அத்தியாயம்: 45, பாடம்: 30, ஹதீஸ் எண்: 4705

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ ابْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ صُرَدٍ قَالَ :‏ ‏

اسْتَبَّ رَجُلاَنِ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَجَعَلَ أَحَدُهُمَا تَحْمَرُّ عَيْنَاهُ وَتَنْتَفِخُ أَوْدَاجُهُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِنِّي لأَعْرِفُ كَلِمَةً لَوْ قَالَهَا لَذَهَبَ عَنْهُ الَّذِي يَجِدُ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ‏”‏ ‏.‏ فَقَالَ الرَّجُلُ وَهَلْ تَرَى بِي مِنْ جُنُونٍ


قَالَ ابْنُ الْعَلاَءِ فَقَالَ وَهَلْ تَرَى ‏.‏ وَلَمْ يَذْكُرِ الرَّجُلَ

நபி (ஸல்) அவர்களின் அருகில் இரண்டு ஆடவர் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டனர். அவர்களில் ஒருவருடைய கண்கள் (கோபத்தால்) சிவந்து, கழுத்து நரம்புகள் புடைத்தன.

நபி (ஸல்), “எனக்கு ஒரு (பிரார்த்தனை) சொல் தெரியும். அதை அவர் சொல்வாராயின் அவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய (கோப) உணர்ச்சி விலகிவிடும். ‘அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்’ (ஷைத்தானிடமிருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்) (என்பதே அது)” என்று கூறினார்கள். (மக்கள் கோபத்திலிருந்தவரிடம் இதை எடுத்துரைத்தபோது) அவர், “எனக்குப் பைத்தியம்  பிடித்திருப்பதாகத் தெரிகிறதா?” என்று கேட்டார்.

அறிவிப்பாளர் : ஸுலைமான் பின் ஸுரத் (ரலி)


குறிப்பு :

இப்னுல் அலா (ரஹ்) வழி அறிவிப்பில், ‘அவர்’ எனும் சொல் இடம்பெறவில்லை.