36.26 குடும்பத்தாருக்காக ... உணவுகளைச் சேமித்துவைத்தல்

باب فِي ادْخَالِ التَّمْرِ وَنَحْوِهِ مِنَ الأَقْوَاتِ لِلْعِيَالِ ‏‏
குடும்பத்தாருக்காகப் பேரீச்சம் பழங்கள் போன்ற உணவுகளைச் சேமித்துவைத்தல்

அத்தியாயம்: 36, பாடம்: 26, ஹதீஸ் எண்: 3807

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ مُحَمَّدِ بْنِ طَحْلاَءَ، عَنْ أَبِي الرِّجَالِ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ يَا عَائِشَةُ بَيْتٌ لاَ تَمْرَ فِيهِ جِيَاعٌ أَهْلُهُ يَا عَائِشَةُ بَيْتٌ لاَ تَمْرَ فِيهِ جِيَاعٌ أَهْلُهُ أَوْ جَاعَ أَهْلُهُ ‏”‏ ‏.‏ قَالَهَا مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (என்னிடம்), “ஆயிஷா! பேரீச்சம் பழம் இல்லாத வீட்டார், பட்டினி கிடக்கும் வீட்டார். ஆயிஷா! பேரீச்சம் இல்லாத வீட்டார், பட்டினி கிடக்கும் வீட்டார் அல்லது பட்டினிக்குள்ளாகும் வீட்டார்” என்று இரண்டு அல்லது மூன்று தடவை கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 26, ஹதீஸ் எண்: 3806

حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ يَجُوعُ أَهْلُ بَيْتٍ عِنْدَهُمُ التَّمْرُ ‏”‏‏

“பேரீச்சம் பழங்கள் (சேமித்துவைக்கப்பட்டு) உள்ள குடும்பத்தார் பசித்திருக்கமாட்டார்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)