அத்தியாயம்: 1, பாடம்: 89, ஹதீஸ் எண்: 306

حَدَّثَنَا ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏التَّيْمِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏قَبِيصَةَ بْنِ الْمُخَارِقِ ‏ ‏وَزُهَيْرِ بْنِ عَمْرٍو ‏ ‏قَالَا ‏

‏لَمَّا نَزَلَتْ ‏”‏وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ ‏
” ‏قَالَ انْطَلَقَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى ‏ ‏رَضْمَةٍ ‏ ‏مِنْ جَبَلٍ فَعَلَا أَعْلَاهَا حَجَرًا ثُمَّ نَادَى ‏ ‏يَا ‏ ‏بَنِي عَبْدِ مَنَافَاهْ ‏ ‏إِنِّي نَذِيرٌ إِنَّمَا مَثَلِي وَمَثَلُكُمْ كَمَثَلِ رَجُلٍ رَأَى الْعَدُوَّ فَانْطَلَقَ ‏ ‏يَرْبَأُ ‏ ‏أَهْلَهُ فَخَشِيَ أَنْ يَسْبِقُوهُ فَجَعَلَ يَهْتِفُ ‏ ‏يَا ‏ ‏صَبَاحَاهْ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُعْتَمِرُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏زُهَيْرِ بْنِ عَمْرٍو ‏ ‏وَقَبِيصَةَ بْنِ مُخَارِقٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِنَحْوِهِ ‏

“(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்” எனும் (26:214 ஆவது) இறைவசனம் அருளப்பட்டபோது, அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் ஒரு மலைக்குன்றுக்குச் சென்று, அதன் உச்சியிலிருந்த கல்மீது ஏறிநின்ற பின்னர், “அப்து மனாஃபின் மக்களே!” என்று கூவியழைத்தார்கள். தொடர்ந்து, “நான் (உங்களை) எச்சரிப்பவன் ஆவேன். எதிரிகள் வரக் கண்டு, தன் குடும்பத்தாரைக் காப்பாற்றச் சென்றபோது, எதிரிகள் முந்திக் கொண்டு விடுவார்களோ என்றஞ்சி, ‘யா ஸபாஹா! (உதவி, உதவி! அதிகாலை ஆபத்து!)’ என்று கூவியழைத்த ஒருவனின் உவமையாக (இப்போது) நானும் (அழைக்கப் பட்டவர்களாக) நீங்களும் இருக்கிறோம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : கபீஸா பின் அல்-முகாரிக் (ரலி), ஸுஹைர் பின் அம்ரு (ரலி).

Share this Hadith:

Leave a Comment