அத்தியாயம்: 15, பாடம்: 50, ஹதீஸ் எண்: 2285

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْمُحَيَّاةِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَعْلَى أَبُو الْمُحَيَّاةِ ‏ ‏عَنْ ‏ ‏سَلَمَةَ بْنِ كُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ ‏ ‏قَالَ: ‏ ‏

قِيلَ ‏ ‏لِعَبْدِ اللَّهِ ‏ ‏إِنَّ نَاسًا يَرْمُونَ ‏ ‏الْجَمْرَةَ ‏ ‏مِنْ فَوْقِ ‏ ‏الْعَقَبَةِ ‏ ‏قَالَ فَرَمَاهَا ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏مِنْ بَطْنِ الْوَادِي ‏ ‏ثُمَّ  قَالَ ‏‏‏مِنْ هَا هُنَا وَالَّذِي لَا إِلَهَ غَيْرُهُ رَمَاهَا الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ ‏ ‏الْبَقَرَةِ

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) (ஹஜ்ஜின்போது) பத்னுல் வாதி பள்ளத்தாக்கில் நின்று (ஜம்ராவின் மீது) கல்லை எறிந்துகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் “மக்கள் பள்ளத்தாக்கின் மேற்பரப்பில் நின்று ஜம்ராவின் மீது கல்லை எறிகின்றனரே?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! அல்பகரா அத்தியாயம் எவருக்கு அருளப்பெற்றதோ அவர்கள் இங்கிருந்ததுதான் (ஜம்ராவின் மீது) கல்லை எறிந்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 50, ஹதீஸ் எண்: 2284

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏غُنْدَرٌ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ: ‏ ‏

أَنَّهُ حَجَّ مَعَ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ فَرَمَى ‏ ‏الْجَمْرَةَ ‏ ‏بِسَبْعِ حَصَيَاتٍ وَجَعَلَ ‏ ‏الْبَيْتَ ‏ ‏عَنْ يَسَارِهِ ‏ ‏وَمِنًى ‏ ‏عَنْ يَمِينِهِ ‏وَقَالَ هَذَا ‏ ‏مَقَامُ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ ‏ ‏الْبَقَرَةِ ‏

و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ ‏ ‏فَلَمَّا أَتَى ‏ ‏جَمْرَةَ الْعَقَبَةِ

நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் ஹஜ் செய்தேன். அவர்கள் இறையில்லம் கஅபா தமக்கு இடப் பக்கமாகவும், மினா தமக்கு வலப் பக்கமாகவும் இருக்கும்படி (பத்னுல் வாதி பள்ளத்தாக்கில்) நின்று ஜம்ராவின் மீது ஏழு பொடிக் கற்களை எறிந்தார்கள். மேலும், “அல்பகரா அத்தியாயம் எவருக்கு அருளப்பெற்றதோ அவர்கள் (கல்லை எறிந்தபடி) நின்றிருந்த இடம் இதுதான்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்)


குறிப்பு :

உபைதுல்லாஹ் பின் முஆத் (ரஹ்) வழி அறிவிப்பு “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ஜம்ரத்துல் அகபாவிற்குச் சென்றபோது…” என்று தொடங்குகிறது.

அத்தியாயம்: 15, பாடம்: 50, ஹதீஸ் எண்: 2283

‏و حَدَّثَنَا ‏ ‏مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْحَجَّاجَ بْنَ يُوسُفَ ‏ ‏يَقُولُ ‏ ‏وَهُوَ يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ ‏ ‏أَلِّفُوا ‏ ‏الْقُرْآنَ كَمَا ‏ ‏أَلَّفَهُ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏السُّورَةُ الَّتِي يُذْكَرُ فِيهَا ‏ ‏الْبَقَرَةُ ‏ ‏وَالسُّورَةُ الَّتِي يُذْكَرُ فِيهَا ‏ ‏النِّسَاءُ ‏ ‏وَالسُّورَةُ الَّتِي يُذْكَرُ فِيهَا ‏ ‏آلُ ‏ ‏عِمْرَانَ ‏ ‏قَالَ فَلَقِيتُ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏فَأَخْبَرْتُهُ ‏ ‏بِقَوْلِهِ فَسَبَّهُ ‏ ‏وَقَالَ حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ: ‏

‏أَنَّهُ كَانَ مَعَ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ‏ ‏فَأَتَى ‏ ‏جَمْرَةَ الْعَقَبَةِ ‏ ‏فَاسْتَبْطَنَ ‏ ‏الْوَادِي ‏ ‏فَاسْتَعْرَضَهَا ‏ ‏فَرَمَاهَا مِنْ بَطْنِ الْوَادِي بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ مَعَ كُلِّ حَصَاةٍ قَالَ فَقُلْتُ يَا ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏إِنَّ النَّاسَ يَرْمُونَهَا مِنْ فَوْقِهَا فَقَالَ هَذَا وَالَّذِي لَا إِلَهَ غَيْرُهُ ‏ ‏مَقَامُ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ ‏ ‏الْبَقَرَةِ ‏

و حَدَّثَنِي ‏ ‏يَعْقُوبُ الدَّوْرَقِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏قَالَ ‏ ‏سَمِعْتُ ‏ ‏الْحَجَّاجَ ‏ ‏يَقُولُ لَا تَقُولُوا سُورَةُ ‏ ‏الْبَقَرَةِ ‏ ‏وَاقْتَصَّا الْحَدِيثَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏ابْنِ مُسْهِرٍ

ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப் (ஒரு முறை) சொற்பொழிவு மேடை மீதிருந்தபடி, “ஜிப்ரீல் (அலை) தொகுத்தளித்த முறைப்படி குர்ஆனைத் தொகு(த்துப் பதிவு செய்யு)ங்கள். பசுமாட்டைப் பற்றிக் குறிப்பிடும் அத்தியாயம், மகளிர் பற்றிக் குறிப்பிடும் அத்தியாயம், இம்ரானின் சந்ததியர் பற்றிக் குறிப்பிடும் அத்தியாயம் என(பெயரிட்டு)ப் பதிவு செய்யுங்கள்” என்றார்.

நான் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களைச் சந்ததித்தபோது ஹஜ்ஜாஜ் கூறியதைத் தெரிவித்தேன். அப்போது இப்ராஹீம் (ரஹ்), ஹஜ்ஜாஜைக் கடிந்துகொண்டார்கள். பின்னர், அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்), என்னிடம் கூறினார்கள்: “நான் (ஹஜ்ஜின் போது) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (மினாவில்) ஜம்ரத்துல் அகபாவிற்குச் சென்று அதனை ஒட்டியுள்ள பத்னுல் வாதி பள்ளத்தாக்கில் இறங்கி, ஜம்ராவை நோக்கி நின்று அதன் மீது ஏழு பொடிக் கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீரும் கூறினார்கள். அப்போது அவர்களிடம் நான், ‘அபூஅப்திர் ரஹ்மான்! மக்கள் இப்பள்ளத்தாக்கின் மேற்பரப்பில் நின்றவாறு கல்லை எறிகின்றனரே?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! அல் பகரா அத்தியாயம் எவருக்கு அருளப்பெற்றதோ அவர் (கல்லை எறிந்தபடி) நின்றிருந்த இடம் இதுதான்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி), இப்னு யஸீத் (ரஹ்) வழியாக ஸுலைமான் பின் மஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்)


குறிப்பு :

இப்னு அபீ ஸாயிதா வழி அறிவிப்பில், “அல்பகரா அத்தியாயம் எனச் சொல்லாதீர்கள்” என்று ஹஜ்ஜாஜ் கூறியதை நான் செவியுற்றேன் என அஃமஷ் (ரஹ்) கூறியதாக அறிவிப்பு ஆரம்பிக்கிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட அறிவிப்பில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

அத்தியாயம்: 15, பாடம்: 50, ஹதீஸ் எண்: 2282

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ ‏ ‏قَالَ: ‏ ‏

رَمَى ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ ‏ ‏جَمْرَةَ الْعَقَبَةِ ‏ ‏مِنْ بَطْنِ الْوَادِي بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ مَعَ كُلِّ حَصَاةٍ قَالَ فَقِيلَ لَهُ إِنَّ أُنَاسًا يَرْمُونَهَا مِنْ فَوْقِهَا ‏فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ ‏ ‏هَذَا وَالَّذِي لَا إِلَهَ غَيْرُهُ ‏ ‏مَقَامُ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ ‏ ‏الْبَقَرَةِ

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), ‘பத்னுல் வாதி’ பள்ளத்தில் நின்று ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது ஏழு பொடிக் கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறினார்கள். அப்போது அவர்களிடம், “மக்கள் மேற்பரப்பில் நின்றல்லவா கல்லை எறிகின்றனர்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது ஆணையாக! ‘அல்பகரா’ அத்தியாயம் எவருக்கு அருளப் பெற்றதோ (அந்த அல்லாஹ்வின் தூதர்-ஸல்) அவர்கள் (கல்லை எறிந்தபடி) நின்றிருந்த இடம் இதுதான்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்)