அத்தியாயம்: 32, பாடம்: 50, ஹதீஸ் எண்: 3386

حَدَّثَنَا أَبُو عَامِرٍ عَبْدُ اللَّهِ بْنُ بَرَّادٍ الأَشْعَرِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ الْهَمْدَانِيُّ، – وَاللَّفْظُ لأَبِي عَامِرٍ – قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ :‏

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَزَاةٍ وَنَحْنُ سِتَّةُ نَفَرٍ بَيْنَنَا بَعِيرٌ نَعْتَقِبُهُ – قَالَ – فَنَقِبَتْ أَقْدَامُنَا فَنَقِبَتْ قَدَمَاىَ وَسَقَطَتْ أَظْفَارِي فَكُنَّا نَلُفُّ عَلَى أَرْجُلِنَا الْخِرَقَ فَسُمِّيَتْ غَزْوَةَ ذَاتِ الرِّقَاعِ لِمَا كُنَّا نُعَصِّبُ عَلَى أَرْجُلِنَا مِنَ الْخِرَقِ ‏.‏ قَالَ أَبُو بُرْدَةَ فَحَدَّثَ أَبُو مُوسَى بِهَذَا الْحَدِيثِ ثُمَّ كَرِهَ ذَلِكَ ‏.‏ قَالَ كَأَنَّهُ كَرِهَ أَنْ يَكُونَ شَيْئًا مِنْ عَمَلِهِ أَفْشَاهُ ‏.‏


قَالَ أَبُو أُسَامَةَ وَزَادَنِي غَيْرُ بُرَيْدٍ وَاللَّهُ يَجْزِي بِهِ ‏.‏

நாங்கள் ஒரு போருக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். எங்களில் ஆறு பேருக்கு ஓர் ஒட்டகம்தான் இருந்தது. அதில் நாங்கள் ஒருவர் பின் ஒருவராக (முறை வைத்துப்) பயணம் செய்தோம். (போதுமான வாகனம் இல்லாமல் நடந்தே சென்றதால்) எங்களுடைய பாதங்கள் தேய்ந்து(கொப்புளங்கள் வெடித்து)விட்டன. என்னுடைய இரண்டு பாதங்களும் தேய்ந்து, என் கால் நகங்கள் விழுந்துவிட்டன.

அப்போது நாங்கள் எங்கள் கால்களில் துண்டுத் துணிகளைச் சுற்றிக்கொள்பவர்களாக இருந்தோம். இவ்வாறு துண்டுத் துணிகளை நாங்கள் கால்களில் சுற்றிக் கட்டிக்கொண்டதால்தான் அந்தப் போருக்கு ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் எனப் பெயர் சூட்டப்பெற்றது.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) வழியாக அன்னாரின் மகன் அபூபுர்தா (ரஹ்)


குறிப்பு :

“இந்த ஹதீஸை அறிவித்த பின் (என் தந்தை) அபூமூஸா (ரலி), தம்மைப் பற்றித் தாமே அறிவித்துக்கொள்வதை விரும்பவில்லை. தமது நற்செயல் ஒன்றைத் தாமே வெளியே சொல்லிவிட்டதை அவர்கள் விரும்பவில்லை” என்று இதன் அறிவிப்பாளரான அபூபுர்தா பின் அபீமூஸா (ரஹ்) கூறுகின்றார்.

“புரைத் (ரஹ்) அல்லாத மற்றொருவரது அறிவிப்பில், அல்லாஹ் அதற்குரிய நற்பலனை அவர்களுக்கு வழங்குவானாக என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது” என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அபூஉஸாமா (ரஹ்) கூறுகின்றார்.