அத்தியாயம்: 44, பாடம்: 47, ஹதீஸ் எண்: 4560

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَزِيدُ، – وَهُوَ ابْنُ هَارُونَ – أَخْبَرَنَا أَبُو مَالِكٍ، الأَشْجَعِيُّ عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي أَيُّوبَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ الأَنْصَارُ وَمُزَيْنَةُ وَجُهَيْنَةُ وَغِفَارُ وَأَشْجَعُ وَمَنْ كَانَ مِنْ بَنِي عَبْدِ اللَّهِ مَوَالِيَّ دُونَ النَّاسِ وَاللَّهُ وَرَسُولُهُ مَوْلاَهُمْ ‏”‏

“அன்ஸாரிகளும் முஸைனா குலத்தாரும் ஜுஹைனா குலத்தாரும் கிஃபார் குலத்தாரும் அஷ்ஜஉ குலத்தாரும் பனூ அப்தில்லாஹ் குலத்தில் இருப்போருமே (தொடக்க காலம் முதல்) என் சிறப்பு உதவியாளர்கள் ஆவர்; மற்றோரல்லர். அவர்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே பொறுப்பாளர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஅய்யூப் (ரலி)