அத்தியாயம்: 1, பாடம்: 71, ஹதீஸ் எண்: 221

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ مِينَاءَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَاللَّهِ ‏ ‏لَيَنْزِلَنَّ ‏ ‏ابْنُ مَرْيَمَ ‏ ‏حَكَمًا عَادِلًا فَلَيَكْسِرَنَّ الصَّلِيبَ وَلَيَقْتُلَنَّ الْخِنْزِيرَ ‏ ‏وَلَيَضَعَنَّ ‏ ‏الْجِزْيَةَ ‏ ‏وَلَتُتْرَكَنَّ ‏ ‏الْقِلَاصُ ‏ ‏فَلَا ‏ ‏يُسْعَى عَلَيْهَا وَلَتَذْهَبَنَّ الشَّحْنَاءُ وَالتَّبَاغُضُ وَالتَّحَاسُدُ وَلَيَدْعُوَنَّ إِلَى الْمَالِ فَلَا يَقْبَلُهُ أَحَدٌ ‏

“அல்லாஹ்வின் மீதாணையாக! மர்யமின் மைந்தர் நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக (உலக அழிவுக்குமுன்) இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; அப்போது (விலையுயர்ந்த) ஒட்டகங்கள் (கண்டுகொள்ளப் படாமல்) விடப்படும். அவற்றை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். (மக்களிடையே) பகைமையும் வெறுப்பும் பொறாமையும் அகன்று விடும். செல்வங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு மக்கள் அழைக்கப்படுவார்கள். ஆனால், ஏற்றுக் கொள்ள எவரும் முன்வர மாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி).

Share this Hadith:

Leave a Comment