அத்தியாயம்: 6, பாடம்: 42, ஹதீஸ் எண்: 1343

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏عَنْ ‏ ‏الْجُرَيْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي السَّلِيلِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ الْأَنْصَارِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أُبَيِّ بْنِ كَعْبٍ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ يَا ‏ ‏أَبَا الْمُنْذِرِ ‏ ‏أَتَدْرِي أَيُّ آيَةٍ مِنْ كِتَابِ اللَّهِ مَعَكَ أَعْظَمُ قَالَ قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ يَا ‏ ‏أَبَا الْمُنْذِرِ ‏ ‏أَتَدْرِي أَيُّ آيَةٍ مِنْ كِتَابِ اللَّهِ مَعَكَ أَعْظَمُ قَالَ قُلْتُ ‏‏اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ‏ ‏قَالَ فَضَرَبَ فِي صَدْرِي وَقَالَ وَاللَّهِ ‏ ‏لِيَهْنِكَ الْعِلْمُ ‏ ‏أَبَا الْمُنْذِرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “அபுல்முன்திரே!, இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா?” எனக் கேட்டார்கள். நான், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறினேன். அவர்கள், “அபுல்முன்திரே!, இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா?” என (மீண்டும்) கேட்டார்கள். நான், “அல்லாஹு லாயிலாஹ இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம்… (எனத் தொடங்கும் 2:255 ஆவது) வசனம்” என்று விடையளித்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மகிழ்ச்சியோடு) எனது நெஞ்சில் தட்டிக் கொடுத்து, “அல்லாஹ்வின் மீதாணையாக! உமது கல்வியாற்றல் உமக்குப் பாராட்டுகள் சேர்க்கட்டும் அபுல்முன்திரே!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உபை பின் கஅப் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 42, ஹதீஸ் எண்: 1342

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ الْغَطَفَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ الْيَعْمَرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الدَّرْدَاءِ ‏
‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ حَفِظَ عَشْرَ آيَاتٍ مِنْ أَوَّلِ سُورَةِ ‏ ‏الْكَهْف ‏ ‏عُصِمَ مِنْ ‏ ‏الدَّجَّالِ ‏
‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏مِنْ آخِرِ ‏ ‏الْكَهْفِ ‏ ‏و قَالَ ‏ ‏هَمَّامٌ ‏ ‏مِنْ أَوَّلِ ‏ ‏الْكَهْف ‏ ‏كَمَا قَالَ ‏ ‏هِشَامٌ

“ஸூரத்துல் கஹ்ஃப் எனும் (18ஆவது) அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்களை மனனம் செய்திருப்பவர் தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கப்படுவார” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர்தா (ரலி)

குறிப்பு :

இந்த ஹதீஸின் ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்கஹ்ஃப் அத்தியாயத்தின் இறுதிப் பத்து வசனங்களை மனனம் செய்திருப்பவர்” என்று இடம்பெற்றுள்ளது. ஹம்மாம் (ரஹ்) வழி அறிவிப்பிலும் ஹிஷாம் (ரஹ்) அறிவிப்பிலும், “அல்கஹ்ஃப் அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்களை …” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 6, பாடம்: 42, ஹதீஸ் எண்: 1340

و حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَنْصُورٌ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ ‏ ‏قَالَ لَقِيتُ ‏ ‏أَبَا مَسْعُودٍ ‏ ‏عِنْدَ ‏ ‏الْبَيْتِ ‏
‏فَقُلْتُ حَدِيثٌ بَلَغَنِي عَنْكَ فِي الْآيَتَيْنِ فِي سُورَةِ ‏ ‏الْبَقَرَةِ ‏ ‏فَقَالَ نَعَمْ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْآيَتَانِ مِنْ آخِرِ سُورَةِ ‏ ‏الْبَقَرَةِ ‏ ‏مَنْ قَرَأَهُمَا فِي لَيْلَةٍ ‏ ‏كَفَتَاهُ ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

நான் அபூமஸ்ஊத் (உக்பா பின் ஆமிர்) அவர்களை இறையில்லம் (கஅபா) அருகில் சந்தித்தேன். அவர்களிடம், “அல்பகரா அத்தியாயத்தின் இரு வசனங்கள் குறித்துத் தாங்கள் அறிவித்த ஹதீஸ் எனக்கு எட்டியது” என்று கூறினேன். அதற்கு அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள், “ஆம்; ‘அல்பகரா அத்தியாயத்தின் இறுதி இரு வசனங்களை இரவில் ஓதுபவருக்கு அந்த இரண்டுமே போது(மான பிரார்த்தனையாகு)ம்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூமஸ்ஊத் எனும் உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்)