அத்தியாயம்: 1, பாடம்: 71, ஹதீஸ் எண்: 225

حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ شُجَاعٍ ‏ ‏وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏وَحَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏حَجَّاجٌ وَهُوَ ابْنُ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُا ‏
‏سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي يُقَاتِلُونَ عَلَى الْحَقِّ ‏ ‏ظَاهِرِينَ ‏ ‏إِلَى يَوْمِ الْقِيَامَةِ قَالَ فَيَنْزِلُ ‏ ‏عِيسَى ابْنُ مَرْيَمَ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَيَقُولُ أَمِيرُهُمْ تَعَالَ صَلِّ لَنَا فَيَقُولُ لَا إِنَّ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ أُمَرَاءُ ‏ ‏تَكْرِمَةَ اللَّهِ هَذِهِ الْأُمَّةَ ‏

“என் சமுதாயத்தின் ஒரு பிரிவினர் சத்தியத்திற்கு ஆதரவாகப் போராடிக் கொண்டேயிருப்பார்கள். மறுமைநாள் வரை அவர்கள் (சத்தியத்தில்) மேலோங்கி நிற்பார்கள். பிறகு மர்யமின் மைந்தர் ஈஸா (அலை) அவர்கள் (பூமிக்கு) இறங்கி வருவார்கள். அப்போது முஸ்லிம்களின் தலைவர், ‘வாருங்கள், எங்களுக்குத் (தலைமை தாங்கித்) தொழுகை நடத்துங்கள்!’ என்று (ஈஸாவிடம்) கூறுவார். அதற்கு ஈஸா (அலை) அவர்கள், ‘இல்லை; உங்களைச் சேர்ந்தவர்கள்தாம் உங்களுக்குத் தலைவர்களாக இருக்க வேண்டும். இது, அல்லாஹ் இந்தச் சமுதாயத்திற்கு அளித்துள்ள கண்ணியமாகும்’ என்று கூறி விடுவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 71, ஹதீஸ் எண்: 224

و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي ذِئْبٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏مَوْلَى ‏ ‏أَبِي قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ فِيكُمْ ‏ ‏ابْنُ مَرْيَمَ ‏ ‏فَأَمَّكُمْ مِنْكُمْ ‏
‏فَقُلْتُ ‏ ‏لِابْنِ أَبِي ذِئْبٍ ‏ ‏إِنَّ ‏ ‏الْأَوْزَاعِيَّ ‏ ‏حَدَّثَنَا عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏وَإِمَامُكُمْ مِنْكُمْ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَبِي ذِئْبٍ ‏ ‏تَدْرِي مَا أَمَّكُمْ مِنْكُمْ قُلْتُ تُخْبِرُنِي قَالَ فَأَمَّكُمْ بِكِتَابِ رَبِّكُمْ تَبَارَكَ وَتَعَالَى وَسُنَّةِ نَبِيِّكُمْ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

“மர்யமின் மைந்தர் (ஈஸா) உங்களிடையே இறங்கி வந்து, உங்களுக்கு இமாமாக இருந்தால் அப்போது உங்களுக்கு எப்படியிருக்கும்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வினவினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி).

குறிப்பு:

இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த இப்னு அபீதிஃப் (ரஹ்) அவர்களிடம், “அவ்ஸாயீ (ரஹ்) வழிவந்த அபூஹுரைரா (ரலி) அறிவிப்பில், ‘உங்களைச் சேர்ந்த ஒருவர் உங்களுக்குத் தலைவராக இருக்கும்போது …’ என இடம் பெற்றுள்ளதே?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அபீதிஃப் (ரஹ்) அவர்கள், “(இந்த அறிவிப்பில் இடம்பெற்ற) மர்யமின் மைந்தர் உங்களுக்கு இமாமாக இருந்தால்… என்பதன் பொருள் என்னவென்று நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். நான், “நீங்களே கூறுங்கள்!” என்றேன். அப்போது அவர்கள், “உங்களுடைய இறைவனின் வேதத்தின்படியும் உங்களுடைய நபியின் வழிமுறைப்படியும் உங்களை வழிநடத்திச் செல்வார் என்று அதற்குப் பொருள்” என்றார்கள் என்று அறிவிப்பாளர்களுள் ஒருவரான வலீத் பின் முஸ்லிம் (ரஹ்) குறிப்பிடுகிறார்.

அத்தியாயம்: 1, பாடம்: 71, ஹதீஸ் எண்: 223

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمِّهِ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏مَوْلَى ‏ ‏أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُا ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ ‏ ‏ابْنُ مَرْيَمَ ‏ ‏فِيكُمْ وَأَمَّكُمْ ‏

“மர்யமின் மைந்தர் (ஈஸா) உங்களிடையே இறங்கி வந்து, உங்களுக்குத் தலைவரானால் உங்களுக்கு எப்படி இருக்கும்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வினவினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 71, ஹதீஸ் எண்: 222

حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏مَوْلَى ‏ ‏أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ ‏ ‏ابْنُ مَرْيَمَ ‏ ‏فِيكُمْ وَإِمَامُكُمْ مِنْكُمْ ‏

“உங்களைச் சேர்ந்த ஒருவர் உங்களுக்கு(த் தலைமை ஏற்று) இமாமாக இருக்க, மர்யமின் மைந்தர் (ஈஸா) உங்களிடையே இறங்குவாரேயானால் அப்போது உங்களுக்கு எப்படியிருக்கும்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வினவினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 71, ஹதீஸ் எண்: 221

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ مِينَاءَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَاللَّهِ ‏ ‏لَيَنْزِلَنَّ ‏ ‏ابْنُ مَرْيَمَ ‏ ‏حَكَمًا عَادِلًا فَلَيَكْسِرَنَّ الصَّلِيبَ وَلَيَقْتُلَنَّ الْخِنْزِيرَ ‏ ‏وَلَيَضَعَنَّ ‏ ‏الْجِزْيَةَ ‏ ‏وَلَتُتْرَكَنَّ ‏ ‏الْقِلَاصُ ‏ ‏فَلَا ‏ ‏يُسْعَى عَلَيْهَا وَلَتَذْهَبَنَّ الشَّحْنَاءُ وَالتَّبَاغُضُ وَالتَّحَاسُدُ وَلَيَدْعُوَنَّ إِلَى الْمَالِ فَلَا يَقْبَلُهُ أَحَدٌ ‏

“அல்லாஹ்வின் மீதாணையாக! மர்யமின் மைந்தர் நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக (உலக அழிவுக்குமுன்) இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; அப்போது (விலையுயர்ந்த) ஒட்டகங்கள் (கண்டுகொள்ளப் படாமல்) விடப்படும். அவற்றை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். (மக்களிடையே) பகைமையும் வெறுப்பும் பொறாமையும் அகன்று விடும். செல்வங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு மக்கள் அழைக்கப்படுவார்கள். ஆனால், ஏற்றுக் கொள்ள எவரும் முன்வர மாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 71, ஹதீஸ் எண்: 220

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْمُسَيَّبِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ ‏:‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَالَّذِي نَفْسِي بِيَدِهِ ‏ ‏لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمْ ‏ ‏ابْنُ مَرْيَمَ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَكَمًا ‏ ‏مُقْسِطًا ‏ ‏فَيَكْسِرَ الصَّلِيبَ وَيَقْتُلَ الْخِنْزِيرَ وَيَضَعَ ‏ ‏الْجِزْيَةَ ‏ ‏وَيَفِيضُ ‏ ‏الْمَالُ حَتَّى لَا يَقْبَلَهُ أَحَدٌ ‏


و حَدَّثَنَاه ‏ ‏عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏حَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏يَعْقُوبَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏إِمَامًا ‏ ‏مُقْسِطًا ‏ ‏وَحَكَمًا عَدْلًا ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏يُونُسَ ‏ ‏حَكَمًا عَادِلًا وَلَمْ يَذْكُرْ إِمَامًا ‏ ‏مُقْسِطًا ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏صَالِحٍ ‏ ‏حَكَمًا ‏ ‏مُقْسِطًا ‏ ‏كَمَا قَالَ ‏ ‏اللَّيْثُ ‏ ‏وَفِي حَدِيثِهِ مِنْ الزِّيَادَةِ وَحَتَّى تَكُونَ السَّجْدَةُ الْوَاحِدَةُ خَيْرًا مِنْ الدُّنْيَا وَمَا فِيهَا ‏ ‏ثُمَّ ‏ ‏يَقُولُا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏اقْرَءُوا إِنْ شِئْتُمْ ‏
‏وَإِنْ مِنْ ‏ ‏أَهْلِ الْكِتَابِ ‏ ‏إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ ‏ ‏الْآيَةَ‏

“என் உயிரைக் கைவசம் வைத்திருப்பவன் மீதாணை! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மகன் (ஈஸா) (அலை) உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கின்றார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; அப்போது, (கொடுத்தாலும்) பெற்றுக் கொள்ள எவரும் முன்வராத அளவுக்குச் செல்வம் (பெருகி) வழிந்தோடும்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு:

இபுனு உயைனா (ரஹ்) வழி அறிவிப்பில், “நடுநிலை வழுவா ஆட்சித் தலைவராகவும் நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாகவும் (திகழ்வார்)” என்று ஈஸா (அலை) பற்றிய குறிப்போடு காணப்படுகின்றது.

யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “நடுநிலை வழுவா ஆட்சித் தலைவராக” என்ற சொற்கள் இல்லாமல் “நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக” என்பது மட்டுமே இடம் பெற்றுள்ளது.

ஸாலிஹ் (ரஹ்) வழி அறிவிப்பில், “அந்தக் காலகட்டத்தில் செய்யப்படும் ஒரேயொரு ஸஜ்தாவானது இந்த உலகத்தையும் அதிலுள்ளவற்றையும்விடச் சிறந்ததாக இருக்கும்” என்றும் “வேதம் வழங்கப்பட்ட எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை … எனும் (4:159ஆவது) இறைவசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக்கொள்ளுங்கள்!” என்று அபூஹுரைரா (ரலி) கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.