அத்தியாயம்: 4, பாடம்: 28, ஹதீஸ் எண்: 654

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ ‏ ‏وَأَبُو مُعَاوِيَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ بْنِ عُمَيْرٍ التَّيْمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَعْمَرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَسْعُودٍ ‏ ‏قَالَ :‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَمْسَحُ مَنَاكِبَنَا ‏ ‏فِي الصَّلَاةِ وَيَقُولُ ‏ ‏اسْتَوُوا وَلَا تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ لِيَلِنِي مِنْكُمْ أُولُو ‏ ‏الْأَحْلَامِ ‏ ‏وَالنُّهَى ‏ ‏ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ


قَالَ ‏ ‏أَبُو مَسْعُودٍ ‏ ‏فَأَنْتُمْ الْيَوْمَ أَشَدُّ اخْتِلَافًا ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ خَشْرَمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى يَعْنِي ابْنَ يُونُسَ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُيَيْنَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகையி(ன் தொடக்கத்தி)ல் எங்களுடைய தோள்களைத் தொட்டு, சீரமைப்பார்கள். மேலும், “நேராக நில்லுங்கள் (முன்-பின்னாக) வேறுபட்டு நிற்காதீர்கள். அப்படி நின்றால், உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுவிடும் உங்களில் அறிவிற் சிறந்தவர்கள் என்னை அடுத்து (முதல் வரிசையில்) நிற்கட்டும். பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும்; பிறகு அவர்களுக்கு அடுத்த உள்ளவர்களும் நிற்கட்டும்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : அபூமஸ்ஊத் அல் அன்ஸாரீ (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸை அறிவிக்கும் அபூமஸ்ஊத் அல் அன்ஸாரீ (ரலி), அவர்தம் காலத்தில் மக்களிடம் காணப்பட்டக் கருத்து வேறுபாட்டைக் குறித்து, “இன்றோ நீங்கள் (தொழுகை வரிசையில் முன்-பின்னாக நிற்பதால்) கடுமையான கருத்து வேறுபாட்டுடன் காணப்படுகின்றீர்கள்” என்று சுட்டிக் காட்டியது இடம்பெற்றுள்ளது.