அத்தியாயம்: 15, பாடம்: 91, ஹதீஸ் எண்: 2462

‏و حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُقَيْلُ بْنُ خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّهُ قَالَ أَخْبَرَنِي ‏ ‏سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ: ‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏يَتْرُكُونَ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏عَلَى خَيْرِ مَا كَانَتْ لَا ‏ ‏يَغْشَاهَا ‏ ‏إِلَّا ‏ ‏الْعَوَافِي ‏ ‏يُرِيدُ ‏ ‏عَوَافِيَ ‏ ‏السِّبَاعِ وَالطَّيْرِ ‏ ‏ثُمَّ يَخْرُجُ رَاعِيَانِ مِنْ ‏ ‏مُزَيْنَةَ ‏ ‏يُرِيدَانِ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏يَنْعِقَانِ ‏ ‏بِغَنَمِهِمَا فَيَجِدَانِهَا ‏ ‏وَحْشًا ‏ ‏حَتَّى إِذَا بَلَغَا ‏ ‏ثَنِيَّةَ الْوَدَاعِ ‏ ‏خَرَّا عَلَى وُجُوهِهِمَا

“மதீனா சிறந்த நிலையில் இருக்கும்போதே அதைவிட்டு மக்கள் அகன்றுவிடுவர். வன விலங்குகளும் பறவைகளும்தாம் அதைச் சூழ்ந்து கொண்டிருக்கும். பின்னர் ‘முஸைனா’ குலத்தைச் சேர்ந்த இரு இடையர்கள் தம் ஆடுகளைச் சப்தமிட்டு ஓட்டிக்கொண்டு மதீனாவை நோக்கி வருவர். அங்கு வனவிலங்குகளையே காண்பர். அவர்கள் ‘அல்வதா’ மலைக்குன்றை அடைந்ததும் மூர்ச்சையுற்று முகங்குப்புற விழுந்து விடுவர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 91, ஹதீஸ் எண்: 2461

‏حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو صَفْوَانَ ‏ ‏عَنْ ‏ ‏يُونُسَ بْنِ يَزِيدَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ: ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِلْمَدِينَةِ ‏ ‏لَيَتْرُكَنَّهَا أَهْلُهَا عَلَى خَيْرِ مَا كَانَتْ مُذَلَّلَةً ‏ ‏لِلْعَوَافِي ‏ ‏يَعْنِي السِّبَاعَ وَالطَّيْرَ ‏


قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏أَبُو صَفْوَانَ ‏ ‏هَذَا هُوَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَلِكِ ‏ ‏يَتِيمُ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏عَشْرَ سِنِينَ كَانَ فِي ‏ ‏حَجْرِهِ

“மதீனாவாசிகள், மதீனா சிறந்த நிலையில் இருக்கும்போதே, வனவிலங்குகள் மற்றும் பறவைகளின் சரணாலயமாக மதீனாவை விட்டுச் செல்வர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

“இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த அபூஸஃப்வானின் பெயர் அப்துல்லாஹ் பின் அப்தில் மலிக் என்பதாகும். அநாதையாயிருந்த அவர், இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்களின் பொறுப்பில் பத்து ஆண்டுகள் வளர்ந்தார்” என்று இமாம் முஸ்லிம் (ரஹ்) குறிப்பிடுகின்றார்கள்.

அத்தியாயம்: 15, பாடம்: 90, ஹதீஸ் எண்: 2460

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏هِشَامُ بْنُ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ بْنِ أَبِي زُهَيْرٍ ‏ ‏قَالَ: ‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏يُفْتَحُ ‏ ‏الْيَمَنُ ‏ ‏فَيَأْتِي قَوْمٌ ‏ ‏يَبُسُّونَ ‏ ‏فَيَتَحَمَّلُونَ ‏ ‏بِأَهْلِيهِمْ وَمَنْ أَطَاعَهُمْ ‏ ‏وَالْمَدِينَةُ ‏ ‏خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ ثُمَّ يُفْتَحُ ‏ ‏الشَّامُ ‏ ‏فَيَأْتِي قَوْمٌ ‏ ‏يَبُسُّونَ ‏ ‏فَيَتَحَمَّلُونَ ‏ ‏بِأَهْلِيهِمْ وَمَنْ أَطَاعَهُمْ ‏ ‏وَالْمَدِينَةُ ‏ ‏خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ ثُمَّ يُفْتَحُ ‏ ‏الْعِرَاقُ ‏ ‏فَيَأْتِي قَوْمٌ ‏ ‏يَبُسُّونَ ‏ ‏فَيَتَحَمَّلُونَ ‏ ‏بِأَهْلِيهِمْ وَمَنْ أَطَاعَهُمْ ‏ ‏وَالْمَدِينَةُ ‏ ‏خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ

“யமன் நாடு வெற்றி கொள்ளப்படும்; ஒரு கூட்டத்தார் தம் குடும்பத்தாரையும் தமது கட்டுப்பாட்டில் உள்ளோரையும் ஏற்றிக்கொண்டு வாகனங்களை விரட்டியவர்களாக மதீனாவிலிருந்து வெளியேறிவிடுவர். ஆயினும், அவர்கள் அறிந்திருந்தால் மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும்; பின்னர் ஷாம் (சிரியா) நாடு வெற்றி கொள்ளப்படும்; ஒரு கூட்டத்தார் தம் குடும்பத்தாரையும் தமது கட்டுப்பாட்டில் உள்ளோரையும் ஏற்றிக்கொண்டு வாகனங்களை விரட்டியவர்களாக மதீனாவிலிருந்து வெளியேறுவர்; ஆயினும், அவர்கள் அறிந்திருந்தால் மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும்; பின்னர் இராக் வெற்றி கொள்ளப்படும்; ஒரு கூட்டத்தார் தம் குடும்பத்தாரையும் தமது கட்டுப்பாட்டில் உள்ளோரையும் ஏற்றிக்கொண்டு வாகனங்களை விரட்டியவர்களாக மதீனாவிலிருந்து வெளியேறுவர். ஆயினும், அவர்கள் அறிந்திருந்தால் மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸுஃப்யான் பின் அபீஸுஹைர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 90, ஹதீஸ் எண்: 2459

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ بْنِ أَبِي زُهَيْرٍ ‏ ‏قَالَ: ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تُفْتَحُ ‏ ‏الشَّامُ ‏ ‏فَيَخْرُجُ مِنْ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏قَوْمٌ بِأَهْلِيهِمْ ‏ ‏يَبُسُّونَ ‏ ‏وَالْمَدِينَةُ ‏ ‏خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ ثُمَّ تُفْتَحُ ‏ ‏الْيَمَنُ ‏ ‏فَيَخْرُجُ مِنْ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏قَوْمٌ بِأَهْلِيهِمْ ‏ ‏يَبُسُّونَ ‏ ‏وَالْمَدِينَةُ ‏ ‏خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ ثُمَّ تُفْتَحُ ‏ ‏الْعِرَاقُ ‏ ‏فَيَخْرُجُ مِنْ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏قَوْمٌ بِأَهْلِيهِمْ ‏ ‏يَبُسُّونَ ‏ ‏وَالْمَدِينَةُ ‏ ‏خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ

“ஷாம் (சிரியா) நாடு வெற்றி கொள்ளப்படும்; ஒரு கூட்டத்தார் தம் குடும்பத்தாருடன் வாகனங்களை விரட்டிக்கொண்டு மதீனாவிலிருந்து வெளியேறுவர். ஆயினும், அவர்கள் அறிந்திருந்தால் மதீனாவே அவர்களுக்குத் சிறந்ததாகும்; பின்னர் யமன் வெற்றி கொள்ளப்படும்; ஒரு கூட்டத்தார் தம் குடும்பத்தாருடன் வாகனங்களை விரட்டிக்கொண்டு மதீனாவிலிருந்து வெளியேறுவர். ஆயினும், அவர்கள் அறிந்திருந்தால் மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும்; பின்னர் இராக் வெற்றி கொள்ளப்படும்; ஒரு கூட்டத்தார் தம் குடும்பத்தாருடன் வாகனங்களை விரட்டிக்கொண்டு மதீனாவிலிருந்து வெளியேறுவர். ஆயினும், அவர்கள் அறிந்திருந்தால் மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸுஃப்யான் பின் அபீஸுஹைர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 86, ஹதீஸ் எண்: 2439

‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ إِسْمَعِيلَ ابْنِ عُلَيَّةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏وُهَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي إِسْحَقَ ‏ ‏أَنَّهُ حَدَّثَ عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏مَوْلَى ‏ ‏الْمَهْرِيِّ: ‏

أَنَّهُ أَصَابَهُمْ ‏ ‏بِالْمَدِينَةِ ‏ ‏جَهْدٌ وَشِدَّةٌ وَأَنَّهُ أَتَى ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏فَقَالَ لَهُ إِنِّي كَثِيرُ الْعِيَالِ وَقَدْ أَصَابَتْنَا شِدَّةٌ فَأَرَدْتُ أَنْ أَنْقُلَ عِيَالِي إِلَى بَعْضِ الرِّيفِ فَقَالَ ‏ ‏أَبُو سَعِيدٍ ‏ ‏لَا تَفْعَلْ الْزَمْ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏فَإِنَّا خَرَجْنَا مَعَ نَبِيِّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَظُنُّ أَنَّهُ قَالَ حَتَّى قَدِمْنَا ‏ ‏عُسْفَانَ ‏ ‏فَأَقَامَ بِهَا ‏ ‏لَيَالِيَ فَقَالَ النَّاسُ وَاللَّهِ مَا نَحْنُ هَا هُنَا فِي شَيْءٍ وَإِنَّ عِيَالَنَا ‏ ‏لَخُلُوفٌ ‏ ‏مَا نَأْمَنُ عَلَيْهِمْ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ مَا هَذَا الَّذِي بَلَغَنِي مِنْ حَدِيثِكُمْ ‏ ‏مَا أَدْرِي كَيْفَ قَالَ وَالَّذِي أَحْلِفُ بِهِ أَوْ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ هَمَمْتُ أَوْ إِنْ شِئْتُمْ لَا أَدْرِي أَيَّتَهُمَا قَالَ ‏ ‏لَآمُرَنَّ بِنَاقَتِي تُرْحَلُ ثُمَّ لَا أَحُلُّ لَهَا عُقْدَةً حَتَّى أَقْدَمَ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏وَقَالَ ‏ ‏اللَّهُمَّ إِنَّ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏حَرَّمَ ‏ ‏مَكَّةَ ‏ ‏فَجَعَلَهَا حَرَمًا وَإِنِّي حَرَّمْتُ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏حَرَامًا مَا بَيْنَ ‏ ‏مَأْزِمَيْهَا أَنْ لَا ‏ ‏يُهْرَاقَ ‏ ‏فِيهَا دَمٌ وَلَا يُحْمَلَ فِيهَا سِلَاحٌ لِقِتَالٍ وَلَا تُخْبَطَ فِيهَا شَجَرَةٌ إِلَّا لِعَلْفٍ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ‏ ‏صَاعِنَا ‏ ‏اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ‏ ‏مُدِّنَا ‏ ‏اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ‏ ‏صَاعِنَا ‏ ‏اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ‏ ‏مُدِّنَا ‏ ‏اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا اللَّهُمَّ اجْعَلْ مَعَ الْبَرَكَةِ بَرَكَتَيْنِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا مِنْ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏شِعْبٌ ‏ ‏وَلَا ‏ ‏نَقْبٌ ‏ ‏إِلَّا عَلَيْهِ مَلَكَانِ يَحْرُسَانِهَا حَتَّى تَقْدَمُوا إِلَيْهَا ثُمَّ قَالَ لِلنَّاسِ ارْتَحِلُوا فَارْتَحَلْنَا فَأَقْبَلْنَا إِلَى ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏فَوَالَّذِي نَحْلِفُ بِهِ ‏ ‏أَوْ يُحْلَفُ بِهِ الشَّكُّ مِنْ ‏ ‏حَمَّادٍ ‏ ‏مَا وَضَعْنَا ‏ ‏رِحَالَنَا ‏ ‏حِينَ دَخَلْنَا ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏حَتَّى أَغَارَ عَلَيْنَا ‏ ‏بَنُو عَبْدِ اللَّهِ بْنِ غَطَفَانَ ‏ ‏وَمَا يَهِيجُهُمْ قَبْلَ ذَلِكَ شَيْءٌ

மதீனாவில் (ஒரு முறை) மக்களுக்குப் பஞ்சமும் கஷ்டமும் ஏற்பட்டன. அப்போது நான் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்று “நான் பெரிய குடும்பஸ்தனாவேன்; எங்களுக்குக் கடுமை(யான நெருக்கடி) ஏற்பட்டுள்ளது. எனவே, நான் என் குடும்பத்தாருடன் (மதீனாவைவிட்டு) ஏதேனும் ஒரு செழிப்பான ஊருக்கு இடம்பெயர விரும்புகின்றேன்” என்று கூறினேன். அதற்கு அபூஸயீத் (ரலி), “அவ்வாறு செய்யாதே! மதீனாவையே (உங்கள் இருப்பிடமாக) வைத்துக்கொள்! ஏனெனில், நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டு ‘உஸ்ஃபான்’ எனும் இடத்திற்குச் சென்றோம். அங்குப் பல இரவுகள் தங்கினோம். அப்போது மக்களில் சிலர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நாம் இங்கு எந்த (நிம்மதியான) நிலையிலும் இல்லை. நம் குடும்பத்தார் தனிமையில் உள்ளனர். அவர்களைக் குறித்து அச்ச நிலையிலேயே இருக்கின்றோம்” என்று கூறினர்.

இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, “நீங்கள் சொன்னதாக எனக்கு எட்டியுள்ள இத்தகவல் என்ன? நான் எவன்மீது சத்தியம் செய்வேனோ அல்லது என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் விரும்பினால்’ எனது ஒட்டகத்தில் சேணத்தைப் பூட்டுமாறு கட்டளையிட்டு, அதன் முடிச்சுகள் எதையும் அவிழ்க்காமல் (விரைந்து) நான் மதீனாவிற்குச் செல்ல வேண்டும்; அல்லது (அவ்வாறு செல்ல) நான் எண்ணுகின்றேன்” என்று கூறிவிட்டு, “இறைவா! இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகரமாக ஆக்கினார்கள். நான் மதீனாவின் இரு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் புனிதமானதாக ஆக்கினேன். மதீனாவிற்குள் இரத்தம் சிந்தப்படக் கூடாது. அங்குப் போருக்காக ஆயுதம் ஏந்தப்படக் கூடாது. அங்குத் தீனிக்காகத் தவிர எந்தத் தாவரமும் வெட்டப்படக் கூடாது. இறைவா! எங்கள் மதீனாவில் எங்களுக்கு வளம் சேர்ப்பாயாக! இறைவா! எங்கள் (முகத்தல் அளவையான) ‘ஸாஉ’வில் எங்களுக்கு வளத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! எங்கள் ‘முத்’துவிலும் எங்களுக்கு வளத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! எங்கள் ‘ஸாஉ’விலும், எங்கள் ‘முத்’துவிலும், எங்கள் நகரத்திலும் எங்களுக்கு வளம் சேர்ப்பாயாக! இறைவா! இப்போதுள்ள வளத்துடன் இரு(மடங்கு) வளத்தை ஏற்படுத்துவாயாக!” (என்று பிரார்த்தித்தார்கள். பிறகு) “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! மதீனாவின் அனைத்துக் கனவாய்களிலும் சாலை முனைகளிலும் நீங்கள் மதீனா சென்றடையும் வரை இரு வானவர்கள் இருந்து அதைக் காவல் புரிந்துகொண்டே இருக்கின்றனர்” என்று கூறினார்கள்.

பிறகு மக்களிடம், “புறப்படுங்கள்!” என்றார்கள். அவ்வாறே நாங்கள் மதீனாவை நோக்கிப் புறப்பட்டோம். “நாங்கள் எவன்மீது சத்தியம் செய்வோமோ அல்லது எவன்மீது சத்தியம் செய்யப்படுமோ அவன்மீது ஆணையாக! (-இங்கு அறிவிப்பாளர் ஹம்மாம் பின் இஸ்மாயீல் (ரஹ்) அவர்களே ஐயத்துடன் அறிவிக்கிறார்கள்.-) நாங்கள் மதீனாவிற்குள் நுழைந்து எங்கள் ஒட்டகங்களிலிருந்து சேணங்களை நாங்கள் இறக்கி வைத்திருக்கவில்லை. அதற்குள் எங்கள்மீது அப்துல்லாஹ் பின் ஃகத்ஃபானின் மக்கள் தாக்குதல் தொடுத்தனர். அதற்கு முன் (தாக்குதல் தொடுக்க) எந்தத் தூண்டுகோலும் அவர்களுக்கு இருக்கவில்லை.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) வழியாக மஹ்ரீயின் முன்னாள் அடிமையான அபூஸயீத் (ரஹ்)