அத்தியாயம்: 15, பாடம்: 32, ஹதீஸ் எண்: 2187

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏قَالَ كَانَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏يَقُولُا ‏ ‏لَا يَطُوفُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏حَاجٌّ وَلَا غَيْرُ حَاجٍّ إِلَّا حَلَّ قُلْتُ ‏ ‏لِعَطَاءٍ ‏ ‏مِنْ أَيْنَ يَقُولُ ذَلِكَ قَالَ مِنْ قَوْلِ اللَّهِ تَعَالَى ” ثُمَّ مَحِلُّهَا إِلَى ‏ ‏الْبَيْتِ الْعَتِيقِ “‏‏

‏‏قَالَ قُلْتُ فَإِنَّ ذَلِكَ بَعْدَ ‏ ‏الْمُعَرَّفِ ‏ ‏فَقَالَ كَانَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏يَقُولُ هُوَ بَعْدَ ‏ ‏الْمُعَرَّفِ ‏ ‏وَقَبْلَهُ ‏
‏وَكَانَ يَأْخُذُ ذَلِكَ مِنْ أَمْرِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ ‏ ‏أَمَرَهُمْ أَنْ يَحِلُّوا فِي حَجَّةِ الْوَدَاعِ

அதாஉ (ரஹ்), “ஹஜ் செய்பவரோ மற்ற(உம்ராச் செய்ப)வரோ இறையில்லம் கஅபாவைச் சுற்றிவந்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுவார் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறுபவர்களாக இருந்தார்கள்” என்று அறிவித்தார்கள்.

நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், “எந்த ஆதாரத்தை வைத்து இப்னு அப்பாஸ் (ரலி) அப்படிக் கூறுகின்றார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “பின்னர் அவை (பலிப் பிராணிகள் அறுப்பதற்காகச்) சென்றடையும் இடம், பழமையான அந்த ஆலயமாகும்” எனும் (22:33ஆவது) இறை வசனத்திலிருந்தும், நபி (ஸல்) விடைபெறும் ஹஜ்ஜின்போது அவர்(களுடன் வந்தவர்)களுக்கு இஹ்ராமிலிருந்து விடுபடும்படி இட்ட கட்டளையை ஆதாரமாகக் கொண்டும்தான் அப்படிக் கூறினார்கள்” என்றார்கள்.

நான், “இஹ்ராமிலிருந்து விடுபடுவது அரஃபாவில் (போய்த்) தங்கிய பின்புதானே?” என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்), “அது, அரஃபாவில் தங்கியதற்குப் பின்பும் அதற்கு முன்பும் (அனுமதிக்கப்பட்டதே)” என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறிவந்தார்கள் என விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி) வழியாக இபுனு ஜுரைஜ் (ரஹ்)


குறிப்பு :

தமத்துஉ ஹஜ் செய்பவர்கள், தவாஃபை நிறைவேற்றிய பின்னர், அரஃபாவுக்குச் சென்று தங்குவதற்கு முன்பு (முதல்) இஹ்ராமிலிருந்து நீங்கிவிடுவர். அதன் பின்னர் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் பூண்டு, அரஃபாவுக்குச் சென்று தங்கிய பின்பு எஞ்சியிருக்கும் சில கடமைச் செயல்பாடுகளை நிறைவு செய்து (இரண்டாவது) இஹ்ராமிலிருந்து நீங்குவர்.

கிரான் ஹஜ்ஜுச் செய்பவர்கள், அரஃபாவுக்குச் சென்று தங்கியதற்குப் பின்னர் எஞ்சியிருக்கும் சில கடமைச் செயல்பாடுகளை நிறைவு செய்து இஹ்ராமிலிருந்து நீங்குவர்.