43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும்

باب كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَبْيَضَ مَلِيحَ الْوَجْهِ
நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும்

அத்தியாயம்: 43, பாடம்: 28, ஹதீஸ் எண்: 4303

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ عَبْدِ الأَعْلَى، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي الطُّفَيْلِ قَالَ :‏

رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَمَا عَلَى وَجْهِ الأَرْضِ رَجُلٌ رَآهُ غَيْرِي ‏.‏ قَالَ فَقُلْتُ لَهُ فَكَيْفَ رَأَيْتَهُ قَالَ كَانَ أَبْيَضَ مَلِيحًا مُقَصَّدًا

அபுத்துஃபைல் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்திருக்கின்றேன்; இந்தப் பூமியின்மீது அவர்களைப் பார்த்தவர் என்னைத் தவிர வேறெந்த மனிதரும் (இப்போது உயிருடன்) இல்லை” என்று கூறினார்கள்.

அவர்களிடம் நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எவ்வாறு கண்டீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வெண்ணிறம் கொண்டவர்களாகவும் களையான தோற்றமுடையவராகவும் நடுத்தரமான உடல்வாகு கொண்டவராகவும் இருந்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபுத்துஃபைல் (ரலி) வழியாக ஸயீத் பின் இயாஸ் அல்ஜுரைரீ (ரஹ்)

அத்தியாயம்: 43, பாடம்: 28, ஹதீஸ் எண்: 4302

حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي الطُّفَيْلِ قَالَ :‏

قُلْتُ لَهُ أَرَأَيْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ كَانَ أَبْيَضَ مَلِيحَ الْوَجْهِ ‏.‏ قَالَ مُسْلِمُ بْنُ الْحَجَّاجِ مَاتَ أَبُو الطُّفَيْلِ سَنَةَ مِائَةٍ وَكَانَ آخِرَ مَنْ مَاتَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏

நான் அபுத்துஃபைல் (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கின்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்; அவர்கள் வெண்ணிறம் கொண்டவர்களாகவும் களையான முகமுடையவராகவும் இருந்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபுத்துஃபைல் (ரலி) வழியாக ஸயீத் பின் இயாஸ் அல்ஜுரைரீ (ரஹ்)


குறிப்பு :

“அபுத்துஃபைல் (ரலி) (ஹிஜ்ரீ) நூறாம் ஆண்டில் இறந்தார்கள்; நபித்தோழர்களில் இறுதியாக இறந்தவர் அபுத்துஃபைல் (ரலி) ஆவார்” என்று ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பின் ஆசிரியர், இமாம் முஸ்லிம் (ரஹ்) கூறுகின்றார்.