அத்தியாயம்: 6, பாடம்: 13, ஹதீஸ் எண்: 1187

حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي رَكْعَتَيْ الْفَجْرِ إِذَا سَمِعَ الْأَذَانَ وَيُخَفِّفُهُمَا ‏

‏و حَدَّثَنِيهِ ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيٌّ يَعْنِي ابْنَ مُسْهِرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏أَبِي أُسَامَةَ ‏ ‏إِذَا طَلَعَ الْفَجْرُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (ஃபஜ்ருத்) தொழுகை அழைப்பைச் செவியுற்றபின் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு:

அபூஉஸாமா (ரஹ்) வழி அறிவிப்பில், “ஃபஜ்ரு(ப் பொழுது) தோன்றிவிட்டால் …” என்று ஹதீஸ் தொடங்குகிறது.

அத்தியாயம்: 6, பாடம்: 13, ஹதீஸ் எண்: 1186

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبَّادٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَخْبَرَتْنِي ‏ ‏حَفْصَةُ ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏إِذَا أَضَاءَ لَهُ الْفَجْرُ صَلَّى رَكْعَتَيْنِ

வைகறை வெளிச்சம் வந்ததும் நபி (ஸல்) இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஹஃப்ஸா (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 13, ஹதீஸ் எண்: 1185

و حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَكَمِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏نَافِعًا ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏حَفْصَةَ ‏ ‏قَالَتْ ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا طَلَعَ الْفَجْرُ لَا ‏ ‏يُصَلِّي إِلَّا رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏النَّضْرُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

ஃபஜ்ருப் பொழுது தோன்றிவிட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுருக்கமான இரண்டு ரக்அத் (சுன்னத்) தவிர வேறேதும் தொழ மாட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஹஃப்ஸா (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 13, ஹதீஸ் எண்: 1184

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏أَنَّ ‏ ‏حَفْصَةَ أُمَّ الْمُؤْمِنِينَ ‏ ‏أَخْبَرَتْهُ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏إِذَا سَكَتَ الْمُؤَذِّنُ مِنْ الْأَذَانِ لِصَلَاةِ الصُّبْحِ وَبَدَا الصُّبْحُ رَكَعَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ أَنْ تُقَامَ الصَّلَاةُ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ رُمْحٍ ‏ ‏عَنْ ‏ ‏اللَّيْثِ بْنِ سَعْدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏كَمَا قَالَ ‏ ‏مَالِكٌ

வைகறைப் பொழுதில் தொழுகை அழைப்பாளர் சுப்ஹுத் தொழுகைக்கான அழைப்புக் கொடுத்து முடித்ததும் இகாமத் சொல்லப்படுவதற்கு முன்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுருக்கமான முறையில் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஹஃப்ஸா (ரலி) வழியாக இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 13, ஹதீஸ் எண்: 1183

و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي فُدَيْكٍ ‏ ‏عَنْ ‏ ‏الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُرَّةَ ‏ ‏مَوْلَى ‏ ‏أُمِّ هَانِئٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الدَّرْدَاءِ ‏ ‏قَالَ ‏

‏أَوْصَانِي حَبِيبِي ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِثَلَاثٍ لَنْ أَدَعَهُنَّ مَا عِشْتُ بِصِيَامِ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَصَلَاةِ الضُّحَى وَبِأَنْ لَا أَنَامَ حَتَّى أُوتِرَ

என் அன்பர் (நபி-ஸல்) ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது; ளுஹாத் தொழுவது; வித்ருத் தொழாமல் உறங்கலாகாது ஆகிய மூன்றையும் நான் வாழ்நாளில் ஒருபோதும் கைவிடக் கூடாது என எனக்கு அறிவுறுத்தினார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர்தா (ரலி)