுள் இதுவும் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 33, பாடம்: 35, ஹதீஸ் எண்: 3501

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ يَضْحَكُ اللَّهُ إِلَى رَجُلَيْنِ يَقْتُلُ أَحَدُهُمَا الآخَرَ كِلاَهُمَا يَدْخُلُ الْجَنَّةَ ‏”‏ ‏.‏ فَقَالُوا كَيْفَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏”‏ يُقَاتِلُ هَذَا فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ فَيُسْتَشْهَدُ ثُمَّ يَتُوبُ اللَّهُ عَلَى الْقَاتِلِ فَيُسْلِمُ فَيُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ فَيُسْتَشْهَدُ ‏”‏


وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَأَبُو كُرَيْبٍ قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي الزِّنَادِ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ

“அல்லாஹ், இரண்டு மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கின்றான். அவ்விருவரில் ஒருவர் மற்றவரைக் கொன்றுவிடுகின்றார். (ஆனால்) இருவருமே சொர்க்கத்தில் நுழைகின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். “அது எவ்வாறு, அல்லாஹ்வின் தூதரே?” என்று மக்கள் கேட்டனர்.

அதற்கு, “இந்த (முஸ்லிம்) வீரர், அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு, வீரமரணம் அடைந்துவிடுகின்றார். பிறகு (அவரைக்) கொன்ற(முஸ்லிம் அல்லாத)வர் இஸ்லாத்தை ஏற்று பாவமன்னிப்புக் கோர, அதை அல்லாஹ் ஏற்று அவரை மன்னித்துவிடுகிறான். பிறகு அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர்த் தியாகி ஆகிவிடுகிறார் (எனவே இருவருமே சொர்க்கத்தில் நுழைகின்றனர்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 33, பாடம்: 34, ஹதீஸ் எண்: 3500

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ بَعْجَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏ ‏

عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏ “‏ مِنْ خَيْرِ مَعَاشِ النَّاسِ لَهُمْ رَجُلٌ مُمْسِكٌ عِنَانَ فَرَسِهِ فِي سَبِيلِ اللَّهِ يَطِيرُ عَلَى مَتْنِهِ كُلَّمَا سَمِعَ هَيْعَةً أَوْ فَزْعَةً طَارَ عَلَيْهِ يَبْتَغِي الْقَتْلَ وَالْمَوْتَ مَظَانَّهُ أَوْ رَجُلٌ فِي غُنَيْمَةٍ فِي رَأْسِ شَعَفَةٍ مِنْ هَذِهِ الشَّعَفِ أَوْ بَطْنِ وَادٍ مِنْ هَذِهِ الأَوْدِيَةِ يُقِيمُ الصَّلاَةَ وَيُؤْتِي الزَّكَاةَ وَيَعْبُدُ رَبَّهُ حَتَّى يَأْتِيَهُ الْيَقِينُ لَيْسَ مِنَ النَّاسِ إِلاَّ فِي خَيْرٍ ‏”‏


وَحَدَّثَنَاهُ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي حَازِمٍ، وَيَعْقُوبُ، – يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيَّ – كِلاَهُمَا عَنْ أَبِي حَازِمٍ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ مِثْلَهُ وَقَالَ عَنْ بَعْجَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ بَدْرٍ وَقَالَ ‏ “‏ فِي شِعْبَةٍ مِنْ هَذِهِ الشِّعَابِ ‏”‏ ‏.‏ خِلاَفَ رِوَايَةِ يَحْيَى ‏

وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَ أَبُو كُرَيْبٍ قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ بَعْجَةَ بْنِ عَبْدِ اللَّهِ الْجُهَنِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَعْنَى حَدِيثِ أَبِي حَازِمٍ عَنْ بَعْجَةَ وَقَالَ ‏ “‏ فِي شِعْبٍ مِنَ الشِّعَابِ ‏”‏

“ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் (செலுத்துவதற்குத்) தமது குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தவண்ணம் (எப்போதும் ஆயத்தமாக) இருப்பதும் மனித வாழ்வின் நலமான அம்சமேயாகும். அவர் எதிரியின் ஆர்ப்பரிப்பையோ ஆவேசக் குரலையோ செவியுறும்போதெல்லாம், வீரமரணமும் இறப்பும் உள்ள இடங்களைத் தேடி அந்தக் குதிரையில் அமர்ந்து பறப்பார். அல்லது (குழப்ப நேரங்களில்) தமது சிறிய ஆட்டு மந்தையுடன் இந்த மலைகளின் உச்சிகளில் ஒன்றில், அல்லது இந்தப் பள்ளத்தாக்குகளில் ஒன்றின் நடுவில் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தை வழங்கி, மரணம் வரும்வரையில் தம் இறைவனை வழிபட்ட வண்ணம் வாழும் ஒருவரும் நன்மையிலேயே உள்ளார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்புகள் :

 யஃகூப் (ரஹ்) வழி அறிவிப்பில். (“இந்த மலைகளின் உச்சிகளில் ஒன்றில் …” என்பதற்குப் பகரமாக) “இந்த மலைக் கணவாய்களில் ஒன்றில் …” என இடம்பெற்றுள்ளது.

வகீஉ (ரஹ்) வழி அறிவிப்பிலும் “மலைக் கணவாய்கள் ஒன்றில் …“ என்றே இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 33, பாடம்: 34, ஹதீஸ் எண்: 3499

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ :‏ ‏

قَالَ رَجُلٌ أَىُّ النَّاسِ أَفْضَلُ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏”‏ مُؤْمِنٌ يُجَاهِدُ بِنَفْسِهِ وَمَالِهِ فِي سَبِيلِ اللَّهِ ‏”‏ ‏.‏ قَالَ ثُمَّ مَنْ قَالَ ‏”‏ ثُمَّ رَجُلٌ مُعْتَزِلٌ فِي شِعْبٍ مِنَ الشِّعَابِ يَعْبُدُ رَبَّهُ وَيَدَعُ النَّاسَ مِنْ شَرِّهِ ‏”‏


وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنِ ابْنِ شِهَابٍ، بِهَذَا الإِسْنَادِ فَقَالَ ‏”‏ وَرَجُلٌ فِي شِعْبٍ ‏”‏ ‏.‏ وَلَمْ يَقُلْ ‏”‏ ثُمَّ رَجُلٌ ‏”‏

ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் சிறந்தவர் யார்?” என்று கேட்டார். அதற்கு, “அல்லாஹ்வின் பாதையில் தம் உயிராலும் பொருளாலும் போராடுகின்ற இறைநம்பிக்கையாளரே (மக்களில் சிறந்தவர்)” என்று பதிலளித்தார்கள். “பிறகு யார்?” என்று அவர் கேட்டார். அதற்கு, “பிறகு (யாரெனில், குழப்ப நேரங்களில்) மலைக் கணவாய்களில் ஒன்றில் ஒதுங்கி, தம் இறைவனை வழிபட்டவாறு தம்மால் மக்களுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்துவருகின்ற இறைநம்பிக்கையாளர் ஆவார்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு :

அல் அவ்ஸாயீ (ரஹ்) வழி அறிவிப்பில், “பிறகு (மக்களில் சிறந்தவர் யாரெனில் …)” என்பதற்கு பதிலாக “மேலும் (மக்களில் சிறந்தவர் யாரெனில் …)” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 33, பாடம்: 34, ஹதீஸ் எண்: 3498

حَدَّثَنَا مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْوَلِيدِ الزُّبَيْدِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ :‏ ‏

أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ أَىُّ النَّاسِ أَفْضَلُ فَقَالَ ‏”‏ رَجُلٌ يُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ بِمَالِهِ وَنَفْسِهِ ‏”‏ قَالَ ثُمَّ مَنْ قَالَ ‏”‏ مُؤْمِنٌ فِي شِعْبٍ مِنَ الشِّعَابِ يَعْبُدُ اللَّهَ رَبَّهُ وَيَدَعُ النَّاسَ مِنْ شَرِّهِ ‏”‏‏

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “மக்களில் சிறந்தவர் யார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்), “அல்லாஹ்வின் பாதையில் தம் பொருளாலும் உயிராலும் போராடுபவரே (மக்களில் சிறந்தவர்)” என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், “பிறகு யார்?” என்று கேட்டார்.

நபி (ஸல்), “(குழப்ப சூழல்களில்) மலைக் கணவாய்களில் ஒன்றில் வசித்துக்கொண்டு, தம் இறைவனான அல்லாஹ்வை வழிபட்டவாறு தம்மால் மக்களுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்துவருகின்ற இறைநம்பிக்கையாளர்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 33, பாடம்: 33, ஹதீஸ் எண்: 3497

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ كِلاَهُمَا عَنْ أَبِي مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، وَعِيسَى بْنُ يُونُسَ، جَمِيعًا عَنِ الأَعْمَشِ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا أَسْبَاطٌ، وَأَبُو مُعَاوِيَةَ قَالاَ حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، قَالَ سَأَلْنَا عَبْدَ اللَّهِ عَنْ هَذِهِ الآيَةِ :‏

‏‏{‏ وَلاَ تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ‏}‏ قَالَ أَمَا إِنَّا قَدْ سَأَلْنَا عَنْ ذَلِكَ فَقَالَ ‏”‏ أَرْوَاحُهُمْ فِي جَوْفِ طَيْرٍ خُضْرٍ لَهَا قَنَادِيلُ مُعَلَّقَةٌ بِالْعَرْشِ تَسْرَحُ مِنَ الْجَنَّةِ حَيْثُ شَاءَتْ ثُمَّ تَأْوِي إِلَى تِلْكَ الْقَنَادِيلِ فَاطَّلَعَ إِلَيْهِمْ رَبُّهُمُ اطِّلاَعَةً فَقَالَ هَلْ تَشْتَهُونَ شَيْئًا قَالُوا أَىَّ شَىْءٍ نَشْتَهِي وَنَحْنُ نَسْرَحُ مِنَ الْجَنَّةِ حَيْثُ شِئْنَا فَفَعَلَ ذَلِكَ بِهِمْ ثَلاَثَ مَرَّاتٍ فَلَمَّا رَأَوْا أَنَّهُمْ لَنْ يُتْرَكُوا مِنْ أَنْ يُسْأَلُوا قَالُوا يَا رَبِّ نُرِيدُ أَنْ تَرُدَّ أَرْوَاحَنَا فِي أَجْسَادِنَا حَتَّى نُقْتَلَ فِي سَبِيلِكَ مَرَّةً أُخْرَى ‏.‏ فَلَمَّا رَأَى أَنْ لَيْسَ لَهُمْ حَاجَةٌ تُرِكُوا ‏”‏

“அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என (நபியே!) நீர் எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர்; தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்; உணவளிக்கப்பெறுகின்றனர்” எனும் (3:169) இறைவசனத்தைப் பற்றி நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்:

இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டுவிட்டோம். அப்போது, “அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறைஅரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அந்த உயிர்கள், சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.

ஒரு முறை அவர்களின் இறைவன் அவர்களிடம் தோன்றி, ‘நீங்கள் மேற்கொண்டு எதையேனும் ஆசைப்படுகின்றீர்களா?‘ என்று கேட்பான். அதற்கு அவர்கள், ‘நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக்கொண்டிருக்கின்றோமே!‘ என்று கூறுவர்.

இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறும். எதையேனும் (இறைவனிடம்) கேட்காமல் நாம் விடப்படமாட்டோம் என்பதை அவர்கள் அறிந்துகொண்டு, ‘இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒரு முறை கொல்லப்பட வேண்டும்’ என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) தேவை ஏதுமில்லை என்பதை இறைவனிடம் தெரிவித்துவிட்டதால் அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள்“ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) வழியாக மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்)

அத்தியாயம்: 33, பாடம்: 32, ஹதீஸ் எண்: 3496

وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ حَدَّثَنِي عَيَّاشُ بْنُ عَبَّاسٍ الْقِتْبَانِيُّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ :‏ ‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ الْقَتْلُ فِي سَبِيلِ اللَّهِ يُكَفِّرُ كُلَّ شَىْءٍ إِلاَّ الدَّيْنَ ‏”‏

“அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவது, கடனைத் தவிர அனைத்துப் பாவங்களையும் அழித்துவிடும்“ என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)

அத்தியாயம்: 33, பாடம்: 32, ஹதீஸ் எண்: 3495

حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ يَحْيَى بْنِ صَالِحٍ الْمِصْرِيُّ، حَدَّثَنَا الْمُفَضَّلُ، – يَعْنِي ابْنَ فَضَالَةَ – عَنْ عَيَّاشٍ، – وَهُوَ ابْنُ عَبَّاسٍ الْقِتْبَانِيُّ – عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاص :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ يُغْفَرُ لِلشَّهِيدِ كُلُّ ذَنْبٍ إِلاَّ الدَّيْنَ ‏”‏‏

“கடனைத் தவிர (அறப்போரில் கொல்லப்பட்ட) உயிர்த் தியாகியின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன“ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)