அத்தியாயம்: 1, பாடம்: 73, ஹதீஸ் எண்: 233

و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏يَحْيَى ‏ ‏يَقُولُ سَأَلْتُ ‏ ‏أَبَا سَلَمَةَ ‏
‏أَيُّ الْقُرْآنِ أُنْزِلَ قَبْلُ قَالَ ‏
‏يَا أَيُّهَا الْمُدَّثِّرُ ‏

‏فَقُلْتُ أَوْ اقْرَأْ فَقَالَ سَأَلْتُ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏أَيُّ الْقُرْآنِ أُنْزِلَ قَبْلُ قَالَ ‏
‏يَا أَيُّهَا الْمُدَّثِّرُ ‏

‏فَقُلْتُ أَوْ اقْرَأْ قَالَ ‏ ‏جَابِرٌ ‏ ‏أُحَدِّثُكُمْ مَا حَدَّثَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏جَاوَرْتُ ‏ ‏بِحِرَاءٍ ‏ ‏شَهْرًا فَلَمَّا قَضَيْتُ ‏ ‏جِوَارِي ‏ ‏نَزَلْتُ ‏ ‏فَاسْتَبْطَنْتُ ‏ ‏بَطْنَ الْوَادِي فَنُودِيتُ فَنَظَرْتُ أَمَامِي وَخَلْفِي وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي فَلَمْ أَرَ أَحَدًا ثُمَّ نُودِيتُ فَنَظَرْتُ فَلَمْ أَرَ أَحَدًا ثُمَّ نُودِيتُ فَرَفَعْتُ رَأْسِي فَإِذَا هُوَ عَلَى الْعَرْشِ فِي الْهَوَاءِ ‏ ‏يَعْنِي ‏ ‏جِبْرِيلَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَأَخَذَتْنِي رَجْفَةٌ شَدِيدَةٌ فَأَتَيْتُ ‏ ‏خَدِيجَةَ ‏ ‏فَقُلْتُ ‏ ‏دَثِّرُونِي ‏ ‏فَدَثَّرُونِي فَصَبُّوا عَلَيَّ مَاءً فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏
‏يَا أَيُّهَا الْمُدَّثِّرُ قُمْ فَأَنْذِرْ وَرَبَّكَ فَكَبِّرْ وَثِيَابَكَ فَطَهِّرْ ‏

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ عُمَرَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَلِيُّ بْنُ الْمُبَارَكِ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏فَإِذَا هُوَ جَالِسٌ عَلَى عَرْشٍ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ

(யஹ்யா பின் அபீகஸீர் ஆகிய) நான் அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம், “முன்னதாக அருளப்பட்ட குர்ஆன் வசனம் எது?” என்று கேட்டேன். அதற்கு, “போர்த்திக் கொண்டிருப்பவரே! எனும் (74:1ஆவது) வசனம்” என்றார்கள். நான், “ஓதுவீராக! (என்று தொடங்கும் 96:1ஆவது) வசனம் இல்லையா?” என்று கேட்டேன். அதற்கு அபூஸலமா (ரஹ்) பதில் கூறும்போது, “நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம், எந்த வசனம் முன்னதாக அருளப்பட்டது? என்று (இதே கேள்வியைக்) கேட்டபோது அதற்கு அவர்கள், போர்த்திக் கொண்டிருப்பவரே! எனும் (74:1ஆவது) வசனம் என்றே பதிலளித்தார்கள். (நீங்கள் என்னிடம் வினவியது போலவே) ஓதுவீராக! எனும் (96:1ஆவது) வசனம் இல்லையா?” என்று (மீண்டும்) வினவினேன். அதற்கு ஜாபிர் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குச் சொன்னதையே உங்களுக்கு நான் சொல்கிறேன்:

நான் ஹிரா மலைக்குகையில் ஒரு மாதம் தங்கியிருந்தேன். பிறகு என் தங்குதலை முடித்துக் கொண்டு (மலையிலிருந்து) இறங்கி, அங்கிருந்த ‘பத்னுல் வாதீ’ பள்ளத்தாக்கின் நடுவே வந்து சேர்ந்தேன். அப்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டு, என் முன்னும் பின்னும் வலமும் இடமும் பார்வையைச் செலுத்தி(த்தேடி)ப் பார்த்தேன். அங்கு யாரையும் நான் காணவில்லை. பிறகு (மீண்டும்) அழைக்கப்பட்டு, பார்வையைச் செலுத்தினேன். யாரையும் நான் காணவில்லை. பிறகு (மூன்றாவது முறையாக) அழைக்கப்பட்டபோது தலை நிமிர்ந்து பார்த்தேன். அப்போது அவர் (வானவர் ஜிப்ரீல்) ஆகாயவெளியில் ஓர் ஆசனத்தில் (அமர்ந்து) இருந்தார். அப்போது நான் கடுமையாக நடுக்கமுற்றேன். உடனே நான் (என் துணைவியார்) கதீஜாவிடம் வந்து, என்னைப் போர்த்துங்கள் என்று கூறினேன். அவ்வாறே எனக்குப் போர்த்தி விட்டார். என் மீது தண்ணீரை ஊற்றினார்கள். அப்போது மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ், போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுவீராக! (எழுந்து) எச்சரிக்கை செய்வீராக! உம்முடைய இறைவனைப் பெருமைப் படுத்துவீராக! உமது ஆடைகளைத் தூய்மையாக வைத்திருப்பீராக! எனும் (74:1-4) வசனங்களை அருளினான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்”.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).

குறிப்பு:

முதன் முதலில் வஹீயாக இறங்கியவை, “படைத்த உம் இறைவனின் பெயரால் ஓதுவீராக” எனத்தொடங்கி, “மனிதன் அறியாத அனைத்தையும் கற்பித்தான்” என்று முடியும் 96:1-5 வசனங்கள் ஆகும். அதற்குப் பிறகு வஹீ வருவது சிறிது காலம் நின்று போயிருந்தது. வஹீ நின்றுபோன பிறகு தொடக்கமாக அருளப்பட்டவை, “போர்த்திக் கொண்டிருப்பவரே!” என்று தொடங்கி “அசுத்தங்களிலிருந்து விலகியிருப்பீராக” எனும் (74:1-5) வசனங்களாகும்.

இதே ஹதீஸில் ஜிப்ரீல் (அலை) பற்றி யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) வழியாக அலீ பின் அல்-முபாரக் (ரஹ்) அறிவிக்கும்போது, “வானவர் ஜிப்ரீல் வானுக்கும் பூமிக்கும் இடையில் ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார்” என்று இடம் பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment