அத்தியாயம்: 6, பாடம்: 32, ஹதீஸ் எண்: 1322

‏و حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ بْنُ رُشَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏طَلْحَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بُرْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِأَبِي مُوسَى ‏ ‏لَوْ رَأَيْتَنِي وَأَنَا أَسْتَمِعُ لِقِرَاءَتِكَ الْبَارِحَةَ لَقَدْ أُوتِيتَ ‏ ‏مِزْمَارًا ‏ ‏مِنْ مَزَامِيرِ آلِ ‏ ‏دَاوُدَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம், “நீங்கள் நேற்றிரவில் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்ததைச் செவியுற்றேன். அப்போது நீங்கள் என்னைப் பார்த்திருக்கவேண்டும். தாவூத் நபியின் வழித்தோன்றல்களின் புல்லாங்குழல்களுள் ஒன்று (போன்று இனிய குரல்) உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று பாராட்டினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 32, ஹதீஸ் எண்: 1321

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَالِكٌ وَهُوَ ابْنُ مِغْوَلٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ ‏ ‏أَوْ ‏ ‏الْأَشْعَرِيَّ ‏ ‏أُعْطِيَ مِزْمَارًا مِنْ مَزَامِيرِ آلِ ‏ ‏دَاوُدَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அப்துல்லாஹ் பின் கைஸ் / அல்-அஷ்அரீ, தாவூத் நபியின் வழித்தோன்றல்களின் புல்லாங்குழல்களுள் ஒன்று (போன்று இனிய குரல்) வழங்கப்பட்டுள்ளார்” என்று அபூமூஸா (ரலி) அவர்களைப் பாராட்டினார்கள்.

அறிவிப்பாளர் : புரைதா (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 32, ஹதீஸ் எண்: 1320

و حَدَّثَنَا ‏ ‏الْحَكَمُ بْنُ مُوسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِقْلٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَوْزَاعِيِّ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا أَذِنَ اللَّهُ لِشَيْءٍ كَأَذَنِهِ لِنَبِيٍّ ‏ ‏يَتَغَنَّى ‏ ‏بِالْقُرْآنِ يَجْهَرُ بِهِ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِثْلَ حَدِيثِ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏غَيْرَ أَنَّ ‏ ‏ابْنَ أَيُّوبَ ‏ ‏قَالَ فِي رِوَايَتِهِ كَإِذْنِهِ

“அல்லாஹ், தன் தூதர் குரலெடுத்து இனிமையாகக் குர்ஆன் ஓதும்போது செவி கொடுப்பதைப் போன்று வேறெதையும் அவன் செவிகொடுத்துக் கேட்டதில்லை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

குறிப்பு :

யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) வழி அறிவிப்பில், “… செவிகொடுப்பதைப் போன்று …” (க அதினிஹி) எனும் சொல்லில் இகரக் குறியீட்டுடன் (க இத்னிஹி) என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 6, பாடம்: 32, ஹதீஸ் எண்: 1319

حَدَّثَنِي ‏ ‏بِشْرُ بْنُ الْحَكَمِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ وَهُوَ ابْنُ الْهَادِ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏أَنَّهُ ‏

‏سَمِعَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَا أَذِنَ اللَّهُ لِشَيْءٍ مَا أَذِنَ لِنَبِيٍّ حَسَنِ الصَّوْتِ ‏ ‏يَتَغَنَّى ‏ ‏بِالْقُرْآنِ يَجْهَرُ بِهِ ‏

‏و حَدَّثَنِي ‏ ‏ابْنُ أَخِي ابْنِ وَهْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمِّي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عُمَرُ بْنُ مَالِكٍ ‏ ‏وَحَيْوَةُ بْنُ شُرَيْحٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْهَادِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ سَوَاءً وَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلَمْ يَقُلْ سَمِعَ

“அல்லாஹ், தன் நபி குரலெடுத்து இனிமையாகக் குர்ஆனை ஓதும்போது செவிகொடுப்பதைப் போன்று வேறெதையும் அவன் செவிகொடுத்துக் கேட்டதில்லை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் செவியுற்றேன்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

குறிப்பு :

அப்துல்லாஹ் பின் வஹ்பு (ரஹ்) வழி அறிவிப்பில், “… அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் கேட்டேன்.” என்றில்லாமல் “… அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 6, பாடம்: 32, ஹதீஸ் எண்: 1318

حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏

‏يَبْلُغُ بِهِ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَا أَذِنَ اللَّهُ لِشَيْءٍ مَا أَذِنَ لِنَبِيٍّ ‏ ‏يَتَغَنَّى ‏ ‏بِالْقُرْآنِ ‏

‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ قَالَ ‏ ‏كَمَا يَأْذَنُ لِنَبِيٍّ ‏ ‏يَتَغَنَّى ‏ ‏بِالْقُرْآنِ

“நபி் தம் இனிய குரலில் குர்ஆன் ஓதும்போது செவிகொடுப்பதைப் போன்று வேறெதையும் அல்லாஹ் செவிகொடுத்துக் கேட்டதில்லை” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

குறிப்பு :

ஸுஹ்ரீ (ரஹ்) வழி அறிவிப்பில், “… நபி இனிய குரலில் குர்ஆன் ஓதுவதை அல்லாஹ் செவிகொடுப்பதைப் போன்று…” என்று (சிறிய மாற்றத்துடன்) இடம்பெற்றுள்ளது.