அத்தியாயம்: 1, பாடம்: 40, ஹதீஸ் எண்: 138

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَأَحْمَدُ بْنُ خِرَاشٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏حُسَيْنٌ الْمُعَلِّمُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ بُرَيْدَةَ ‏ ‏أَنَّ ‏ ‏يَحْيَى بْنَ يَعْمَرَ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏أَبَا الْأَسْوَدِ الدِّيلِيَّ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏أَبَا ذَرٍّ ‏ ‏حَدَّثَهُ قَالَ ‏:‏

أَتَيْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ نَائِمٌ عَلَيْهِ ثَوْبٌ أَبْيَضُ ثُمَّ أَتَيْتُهُ فَإِذَا هُوَ نَائِمٌ ثُمَّ أَتَيْتُهُ وَقَدْ اسْتَيْقَظَ فَجَلَسْتُ إِلَيْهِ فَقَالَ ‏ ‏مَا مِنْ عَبْدٍ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ثُمَّ مَاتَ عَلَى ذَلِكَ إِلَّا دَخَلَ الْجَنَّةَ قُلْتُ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قَالَ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قُلْتُ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قَالَ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ ثَلَاثًا ثُمَّ قَالَ فِي الرَّابِعَةِ عَلَى ‏ ‏رَغْمِ ‏ ‏أَنْفِ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏قَالَ فَخَرَجَ ‏ ‏أَبُو ذَرٍّ ‏ ‏وَهُوَ يَقُولُ وَإِنْ ‏ ‏رَغِمَ ‏ ‏أَنْفُ ‏ ‏أَبِي ذَرٍّ ‏

நான் நபி (ஸல்) அவர்களிடம் ஒருமுறை சென்றபோது அவர்கள் வெள்ளை நிற ஆடை அணிந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு மீண்டும் நான் அவர்களிடம் சென்றேன். அப்போதும் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். பிறகு மீண்டும் அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் விழித்திருந்தார்கள். நான் அவர்கள் அருகில் சென்று அமர்ந்தேன்.

அப்போது, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறில்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று உறுதி கூறி, அதே நம்பிக்கையில் இறந்துவிடும் எந்த அடியாரும் சொர்க்கம் புகாமல் இருக்க மாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

நான், “அவர் விபச்சாரம் புரிந்திருந்தாலும், திருடியிருந்தாலுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம்! விபச்சாரம் புரிந்திருந்தாலும் திருடியிருந்தாலுங்கூட” என்று சொன்னார்கள். நான், (மீண்டும்) “அவர் விபச்சாரம் புரிந்திருந்தாலும், திருடியிருந்தாலுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் மீண்டும், “விபச்சாரம் புரிந்திருந்தாலும் திருடியிருந்தாலுங்கூட” என்று சொன்னார்கள். மூன்றாவது முறையும் (நான் கேட்க) முன் சொன்னவாறே பதில் கூறினார்கள்.

நான்காவது முறை, “அபூதர்ரின் *மூக்கு மண்ணைக் கவ்வட்டும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூதர் (ரலி)


குறிப்புகள் :

“அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறி விட்டார்கள்” என்று அபுல் அஸ்வத் அத்தீலீ (ரஹ்) என்ற அறிப்பாளர் கூடுதலாக அறிவிக்கின்றார்.

*எதையும் கவ்வுகின்ற உறுப்பு, வாயே அன்றி மூக்கு அல்ல. எனவே, ‘மூக்கு மண்ணைக் கவ்வட்டும்’ என்பது குறியீட்டுச் சொல்தான். எனவே, அதை நேரடிப் பொருளில் தமிழ்ப் படுத்துவது சரியல்ல. ஒருவரது செயல்/பேச்சு வெறுப்பூட்டுவதாக இருப்பதைக் குறிப்பதற்கு அரபியரின் மொழி வழக்கில், ’அவரது மூக்கு மண்ணைக் கவ்வட்டும்’ என்பர். அதற்கு, “அவரது செயல்/பேச்சு எனக்கு வெறுப்பூட்டுகின்றது” என்பது பொருளாம்.