அத்தியாயம்: 1, பாடம்: 64, ஹதீஸ் எண்: 207

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ يَعْنِي سُلَيْمَانَ بْنَ حَيَّانَ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ طَارِقٍ ‏ ‏عَنْ ‏ ‏رِبْعِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏قَالَ ‏:‏ ‏

‏كُنَّا عِنْدَ ‏ ‏عُمَرَ ‏ ‏فَقَالَ أَيُّكُمْ سَمِعَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَذْكُرُ الْفِتَنَ فَقَالَ قَوْمٌ نَحْنُ سَمِعْنَاهُ فَقَالَ لَعَلَّكُمْ تَعْنُونَ ‏ ‏فِتْنَةَ ‏ ‏الرَّجُلِ فِي أَهْلِهِ وَجَارِهِ قَالُوا أَجَلْ قَالَ تِلْكَ تُكَفِّرُهَا الصَّلَاةُ وَالصِّيَامُ وَالصَّدَقَةُ وَلَكِنْ أَيُّكُمْ سَمِعَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَذْكُرُ الْفِتَنَ الَّتِي ‏ ‏تَمُوجُ ‏ ‏مَوْجَ الْبَحْرِ قَالَ ‏ ‏حُذَيْفَةُ ‏ ‏فَأَسْكَتَ الْقَوْمُ فَقُلْتُ أَنَا قَالَ أَنْتَ ‏ ‏لِلَّهِ أَبُوكَ ‏ ‏قَالَ ‏ ‏حُذَيْفَةُ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏تُعْرَضُ الْفِتَنُ عَلَى الْقُلُوبِ كَالْحَصِيرِ عُودًا عُودًا فَأَيُّ قَلْبٍ ‏ ‏أُشْرِبَهَا ‏ ‏نُكِتَ ‏ ‏فِيهِ نُكْتَةٌ سَوْدَاءُ وَأَيُّ قَلْبٍ ‏ ‏أَنْكَرَهَا ‏ ‏نُكِتَ ‏ ‏فِيهِ ‏ ‏نُكْتَةٌ ‏ ‏بَيْضَاءُ حَتَّى تَصِيرَ عَلَى قَلْبَيْنِ عَلَى أَبْيَضَ مِثْلِ ‏ ‏الصَّفَا ‏ ‏فَلَا تَضُرُّهُ فِتْنَةٌ مَا دَامَتْ السَّمَاوَاتُ وَالْأَرْضُ وَالْآخَرُ أَسْوَدُ ‏ ‏مُرْبَادًّا ‏ ‏كَالْكُوزِ ‏ ‏مُجَخِّيًا ‏ ‏لَا يَعْرِفُ مَعْرُوفًا وَلَا يُنْكِرُ مُنْكَرًا إِلَّا مَا ‏ ‏أُشْرِبَ ‏ ‏مِنْ هَوَاهُ ‏

‏قَالَ ‏ ‏حُذَيْفَةُ ‏ ‏وَحَدَّثْتُهُ ‏ ‏أَنَّ بَيْنَكَ وَبَيْنَهَا بَابًا مُغْلَقًا يُوشِكُ أَنْ يُكْسَرَ قَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏أَكَسْرًا لَا أَبَا لَكَ فَلَوْ أَنَّهُ فُتِحَ لَعَلَّهُ كَانَ يُعَادُ قُلْتُ لَا بَلْ يُكْسَرُ وَحَدَّثْتُهُ أَنَّ ذَلِكَ الْبَابَ رَجُلٌ يُقْتَلُ أَوْ يَمُوتُ حَدِيثًا لَيْسَ بِالْأَغَالِيطِ


‏قَالَ ‏ ‏أَبُو خَالِدٍ ‏ ‏فَقُلْتُ ‏ ‏لِسَعْدٍ ‏ ‏يَا ‏ ‏أَبَا مَالِكٍ ‏ ‏مَا أَسْوَدُ ‏ ‏مُرْبَادًّا ‏ ‏قَالَ شِدَّةُ الْبَيَاضِ فِي سَوَادٍ قَالَ قُلْتُ فَمَا الْكُوزُ ‏ ‏مُجَخِّيًا ‏ ‏قَالَ مَنْكُوسًا ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَرْوَانُ الْفَزَارِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مَالِكٍ الْأَشْجَعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏رِبْعِيٍّ ‏ ‏قَالَ ‏ ‏لَمَّا قَدِمَ ‏ ‏حُذَيْفَةُ ‏ ‏مِنْ عِنْدِ ‏ ‏عُمَرَ ‏ ‏جَلَسَ فَحَدَّثَنَا فَقَالَ إِنَّ أَمِيرَ الْمُؤْمِنِينَ أَمْسِ لَمَّا جَلَسْتُ إِلَيْهِ سَأَلَ أَصْحَابَهُ أَيُّكُمْ يَحْفَظُ قَوْلَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الْفِتَنِ وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏أَبِي خَالِدٍ ‏ ‏وَلَمْ يَذْكُرْ تَفْسِيرَ ‏ ‏أَبِي مَالِكٍ ‏ ‏لِقَوْلِهِ مُرْبَادًّا مُجَخِّيًا ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَعَمْرُو بْنُ عَلِيٍّ ‏ ‏وَعُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ التَّيْمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏نُعَيْمِ بْنِ أَبِي هِنْدٍ ‏ ‏عَنْ ‏ ‏رِبْعِيِّ بْنِ حِرَاشٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏أَنَّ ‏ ‏عُمَرَ ‏ ‏قَالَ مَنْ يُحَدِّثُنَا أَوْ قَالَ أَيُّكُمْ يُحَدِّثُنَا وَفِيهِمْ ‏ ‏حُذَيْفَةُ ‏ ‏مَا قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الْفِتْنَةِ قَالَ ‏ ‏حُذَيْفَةُ ‏ ‏أَنَا وَسَاقَ الْحَدِيثَ كَنَحْوِ حَدِيثِ ‏ ‏أَبِي مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏رِبْعِيٍّ ‏ ‏وَقَالَ فِي الْحَدِيثِ قَالَ ‏ ‏حُذَيْفَةُ ‏ ‏حَدَّثْتُهُ حَدِيثًا لَيْسَ بِالْأَغَالِيطِ وَقَالَ ‏ ‏يَعْنِي أَنَّهُ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم

நாங்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது “சோதனை (ஃபித்னா) பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றவர்கள் உங்களுள் யாவர்?” என்று உமர் (ரலி) கேட்டார்கள். அப்போது சிலர், “நாங்கள் செவியுற்றுள்ளோம்” என்று கூறினர். உமர் (ரலி), “ஒருவர், தம் குடும்பத்தாரிடமும் அண்டை வீட்டாரிடமும் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதையே நீங்கள் நினைக்கிறீர்கள் போலும்” என்று கூறினார்கள். அதற்கு அம்மக்கள், “ஆம்” என்றனர். அதற்கு, “தொழுகை, நோன்பு, தான-தர்மம் செய்தல் ஆகியவை அவ்வகை சோதனைக்கான பரிகாரங்களாக அமைந்து விடும். (அதுவன்று!) கடல் அலைகளைப் போன்று அடுக்கடுக்காகத் தோன்றும் என நபி (ஸல்) கூறிய (அரசியல் குழப்பம் எனும்) ஃபித்னாவைப் பற்றிச் செவியுற்றவர் உங்களில் யார்?” என்று உமர் (ரலி) கேட்டார்கள். மக்கள் அமைதியாக இருந்தனர். நான் (முன்வந்து), “நான் (செவியுற்றுள்ளேன்)” என்று கூறினேன். “நீங்களா (செவியுற்றவர்?) உங்கள் தந்தை அல்லாஹ்வுக்கு உரியவராகட்டும்! (சொல்லுங்கள்)” என்று உமர் (ரலி) கேட்க, நான் கூறலானேன்:

“ஒரு கோரையை அடுத்து இன்னொரு கோரையாக வைத்துப் பாய் பின்னப்படுவதைப் போன்று மக்களின் உள்ளங்களில் சோதனைகள் பின்னப்படும். அந்தச் சோதனைகளில் அமிழ்ந்து விடுகிற உள்ளத்தில் ஒரு கரும்புள்ளி இடப்படும்; (சோதனைகளை மதிக்காமல்) நிராகரித்து விடுகிற உள்ளத்தில் ஒரு வெண்புள்ளி இடப்படும். இவ்வாறு சோதனைகள் இருவிதமான உள்ளங்களில் ஏற்படுகின்றன. ஒன்று, வெண்பாறை போன்று தூய்மையானது; வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும்வரை எந்தச் சோதனையும் அதற்கு இடரளிக்காது. மற்றொன்று, சிறிதளவே வெண்மை கலந்த கருத்த உள்ளம். அது தலைகீழாகக் கவிழ்க்கப்பட்ட கூஜாவைப் போன்று நல்லதையும் அறியாது; தீயதையும் நிராகரிக்காது. தன் மனோ இச்சையைப் பின்பற்றுவதைத் தவிர வேறெதையும் அது அறியாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொல்லச் செவியுற்றேன்.

(தொடர்ந்து) “உங்களுக்கும் அந்தக் குழப்பங்களுக்கும் இடையே மூடிய கதவு ஒன்று உண்டு; அக்கதவு (விரைவில்) உடைக்கப்படக் கூடும்” என்று கூறினேன். உடனே உமர் (ரலி) அவர்கள், “நீர் தந்தையற்றுப் போவீர்! அது உடைக்கத்தான் படுமா? அது திறக்கப்பட்டால் மீண்டும் அது மூடப்பட முடியுமே!” என்று வினவினார்கள். நான், “இல்லை; அது (திறக்கப்படாமல்) உடைக்கத்தான் படும்” என்று சொன்னேன். மேலும் நான் அவர்களிடம், “அந்தக் கதவு என்பது கொல்லப்பட/இறந்துபோக இருக்கும் ஒரு மனிதர்தாம். இது உண்மைச் செய்தி; கட்டுக்கதையன்று” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா (ரலி)


குறிப்பு:

ஸஅத் பின் தாரிக் (ரஹ்) அவர்களிடம், “அபூமாலிக்கே! (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘அஸ்வது முர்பாத்தன்’ என்பதன் பொருள் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “கறுப்பில் தூய வெள்ளை” என்று கூறினார்கள். “அல்கூஸு முஜக்கியன் என்பதன் பொருள் என்ன?” என்று கேட்டேன். அதற்கு, “தலைகீழாகக் கவிழ்க்கப்பட்ட கூஜா” என்று பதிலளித்தார்கள் என இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அபூகாலித் (ரஹ்) கூறுகிறார்.

ரிப்யீ (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் நேற்று இறைநம்பிக்கையாளர்களின் தலைவரிடம் அமர்ந்திருந்தபோது அவர்கள் தம் தோழர்களிடம், உங்களில் (இனி தலைதூக்கவிருக்கும் அரசியல்) குழப்பங்கள் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னதை நினைவில் வைத்திருப்பவர் யார்? என்று கேட்டார்கள்” என்று ஹுதைஃபா (ரலி) தொடங்கியதாகக் குறிப்பிடப் படுகிறது. அபூமாலிக் ஸஅத் பின் தாரிக் (ரஹ்) அளித்த விளக்கம் அதில் இடம்பெறவில்லை.

முஹம்மது பின் அபீ அதீ (ரஹ்) வழி அறிவிப்பில், உமர் (ரலி) மக்களிடம் “(அரசியல்) குழப்பங்கள் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை எமக்கு அறிவிப்பவர் உங்களில் யார்?” என்று கேட்டார்கள். அங்கு இருந்த ஹுதஃபா (ரலி), “நான் (கேட்டிருக்கின்றேன்)” என்று தொடங்கியதாகவும் இறுதியில், “இது கட்டுக்கதையன்று; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதுதான்” என்று சொன்னதாகவும் குறிப்பிடப்படுகிறது.

அத்தியாயம்: 1, பாடம்: 64, ஹதீஸ் எண்: 206

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏قَالَ ‏:‏ ‏

‏حَدَّثَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَدِيثَيْنِ قَدْ رَأَيْتُ أَحَدَهُمَا وَأَنَا أَنْتَظِرُ الْآخَرَ حَدَّثَنَا ‏ ‏أَنَّ الْأَمَانَةَ نَزَلَتْ فِي جَذْرِ قُلُوبِ الرِّجَالِ ثُمَّ نَزَلَ الْقُرْآنُ فَعَلِمُوا مِنْ الْقُرْآنِ وَعَلِمُوا مِنْ السُّنَّةِ ‏

‏ثُمَّ حَدَّثَنَا عَنْ رَفْعِ الْأَمَانَةِ قَالَ ‏ ‏يَنَامُ الرَّجُلُ النَّوْمَةَ فَتُقْبَضُ الْأَمَانَةُ مِنْ قَلْبِهِ فَيَظَلُّ أَثَرُهَا مِثْلَ ‏ ‏الْوَكْتِ ‏ ‏ثُمَّ يَنَامُ النَّوْمَةَ فَتُقْبَضُ الْأَمَانَةُ مِنْ قَلْبِهِ فَيَظَلُّ أَثَرُهَا مِثْلَ ‏ ‏الْمَجْلِ ‏ ‏كَجَمْرٍ دَحْرَجْتَهُ عَلَى رِجْلِكَ ‏ ‏فَنَفِطَ ‏ ‏فَتَرَاهُ ‏ ‏مُنْتَبِرًا ‏ ‏وَلَيْسَ فِيهِ شَيْءٌ ثُمَّ أَخَذَ حَصًى فَدَحْرَجَهُ عَلَى رِجْلِهِ فَيُصْبِحُ النَّاسُ يَتَبَايَعُونَ لَا يَكَادُ أَحَدٌ يُؤَدِّي الْأَمَانَةَ حَتَّى يُقَالَ إِنَّ فِي بَنِي فُلَانٍ رَجُلًا أَمِينًا حَتَّى يُقَالَ لِلرَّجُلِ مَا ‏ ‏أَجْلَدَهُ ‏ ‏مَا أَظْرَفَهُ مَا أَعْقَلَهُ وَمَا فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ وَلَقَدْ أَتَى عَلَيَّ زَمَانٌ وَمَا أُبَالِي أَيَّكُمْ ‏ ‏بَايَعْتُ ‏ ‏لَئِنْ كَانَ مُسْلِمًا ‏ ‏لَيَرُدَّنَّهُ ‏ ‏عَلَيَّ دِينُهُ وَلَئِنْ كَانَ نَصْرَانِيًّا أَوْ يَهُودِيًّا لَيَرُدَّنَّهُ عَلَيَّ ‏ ‏سَاعِيهِ ‏ ‏وَأَمَّا الْيَوْمَ فَمَا كُنْتُ لِأُبَايِعَ مِنْكُمْ إِلَّا فُلَانًا وَفُلَانًا


و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

(நம்பி ஒப்படைக்கப்படும்) அமானிதம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்கு இரு செய்திகளைக் கூறியிருந்தார்கள். அவற்றில் ஒன்றை நான் (என் வாழ்நாளிலேயே) கண்டு கொண்டேன்; மற்றொன்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

“மனிதர்களின் ஆழ்மனத்தில் அமானிதம் என்பது (ஓர் இயல்பாக அல்லாஹ்வால்) அருளப்பட்டது. பிறகு குர்ஆன் அருளப்பெற்றபோது குர்ஆனிலிருந்தும் (எனது வழியான) ‘ஸுன்னா’விலிருந்தும் அதை(க் கூடுதலாக) மக்கள் அறிந்து (அதிகப்படுத்திக்) கொண்டார்கள்” என்று நபி (ஸல்) கூறியிருந்தார்கள்.

மேலும், “மனிதன் ஒருமுறை உறங்குவான். (உறக்கத்திலேயே) அவனது உள்ளத்திலிருந்து (நம்பி ஒப்படைக்கப்படுவதைப் பாதுகாக்கும்) அமானிதத் தன்மை (சிறிது) கைப்பற்றப்படும். அதன் அடையாளம் ஒரு சிறுபுள்ளி அளவுக்கு (அவனில்) நிலைத்துவிடும். பிறகு மீண்டும் ஒருமுறை அவன் உறங்கும்போது (மறுபடியும்) அது கைப்பற்றப்படும். இம்முறை அதன் அடையாளம் (கடின உழைப்பால் ஏற்படும்) காய்ப்பு அளவுக்கு அவனில் நிலைத்து விடும். (அமானித இழப்பு என்பது) உனது காலில் தீக்கங்கை உருட்டி விட்டு, அதனால் கால் கொப்புளித்து உப்பி விடுவதைப் போன்றதாகும். பார்வைக்கு அது உப்பிப் பெரியதாகத் தெரியும். ஆனால், அதனுள் ஒன்றும் இருக்காது” என்று கூறும்போது நபி (ஸல்) சிறு கற்களை எடுத்துத் தமது காலால் உருட்டிக் காட்டினார்கள்.

“பொழுது விடிந்ததும் மக்கள் தங்களிடையே கொடுக்கல்-வாங்கல் செய்து கொள்வார்கள். (ஆனால், அவர்களில்) யாருமே அமானிதம் பேண மாட்டார்கள். ‘இன்னாருடைய மக்களில் நம்பிக்கைக்கு உரிய ஒருவர் இருக்கின்றார்’ என்று சொல்லப்படும் (அளவுக்கு நம்பிக்கைக்கு உரியவர்கள் அரிதாகி விடுவார்கள்). மேலும், ஒருவரைப் பற்றி ‘அவருடைய வீரம்தான் என்ன? அவருடைய விவேகம்தான் என்ன? அவருடைய அறிவுதான் என்ன?’ என்று (சிறப்பித்துக்) கூறப்படும். ஆனால், அவருடைய இதயத்தில் கடுகளவுகூட இறைநம்பிக்கை இருக்காது” என்பது அமானிதம் (அருகிப் போவது) பற்றி நபி (ஸல்) கூறியிருந்த இன்னொரு செய்தியாகும்.

ஒரு காலம் இருந்தது. அக்காலத்தில் நான் உங்களில் யார்-யாரிடம் கொடுக்கல்-வாங்கல் செய்யலாம் என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருந்ததில்லை. (ஏனெனில்,) முஸ்லிமாக இருந்தால், இஸ்லாம் (என்னிடம்) அவர் பட்ட கடனை மீட்டுத் தந்துவிடும். கிறிஸ்துவராகவோ யூதராகவோ இருந்தால் அவருக்கான அதிகாரி அவரிடமிருந்து மீட்டுத் தந்துவிடுவார். ஆனால், இன்றோ நான் இன்னார், இன்னார் என்று (பார்த்துப் பார்த்துக்) கொடுக்கல்-வாங்கல் செய்ய வேண்டிய காலமாகிவிட்டது.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா (ரலி)