அத்தியாயம்: 3, பாடம்: 19, ஹதீஸ் எண்: 516

حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ يَحْيَى الْأُمَوِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ حَكِيمِ بْنِ عَبَّادِ بْنِ حُنَيْفٍ الْأَنْصَارِيُّ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو أُمَامَةَ بْنُ سَهْلِ بْنِ حُنَيْفٍ ‏ ‏عَنْ ‏ ‏الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ ‏ ‏قَالَ ‏
‏أَقْبَلْتُ بِحَجَرٍ أَحْمِلُهُ ثَقِيلٍ وَعَلَيَّ ‏ ‏إِزَارٌ ‏ ‏خَفِيفٌ قَالَ فَانْحَلَّ إِزَارِي ‏ ‏وَمَعِيَ الْحَجَرُ لَمْ أَسْتَطِعْ أَنْ أَضَعَهُ حَتَّى بَلَغْتُ بِهِ إِلَى مَوْضِعِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ارْجِعْ إِلَى ثَوْبِكَ فَخُذْهُ وَلَا تَمْشُوا عُرَاةً ‏

நான் ஒரு கனமான கல்லைத் தூக்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தேன். அப்போது என் இடுப்பில் ஒரு மெல்லிய கீழாடை மட்டுமே இருந்தது. அதுவும் அவிழ்ந்து விழுந்து விட்டது; என்னிடமோ பெரிய கல். என்னால் அதை இறக்கி வைக்க முடியாமல் சேர வேண்டிய இடம்வரை போய்ச் சேர்ந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திரும்பிச் சென்று (அவிழ்ந்து விழுந்த) உமது ஆடையை எடுத்து (உடுத்தி)க் கொள்க! நிர்வாணமாக நடக்காதீர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : மிஸ்வர் பின் மக்ரமா (ரலி).

அத்தியாயம்: 3, பாடம்: 19, ஹதீஸ் எண்: 515

و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحُ بْنُ عُبَادَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ بْنُ إِسْحَقَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ دِينَارٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يُحَدِّثُ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَنْقُلُ مَعَهُمْ الْحِجَارَةَ ‏ ‏لِلْكَعْبَةِ ‏ ‏وَعَلَيْهِ إِزَارُهُ فَقَالَ لَهُ ‏ ‏الْعَبَّاسُ ‏ ‏عَمُّهُ يَا ابْنَ أَخِي لَوْ حَلَلْتَ إِزَارَكَ فَجَعَلْتَهُ عَلَى مَنْكِبِكَ دُونَ الْحِجَارَةِ قَالَ فَحَلَّهُ فَجَعَلَهُ عَلَى مَنْكِبِهِ فَسَقَطَ مَغْشِيًّا عَلَيْهِ قَالَ فَمَا رُئِيَ بَعْدَ ذَلِكَ الْيَوْمِ عُرْيَانًا ‏

(கஅபாவைப் புதுப்பிக்கும்போது சிறுவராயிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் மக்களுடன் கஅபாவுக்காகக் கற்களை(ச் சுமந்து) எடுத்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் ஒரு கீழாடை மட்டுமே அணிந்திருந்தார்கள். அவர்களுடைய பெரிய தந்தையான அப்பாஸ் (ரலி) அவர்கள், “என் சகோதரரின் மகனே! நீங்கள் உங்கள் கீழாடையை அவிழ்த்து, உங்கள் தோள்மீது கல்லுக்குக் கீழே வைத்துக் கொள்ளலாமே!” என்று கூறினார்கள். (சிறுவராயிருந்த) அல்லாஹ்வின் தூதரும் அவ்வாறே அதை அவிழ்த்துத் தமது தோள் மீது வைத்தார்கள். உடனே மயக்கம் ஏற்பட்டுக் கீழே விழுந்தார்கள். அந்த நாளுக்குப் பின் ஒருபோதும் அவர்கள் (ஆடையின்றி) பிறந்த மேனியுடன் காணப் பட்டதில்லை.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).

அத்தியாயம்: 3, பாடம்: 19, ஹதீஸ் எண்: 514

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ بَكْرٍ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُمَا ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ دِينَارٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُا ‏
‏لَمَّا بُنِيَتْ ‏ ‏الْكَعْبَةُ ‏ ‏ذَهَبَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَعَبَّاسٌ ‏ ‏يَنْقُلَانِ حِجَارَةً فَقَالَ ‏ ‏الْعَبَّاسُ ‏ ‏لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اجْعَلْ ‏ ‏إِزَارَكَ ‏ ‏عَلَى ‏ ‏عَاتِقِكَ ‏ ‏مِنْ الْحِجَارَةِ فَفَعَلَ ‏ ‏فَخَرَّ ‏ ‏إِلَى الْأَرْضِ ‏ ‏وَطَمَحَتْ ‏ ‏عَيْنَاهُ إِلَى السَّمَاءِ ثُمَّ قَامَ فَقَالَ ‏ ‏إِزَارِي ‏ ‏إِزَارِي فَشَدَّ عَلَيْهِ ‏ ‏إِزَارَهُ ‏
‏قَالَ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏فِي رِوَايَتِهِ عَلَى رَقَبَتِكَ وَلَمْ يَقُلْ عَلَى عَاتِقِكَ ‏

கஅபா புதுப்பித்துக் கட்டப் பட்டபோது (சிறுவராயிருந்த) நபி (ஸல்) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் கற்களைச் சுமந்து வந்தார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களை நோக்கி, “கல் சுமப்பதற்கு (வசதியாக) உமது கீழாடையை அவிழ்த்துத் தோளில் (சும்மாடாக) வைத்துக் கொள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே செய்தார்கள். உடனே மயக்கமுற்றுக் கீழே விழுந்தார்கள். அவர்களுடைய கண்கள் வானத்தை நோக்கி நிலைகுத்தி நின்றன. பிறகு மயக்கம் தீர்ந்து எழுந்தவுடன், “என் கீழாடை, என் கீழாடை” என்றார்கள். கீழாடை (எடுத்துக் கொடுக்கப் பட்டவுடன்) அதனை இறுக்கிக் கட்டிக் கொண்டார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).

குறிப்பு:

முஹம்மது பின் ராஃபிஉ (ரஹ்) வழி அறிவிப்பில், “உமது தோளில்” என்பதற்குப் பகரமாக “உமது பிடரியில்” என இடம் பெற்றுள்ளது.