அத்தியாயம்: 1, பாடம்: 64, ஹதீஸ் எண்: 206

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏قَالَ ‏

‏حَدَّثَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَدِيثَيْنِ قَدْ رَأَيْتُ أَحَدَهُمَا وَأَنَا أَنْتَظِرُ الْآخَرَ حَدَّثَنَا ‏ ‏أَنَّ الْأَمَانَةَ نَزَلَتْ فِي جَذْرِ قُلُوبِ الرِّجَالِ ثُمَّ نَزَلَ الْقُرْآنُ فَعَلِمُوا مِنْ الْقُرْآنِ وَعَلِمُوا مِنْ السُّنَّةِ ‏

‏ثُمَّ حَدَّثَنَا عَنْ رَفْعِ الْأَمَانَةِ قَالَ ‏ ‏يَنَامُ الرَّجُلُ النَّوْمَةَ فَتُقْبَضُ الْأَمَانَةُ مِنْ قَلْبِهِ فَيَظَلُّ أَثَرُهَا مِثْلَ ‏ ‏الْوَكْتِ ‏ ‏ثُمَّ يَنَامُ النَّوْمَةَ فَتُقْبَضُ الْأَمَانَةُ مِنْ قَلْبِهِ فَيَظَلُّ أَثَرُهَا مِثْلَ ‏ ‏الْمَجْلِ ‏ ‏كَجَمْرٍ دَحْرَجْتَهُ عَلَى رِجْلِكَ ‏ ‏فَنَفِطَ ‏ ‏فَتَرَاهُ ‏ ‏مُنْتَبِرًا ‏ ‏وَلَيْسَ فِيهِ شَيْءٌ ثُمَّ أَخَذَ حَصًى فَدَحْرَجَهُ عَلَى رِجْلِهِ فَيُصْبِحُ النَّاسُ يَتَبَايَعُونَ لَا يَكَادُ أَحَدٌ يُؤَدِّي الْأَمَانَةَ حَتَّى يُقَالَ إِنَّ فِي بَنِي فُلَانٍ رَجُلًا أَمِينًا حَتَّى يُقَالَ لِلرَّجُلِ مَا ‏ ‏أَجْلَدَهُ ‏ ‏مَا أَظْرَفَهُ مَا أَعْقَلَهُ وَمَا فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ وَلَقَدْ أَتَى عَلَيَّ زَمَانٌ وَمَا أُبَالِي أَيَّكُمْ ‏ ‏بَايَعْتُ ‏ ‏لَئِنْ كَانَ مُسْلِمًا ‏ ‏لَيَرُدَّنَّهُ ‏ ‏عَلَيَّ دِينُهُ وَلَئِنْ كَانَ نَصْرَانِيًّا أَوْ يَهُودِيًّا لَيَرُدَّنَّهُ عَلَيَّ ‏ ‏سَاعِيهِ ‏ ‏وَأَمَّا الْيَوْمَ فَمَا كُنْتُ لِأُبَايِعَ مِنْكُمْ إِلَّا فُلَانًا وَفُلَانًا ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏

(நம்பி ஒப்படைக்கப்படும்) அமானிதம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு இரு செய்திகளைக் கூறியிருந்தார்கள். அவற்றில் ஒன்றை நான் (என் வாழ்நாளிலேயே) கண்டு கொண்டேன்; மற்றொன்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

“மனிதர்களின் ஆழ்மனதில் அமானிதம் என்பது (ஓர் இயல்பாக அல்லாஹ்வால்) அருளப் பட்டது. பிறகு குர்ஆன் அருளப்பெற்றபோது குர்ஆனிலிருந்தும் (எனது வழியான) ‘சுன்னா’விலிருந்தும் அதை(க் கூடுதலாக) அறிந்து (அதிகப் படுத்திக்) கொண்டார்கள்” என்று நபி (ஸல்) கூறியிருந்தார்கள்.

மேலும், “மனிதன் ஒருமுறை உறங்குவான். (உறக்கத்திலேயே) அவனது உள்ளத்திலிருந்து (நம்பி ஒப்படைக்கப் படுவதைப் பாதுகாக்கும்) அமானிதத் தன்மை (சிறிது) கைப்பற்றப்படும். அதன் அடையாளம் ஒரு சிறுபுள்ளி அளவுக்கு (அவனில்) நிலைத்து விடும். பிறகு மீண்டும் ஒருமுறை அவன் உறங்கும்போது (மறுபடியும்) அது கைப்பற்றப்படும். இம்முறை அதன் அடையாளம் (கடின உழைப்பால் ஏற்படும்) காய்ப்பு அளவுக்கு அவனில் நிலைத்து விடும். (அமானித இழப்பு என்பது) உனது காலில் தீக்கங்கை உருட்டி விட்டு, அதனால் கால் கொப்புளித்து உப்பி விடுவதைப் போன்றதாகும். பார்வைக்கு அது உப்பிப் பெரியதாகத் தெரியும். ஆனால், அதனுள் ஒன்றும் இருக்காது” என்று கூறும்போது நபி (ஸல்) அவர்கள் சிறு கற்களை எடுத்துத் தமது காலால் உருட்டிக் காட்டினார்கள்.

“பொழுது விடிந்ததும் மக்கள் தங்களிடையே கொடுக்கல்-வாங்கல் செய்து கொள்வார்கள். (ஆனால், அவர்களில்) யாருமே அமானிதம் பேண மாட்டார்கள். ‘இன்னாருடைய மக்களில் நம்பிக்கைக்கு உரிய ஒருவர் இருக்கிறார்’ என்று சொல்லப்படும் (அளவுக்கு நம்பிக்கைக்கு உரியவர்கள் அரிதாகி விடுவார்கள்). மேலும், ஒருவரைப் பற்றி ‘அவருடைய வீரம்தான் என்ன? அவருடைய விவேகம்தான் என்ன? அவருடைய அறிவுதான் என்ன?’ என்று (சிறப்பித்துக்) கூறப்படும். ஆனால், அவருடைய இதயத்தில் கடுகளவுகூட இறைநம்பிக்கை இருக்காது” என்பது அமானிதம் (அருகிப் போவது) பற்றி நபி (ஸல்) கூறியிருந்த இன்னொரு செய்தியாகும்.

ஒரு காலம் இருந்தது. அக்காலத்தில் நான் உங்களில் யார்-யாரிடம் கொடுக்கல்-வாங்கல் செய்யலாம் என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருந்ததில்லை. (ஏனெனில்,) முஸ்லிமாக இருந்தால், இஸ்லாம் (என்னிடம்) அவர் பட்ட கடனை மீட்டுத் தந்து விடும். கிறிஸ்துவராகவோ யூதராகவோ இருந்தால் அவருக்கான அதிகாரி அவரிடமிருந்து மீட்டுத் தந்து விடுவார். ஆனால், இன்றோ நான் இன்னார், இன்னார் என்று (பார்த்துப் பார்த்துக்) கொடுக்கல்-வாங்கல் செய்ய வேண்டிய காலமாகி விட்டது.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா (ரலி)

Share this Hadith:

Leave a Comment