அத்தியாயம்: 21, பாடம்: 18, ஹதீஸ் எண்: 2886

‏حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُسْهِرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ حَمْزَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو عَمْرٍو الْأَوْزَاعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي النَّجَاشِيِّ ‏ ‏مَوْلَى ‏ ‏رَافِعِ بْنِ خَدِيجٍ ‏ ‏عَنْ ‏ ‏رَافِعٍ ‏ ‏أَنَّ ‏ ‏ظُهَيْرَ بْنَ رَافِعٍ وَهُوَ عَمُّهُ ‏ ‏قَالَ: ‏
أَتَانِي ‏ ‏ظُهَيْرٌ ‏ ‏فَقَالَ لَقَدْ نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ أَمْرٍ كَانَ بِنَا رَافِقًا فَقُلْتُ وَمَا ذَاكَ مَا قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَهُوَ حَقٌّ قَالَ سَأَلَنِي كَيْفَ تَصْنَعُونَ بِمَحَاقِلِكُمْ فَقُلْتُ نُؤَاجِرُهَا يَا رَسُولَ اللَّهِ عَلَى الرَّبِيعِ أَوْ الْأَوْسُقِ مِنْ التَّمْرِ أَوْ الشَّعِيرِ قَالَ ‏ ‏فَلَا تَفْعَلُوا ازْرَعُوهَا أَوْ أَزْرِعُوهَا أَوْ أَمْسِكُوهَا ‏


حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي النَّجَاشِيِّ ‏ ‏عَنْ ‏ ‏رَافِعٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِهَذَا وَلَمْ يَذْكُرْ عَنْ عَمِّهِ ‏ ‏ظُهَيْرٍ

ழுஹைர் பின் ராஃபிஉ (ரலி) (என் தந்தையின் சகோதரர் ஆவார். அவர்) என்னிடம் வந்து, “எங்களுக்கு உறுதுணையாக இருந்த ஒன்றைச் செய்யக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்குத் தடை விதித்துள்ளார்கள்” என்று கூறினார். நான், “அது என்ன? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னால் அது சத்தியமானதே” என்று கூறினேன்.

அதற்கு அவர் சென்னார்: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீங்கள் உங்கள் விளை நிலங்களை என்ன செய்கின்றீர்கள்?” என்று கேட்டார்கள். “வாய்க்காலை ஒட்டிய பகுதியில் விளைபவற்றை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும்; அல்லது பேரீச்சம் பழத்திலிருந்தோ கோதுமையிலிருந்தோ குறிப்பிட்ட அளவை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் அவற்றைக் குத்தகைக்கு விடுகின்றோம்” என்று நான் பதிலளித்தேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவ்வாறு செய்யாதீர்கள். நீங்களே விளைவியுங்கள்; அல்லது பிறரிடம் (கைமாறு பெறாமல்) விளைவிக்கக் கொடுத்துவிடுங்கள்; அல்லது விளைவிக்காமல் அப்படியே விட்டுவிடுங்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)


குறிப்பு :

இக்ரிமா பின் அம்மார் (ரஹ்) வழி அறிவிப்பில், “ராஃபிஉ பின் கதீஜ் (ரலி), நேரடியாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்தாக இடம்பெற்றுள்ளது; அவர் தம் தந்தையின் சகோதரர் ழுஹைர் (ரலி) கூறினார்கள் எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 21, பாடம்: 18, ஹதீஸ் எண்: 2885

‏و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏يَعْلَى بْنِ حَكِيمٍ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏رَافِعِ بْنِ خَدِيجٍ ‏ ‏قَالَ: ‏
كُنَّا ‏ ‏نُحَاقِلُ ‏ ‏الْأَرْضَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَنُكْرِيهَا ‏ ‏بِالثُّلُثِ وَالرُّبُعِ وَالطَّعَامِ الْمُسَمَّى فَجَاءَنَا ذَاتَ يَوْمٍ رَجُلٌ مَنْ عُمُومَتِي فَقَالَ نَهَانَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ أَمْرٍ كَانَ لَنَا نَافِعًا وَطَوَاعِيَةُ اللَّهِ وَرَسُولِهِ أَنْفَعُ لَنَا نَهَانَا أَنْ نُحَاقِلَ بِالْأَرْضِ ‏ ‏فَنُكْرِيَهَا عَلَى الثُّلُثِ وَالرُّبُعِ وَالطَّعَامِ الْمُسَمَّى وَأَمَرَ رَبَّ الْأَرْضِ أَنْ يَزْرَعَهَا ‏ ‏أَوْ يُزْرِعَهَا ‏ ‏وَكَرِهَ ‏ ‏كِرَاءَهَا ‏ ‏وَمَا سِوَى ذَلِكَ ‏


و حَدَّثَنَاه ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏قَالَ كَتَبَ إِلَيَّ ‏ ‏يَعْلَى بْنُ حَكِيمٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏سُلَيْمَانَ بْنَ يَسَارٍ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏رَافِعِ بْنِ خَدِيجٍ ‏ ‏قَالَ ‏ ‏كُنَّا ‏ ‏نُحَاقِلُ ‏ ‏بِالْأَرْضِ ‏ ‏فَنُكْرِيهَا ‏ ‏عَلَى الثُّلُثِ وَالرُّبُعِ ثُمَّ ذَكَرَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ الْحَارِثِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ عَلِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدَةُ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي عَرُوبَةَ ‏ ‏عَنْ ‏ ‏يَعْلَى بْنِ حَكِيمٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏جَرِيرُ بْنُ حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏يَعْلَى بْنِ حَكِيمٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏عَنْ ‏ ‏رَافِعِ بْنِ خَدِيجٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلَمْ يَقُلْ عَنْ بَعْضِ عُمُومَتِهِ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் (விளைச்சலில்) மூன்றில் ஒரு பாகத்தை, அல்லது நான்கில் ஒரு பாகத்தை, அல்லது குறிப்பிட்ட தானியங்களை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் விளைநிலத்தைக் குத்தகைக்கு விட்டுக்கொண்டிருந்தோம்.

இந்நிலையில் ஒரு நாள் என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர் எங்களிடம் வந்து, “நமக்குப் பயனளித்துக்கொண்டிருந்த ஒரு காரியத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நமக்குத் தடை விதித்துவிட்டார்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுவதே அதைவிட மிகவும் நமக்குப் பயனளிக்கக்கூடியதாகும். நிலத்தைக் குத்தகைக்கு விட்டு, (விளைச்சலில்) மூன்றில் ஒரு பாகத்தையோ, நான்கில் ஒரு பாகத்தையோ, குறிப்பிட்ட தானியங்களையோ பெற்றுக்கொள்ள தடை விதித்துள்ளார்கள். நிலத்தின் உரிமையாளர் அதைத் தாமே விளைவிக்க வேண்டும்; அல்லது (யாருக்கேனும்) விளைவிக்கக் கொடுத்துவிட வேண்டும் எனக் கட்டளையிட்டார்கள்; நிலத்தைக் குத்தகைக்கு விடுவதையும் அது அல்லாத முறையில் பயனடைவதையும் வெறுத்தார்கள்” என்றார்.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)


குறிப்புகள் :

அய்யூப் (ரஹ்) வழி அறிவிப்பில், “தானிய விளைச்சலில் மூன்றில் அல்லது நான்கில் ஒரு பாகத்தை எங்களுக்குத் தந்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் விளைநிலத்தைக் குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தோம் …” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

ஜரீர் (ரஹ்) வழி அறிவிப்பில், “ நபி (ஸல்) கூறினார்கள் …“ என ராஃபிஉ (ரலி) தெரிவித்ததாகவே இடம்பெற்றுள்ளதேயன்றி, தம் தந்தையின் சகோதரர்கள் சிலரிடமிருந்து அறிவித்ததாக இடம்பெறவில்லை.