அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2861

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏مَطَرٍ الْوَرَّاقِ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ كِرَاءِ الْأَرْضِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

நில உரிமையாளர், தம்முடைய நிலத்தில் உழைக்கும் விவசாயி இடம், விளைச்சல் எப்படி இருந்தாலும் குறிப்பிட்ட அளவு தானியத்தைத் தமக்குக் குத்தகைத் தொகைக்காகத் தந்தாக வேண்டும் என்ற முன் நிபந்தனையுடன் நிலத்தைக் குத்தகைக்கு விடும் பழக்கம் அரபியர்களிடம் இருந்து வந்தது. அவ்வகைக் குத்தகை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது.

அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2884

‏و حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُقَيْلُ بْنُ خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّهُ قَالَ أَخْبَرَنِي ‏ ‏سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ: ‏ ‏

أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏كَانَ يُكْرِي أَرَضِيهِ حَتَّى بَلَغَهُ ‏ ‏أَنَّ ‏ ‏رَافِعَ بْنَ خَدِيجٍ الْأَنْصَارِيَّ ‏ ‏كَانَ يَنْهَى عَنْ ‏ ‏كِرَاءِ ‏ ‏الْأَرْضِ فَلَقِيَهُ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏فَقَالَ يَا ‏ ‏ابْنَ خَدِيجٍ ‏ ‏مَاذَا تُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ‏ ‏كِرَاءِ ‏ ‏الْأَرْضِ ‏
‏قَالَ ‏ ‏رَافِعُ بْنُ خَدِيجٍ ‏ ‏لِعَبْدِ اللَّهِ ‏ ‏سَمِعْتُ ‏ ‏عَمَّيَّ ‏ ‏وَكَانَا قَدْ شَهِدَا ‏ ‏بَدْرًا ‏ ‏يُحَدِّثَانِ أَهْلَ الدَّارِ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ كِرَاءِ الْأَرْضِ قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏لَقَدْ كُنْتُ أَعْلَمُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّ الْأَرْضَ ‏ ‏تُكْرَى ‏
‏ثُمَّ خَشِيَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏أَنْ يَكُونَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَحْدَثَ فِي ذَلِكَ شَيْئًا لَمْ يَكُنْ عَلِمَهُ فَتَرَكَ ‏ ‏كِرَاءَ ‏ ‏الْأَرْضِ

தம் நிலங்களை (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) குத்தகைக்கு விட்டுவந்தார்கள். இந்நிலையில், ராஃபிஉ பின் கதீஜ் அல்அன்ஸாரீ (ரலி) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்துவருகிறார்கள் எனும் செய்தி என் தந்தைக்கு எட்டியது.

உடனே என் தந்தை, ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களைச் சந்தித்து, “இப்னு கதீஜ்! நிலக் குத்தகை விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாகத் தாங்கள் என்ன அறிவித்துவருகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)  “என் தந்தையின் இரு சகோதரர்கள் பத்ருப் போரில் கலந்துகொண்டவர்கள் ஆவர் அவ்விருவரும் (தம்) குடும்பத்தாரிடம் ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள்’ எனக் கூறிவந்ததை நான் செவியுற்றேன்” என்றார்கள். அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் நிலம் குத்தகைக்கு விடப்பட்டு வந்ததை நான் அறிந்திருந்தேன்” என்று என் தந்தை கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அது கூடாது என்று) புதிய சட்டம் பிறப்பித்து, (ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதைக் கேட்கும்வரை) நிலக் குத்தகை தொடர்பாக நாம் அறியாமல் இருந்துவிட்டோமோ என்று அஞ்சி, நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை என் தந்தை நிறுத்திவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) வழியாக ஸாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2883

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنٌ يَعْنِي ابْنَ حَسَنِ بْنِ يَسَارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عَوْنٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ: ‏
أَنَّ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏كَانَ يَأْجُرُ الْأَرْضَ قَالَ فَنُبِّئَ حَدِيثًا عَنْ ‏ ‏رَافِعِ بْنِ خَدِيجٍ ‏ ‏قَالَ فَانْطَلَقَ بِي مَعَهُ إِلَيْهِ قَالَ فَذَكَرَ عَنْ بَعْضُ عُمُومَتِهِ ذَكَرَ فِيهِ عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏كِرَاءِ ‏ ‏الْأَرْضِ قَالَ فَتَرَكَهُ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏فَلَمْ يَأْجُرْهُ ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عَوْنٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏فَحَدَّثَهُ عَنْ بَعْضِ عُمُومَتِهِ عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

இப்னு உமர் (ரலி) நிலத்தை (குத்தகை) வாடகைக்கு விட்டுவந்தார்கள். அப்போது அவர்களிடம் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) கூறியதாக ஒரு ஹதீஸ் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் ராஃபிஉ (ரலி) அவர்களை நோக்கி நடந்தார்கள். அப்போது அவர்களுடன் நானும் இருந்தேன். ராஃபிஉ பின் கதீஜ் (ரலி), தம் தந்தையின் சகோதரர்கள் சிலர், “நபி (ஸல்) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள்” என்று கூறியதாகத் தெரிவித்தார்கள். எனவே, இப்னு உமர் (ரலி) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை நிறுத்தி விட்டார்கள்.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)

அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2882

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏قَالَ: ‏
ذَهَبْتُ مَعَ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏إِلَى ‏ ‏رَافِعِ بْنِ خَدِيجٍ ‏ ‏حَتَّى أَتَاهُ ‏ ‏بِالْبَلَاطِ ‏ ‏فَأَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏كِرَاءِ ‏ ‏الْمَزَارِعِ ‏


و حَدَّثَنِي ‏ ‏ابْنُ أَبِي خَلَفٍ ‏ ‏وَحَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ بْنُ عَدِيٍّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏أَنَّهُ أَتَى ‏ ‏رَافِعًا ‏ ‏فَذَكَرَ هَذَا الْحَدِيثَ عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் (மஸ்ஜிதுந் நபவீ அருகில்) ‘பலாத்து’ எனும் இடத்திலிருந்த ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது ராஃபிஉ பின் கதீஜ் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விளைநிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்துள்ளார்கள்” என்று தெரிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)


குறிப்பு :

அல் ஹகம் (ரஹ்) வழி வரும் ஹதீஸ் “ …“இப்னு உமர் (ரலி) ராஃபிஉ (ரலி) அவர்களிடம் சென்றார்கள்” என ஆரம்பமாகிறது.

அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2881

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ: ‏
أَنَّ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏كَانَ يُكْرِي مَزَارِعَهُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَفِي إِمَارَةِ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏وَعُمَرَ ‏ ‏وَعُثْمَانَ ‏ ‏وَصَدْرًا مِنْ خِلَافَةِ ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏حَتَّى بَلَغَهُ فِي آخِرِ خِلَافَةِ ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏أَنَّ ‏ ‏رَافِعَ بْنَ خَدِيجٍ ‏ ‏يُحَدِّثُ فِيهَا بِنَهْيٍ عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَدَخَلَ عَلَيْهِ وَأَنَا مَعَهُ فَسَأَلَهُ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَنْهَى عَنْ ‏ ‏كِرَاءِ ‏ ‏الْمَزَارِعِ فَتَرَكَهَا ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏بَعْدُ وَكَانَ إِذَا سُئِلَ عَنْهَا بَعْدُ قَالَ زَعَمَ ‏ ‏رَافِعُ بْنُ خَدِيجٍ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْهَا ‏


و حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ ‏ ‏وَأَبُو كَامِلٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏ ‏وَزَادَ فِي حَدِيثِ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏قَالَ فَتَرَكَهَا ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏بَعْدَ ذَلِكَ فَكَانَ لَا ‏ ‏يُكْرِيهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்திலும் அபூபக்ரு (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரது ஆட்சிக் காலங்களிலும் முஆவியா (ரலி) ஆட்சியில் ஆரம்பக் கட்டத்திலும் இப்னு உமர் (ரலி) தம் விளைநிலங்களைக் குத்தகைக்கு விட்டு வந்தார்கள். முஆவியா (ரலி) ஆட்சியின் இறுதி நாட்களில் “நபி (ஸல்) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள்” என ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு எட்டியது.

உடனே அவர்கள் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர்களுடன் நானும் இருந்தேன். இப்னு உமர் (ரலி), ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம் அது குறித்து வினவினார்கள். ராஃபிஉ பின் கதீஜ் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விளைநிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள்” என்று கூறினார்கள்.

இதையடுத்து, இப்னு உமர் (ரலி) தமது நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைக் கைவிட்டார்கள். பின்னர் அவர்களிடம் நிலத்தைக் குத்தகைக்கு விடுவது குறித்துக் கேட்கப்பட்டால், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதற்குத் தடை விதித்துள்ளார்கள் என்பதில் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) உறுதியான கருத்துக் கொண்டிருக்கின்றார்” என விடையளிப்பார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)


குறிப்பு :

இஸ்மாயீல் இப்னு உலய்யா (ரஹ்) வழி அறிவிப்பில், “ … எனவே, அதன் பின்னர் இப்னு உமர் (ரலி) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைக் கைவிட்டுவிட்டார்கள்” என்று கூடுதல் தெளிவாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2880

‏و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْخَلِيلِ ‏ ‏عَنْ ‏ ‏مُجَاهِدٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏ابْنُ عُمَرَ: ‏
لَقَدْ مَنَعَنَا ‏ ‏رَافِعٌ ‏ ‏نَفْعَ أَرْضِنَا

ராஃபிஉ பின் கதீஜ் (ரலி), (குத்தகைக்கு விட்டு) நம் நிலங்களிலிருந்து பயனடைய விடாமல் நம்மைத் தடுத்துவிட்டார்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2879

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو الرَّبِيعِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏و قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏يَقُولُ: ‏
كُنَّا لَا نَرَى ‏ ‏بِالْخِبْرِ ‏ ‏بَأْسًا حَتَّى كَانَ عَامُ أَوَّلَ فَزَعَمَ ‏ ‏رَافِعٌ ‏ ‏أَنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْهُ ‏


و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏وَإِبْرَاهِيمُ بْنُ دِينَارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏ ‏وَزَادَ فِي حَدِيثِ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏فَتَرَكْنَاهُ مِنْ أَجْلِهِ

நாங்கள் (முஆவியா (ரலி) ஆட்சியின்) முதலாண்டுவரை ‘முகாபரா’ முறையில் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை குற்றமாகக் கருதாமல் இருந்தோம். பின்னர் (முஆவியா (ரலி) ஆட்சியின் இறுதிக் கட்டத்தில்) ராஃபிஉ பின் கதீஜ் (ரலி), “நபி (ஸல்) அதற்குத் தடை விதித்துள்ளார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

“ … எனவே, நாங்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை விட்டுவிட்டோம்” என ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) வழி அறிவிப்பில் நிறைவாக இடம்பெற்றுள்ளது.

‘முகாரபா‘ பற்றிய கூடுதல் விபரங்கள் ஹதீஸ் எண் 2872இன் அடிக்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.

அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2878

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مَالِكُ بْنُ أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏دَاوُدَ بْنِ الْحُصَيْنِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا سُفْيَانَ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ أَبِي أَحْمَدَ ‏ ‏أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏يَقُولُ: ‏
‏نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏الْمُزَابَنَةِ ‏ ‏وَالْمُحَاقَلَةِ ‏
‏وَالْمُزَابَنَةُ ‏ ‏اشْتِرَاءُ الثَّمَرِ فِي رُءُوسِ النَّخْلِ ‏ ‏وَالْمُحَاقَلَةُ ‏ ‏كِرَاءُ ‏ ‏الْأَرْضِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘முஸாபனா’வையும் ‘முஹாகலா’வையும் தடை செய்தார்கள். ‘முஸாபனா’ என்பது, பேரீச்ச மரத்தின் உச்சியிலுள்ள செங்கனிகளுக்குப் பதிலாக, உலர்ந்த கனிகளை வாங்குவதாகும். ‘முஹாகலா’ என்பது, (முன் நிபந்தனை விதித்து) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதாகும்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2877

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيَّ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ: ‏
نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏الْمُحَاقَلَةِ ‏ ‏وَالْمُزَابَنَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘முஹாகலா’வையும் ‘முஸாபனா’வையும் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

‘முஹாகலா’, ‘முஸாபனா’ : ஹதீஸ் எண் 2855இன் அடிக்குறிப்புகளில் காண்க!

அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2876

‏و حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو تَوْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏أَنَّ ‏ ‏يَزِيدَ بْنَ نُعَيْمٍ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏أَخْبَرَهُ: ‏
أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَنْهَى عَنْ ‏ ‏الْمُزَابَنَةِ ‏ ‏وَالْحُقُولِ ‏


فَقَالَ ‏ ‏جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏الْمُزَابَنَةُ ‏ ‏الثَّمَرُ بِالتَّمْرِ وَالْحُقُولُ كِرَاءُ الْأَرْضِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘முஸாபனா’வையும் ‘ஹுகூல்’ஐயும் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

‘முஸாபனா’ என்பது, (மரத்திலுள்ள) பேரீச்ச செங்கனிகளுக்குப் பதிலாக உலர்ந்த பேரீச்சம் பழங்களை மாற்றிக் கொள்வதாகும்.. ‘ஹுகூல்’ என்பது, நிலத்தைக் குத்தகைக்கு விடுவதாகும் என்று இதன் அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) விளக்கமளித்திருக்கின்றார்கள்.