அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2883

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنٌ يَعْنِي ابْنَ حَسَنِ بْنِ يَسَارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عَوْنٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ: ‏
أَنَّ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏كَانَ يَأْجُرُ الْأَرْضَ قَالَ فَنُبِّئَ حَدِيثًا عَنْ ‏ ‏رَافِعِ بْنِ خَدِيجٍ ‏ ‏قَالَ فَانْطَلَقَ بِي مَعَهُ إِلَيْهِ قَالَ فَذَكَرَ عَنْ بَعْضُ عُمُومَتِهِ ذَكَرَ فِيهِ عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏كِرَاءِ ‏ ‏الْأَرْضِ قَالَ فَتَرَكَهُ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏فَلَمْ يَأْجُرْهُ ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عَوْنٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏فَحَدَّثَهُ عَنْ بَعْضِ عُمُومَتِهِ عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

இப்னு உமர் (ரலி) நிலத்தை (குத்தகை) வாடகைக்கு விட்டுவந்தார்கள். அப்போது அவர்களிடம் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) கூறியதாக ஒரு ஹதீஸ் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் ராஃபிஉ (ரலி) அவர்களை நோக்கி நடந்தார்கள். அப்போது அவர்களுடன் நானும் இருந்தேன். ராஃபிஉ பின் கதீஜ் (ரலி), தம் தந்தையின் சகோதரர்கள் சிலர், “நபி (ஸல்) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள்” என்று கூறியதாகத் தெரிவித்தார்கள். எனவே, இப்னு உமர் (ரலி) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை நிறுத்தி விட்டார்கள்.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)

Share this Hadith: