அத்தியாயம்: 1, பாடம்: 1.10, ஹதீஸ் எண்: 48

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ يَعْنِي ابْنَ الْمُغِيرَةِ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏ثَابِتٌ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏مَحْمُودُ بْنُ الرَّبِيعِ ‏ ‏عَنْ ‏ ‏عِتْبَانَ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏:‏

‏قَدِمْتُ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏فَلَقِيتُ ‏ ‏عِتْبَانَ ‏ ‏فَقُلْتُ حَدِيثٌ بَلَغَنِي عَنْكَ قَالَ أَصَابَنِي فِي بَصَرِي بَعْضُ الشَّيْءِ فَبَعَثْتُ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنِّي أُحِبُّ أَنْ تَأْتِيَنِي فَتُصَلِّيَ فِي مَنْزِلِي فَأَتَّخِذَهُ مُصَلًّى قَالَ فَأَتَى النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَمَنْ شَاءَ اللَّهُ مِنْ أَصْحَابِهِ فَدَخَلَ وَهُوَ ‏ ‏يُصَلِّي فِي مَنْزِلِي وَأَصْحَابُهُ يَتَحَدَّثُونَ بَيْنَهُمْ ثُمَّ أَسْنَدُوا عُظْمَ ذَلِكَ وَكُبْرَهُ إِلَى ‏ ‏مَالِكِ بْنِ دُخْشُمٍ ‏ ‏قَالُوا وَدُّوا أَنَّهُ دَعَا عَلَيْهِ فَهَلَكَ وَوَدُّوا أَنَّهُ أَصَابَهُ شَرٌّ فَقَضَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الصَّلَاةَ وَقَالَ أَلَيْسَ يَشْهَدُ ‏ ‏أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ قَالُوا إِنَّهُ يَقُولُ ذَلِكَ وَمَا هُوَ فِي قَلْبِهِ قَالَ لَا يَشْهَدُ أَحَدٌ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ فَيَدْخُلَ النَّارَ ‏ ‏أَوْ ‏ ‏تَطْعَمَهُ ‏


قَالَ ‏ ‏أَنَسٌ ‏ ‏فَأَعْجَبَنِي هَذَا الْحَدِيثُ فَقُلْتُ لِابْنِي اكْتُبْهُ فَكَتَبَهُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْعَبْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ثَابِتٌ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عِتْبَانُ بْنُ مَالِكٍ ‏ ‏أَنَّهُ عَمِيَ فَأَرْسَلَ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ تَعَالَ فَخُطَّ لِي مَسْجِدًا فَجَاءَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَجَاءَ قَوْمُهُ ‏ ‏وَنُعِتَ ‏ ‏رَجُلٌ مِنْهُمْ يُقَالُ لَهُ ‏ ‏مَالِكُ بْنُ الدُّخْشُمِ ‏ ‏ثُمَّ ذَكَرَ نَحْوَ حَدِيثِ ‏ ‏سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ

நான் மதினாவுக்குச் சென்று இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்களைச் சந்தித்து, “உங்களைப் பற்றிய ஒரு செய்தி எனக்கு எட்டியது (அது உண்மையா? கூறுங்கள்!)” என்றேன்.

அப்போது இத்பான் (ரலி) கூறினார்கள்: எனது பார்வையில் ஏதோ கோளாறு ஏற்பட்டு (எனது கண் பார்வை போய்) விட்டது. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி, “நீங்கள் வந்து எனது வீட்டில் தொழ வேண்டும். அதை நான் தொழுமிடமாக ஆக்கிக் கொள்ள விரும்புகிறேன்” என்று சொல்லியனுப்பினேன். எனவே நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களில் அல்லாஹ் நாடிய சிலரும் (மறு நாள் எனது வீட்டுக்கு) வந்தார்கள்.

நபி (ஸல்) (எனது வீட்டுக்குள்) வந்து வீட்டி(ன் ஒரு மூலையி)ல் தொழுது கொண்டிருந்தார்கள். நபித் தோழர்களோ தம்மிடையே (உள்ள நயவஞ்சகர்களைப் பற்றியும் அவர்களால் தங்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள் பற்றியும்) பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு அதில் மாலிக் பின் துக்ஷுன் என்பவருக்குப் பெரும் பங்கிருப்பதாகப் பேசிக் கொண்டனர். அவருக்கெதிராக நபியவர்கள் பிரார்த்தித்து அவர் அழிந்து போக வேண்டும் என்று மக்கள் விரும்பினர். அவருக்கு ஏதேனும் கேடு நேர வேண்டும் என்றும் விரும்பினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுது முடித்ததும், “வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் அவர் (மாலிக் பின் துக்ஷும்) சாட்சியம் கூறவில்லையா?” என்று கேட்டார்கள். மக்கள் “அவர் அவ்வாறு (சாட்சியம்) கூறுகின்றார். ஆனால், அது அவருடைய இதயத்தில் இல்லையே?” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் சாட்சி கூறும் ஒருவர் நரகத்தில் நுழைய மாட்டார் (அல்லது நரகம் அவரைத் தீண்டாது)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸை மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) அவர்களிடமிருந்து) அறிவிக்கும் அனஸ் (ரலி)  கூறுகின்றார்கள்: இந்த ஹதீஸ் என்னை வியப்படையச் செய்தது. ஆகவே நான் என் மகனிடம் “இதை எழுதி வைத்துக் கொள்” என்று கூறினேன். அவ்வாறே அவர் அதை எழுதி வைத்துக் கொண்டார்.

இத்பான் பின் மாலிக் (ரலி), “எனக்குக் கண் பார்வை போய்விட்டது. ஆகவே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி (எனது வீட்டுக்கு) நீங்கள் வந்து எனக்காக நான் தொழுமிடம் ஒன்றை அறிவியுங்கள் என்று கூறினேன். எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் (எனது வீட்டுக்கு) வந்தனர். அப்போது மாலிக் பின் துக்ஷும் என்றழைக்கப் படும் ஒருவரைப் பற்றி விமர்சிக்கப்பட்டது” என்று கூறினார்கள் என்பதாகக் குறிப்பிட்டுவிட்டு, ஸுலைமான் பின் அல் முஃகீரா (ரஹ்) அவர்களின் மேற்கண்ட அறிவிப்பிலுள்ளதைப் போன்றே அனஸ் (ரலி) தொடர்ந்து கூறினார்கள்.