அத்தியாயம்: 22, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2899

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ رَافِعٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏مُوسَى بْنُ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ: ‏
عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏أَنَّ ‏ ‏عُمَرَ بْنَ الْخَطَّابِ ‏ ‏أَجْلَى ‏ ‏الْيَهُودَ ‏ ‏وَالنَّصَارَى ‏ ‏مِنْ أَرْضِ ‏ ‏الْحِجَازِ ‏ ‏وَأَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمَّا ظَهَرَ عَلَى ‏ ‏خَيْبَرَ ‏ ‏أَرَادَ إِخْرَاجَ ‏ ‏الْيَهُودِ ‏ ‏مِنْهَا وَكَانَتْ الْأَرْضُ حِينَ ظُهِرَ عَلَيْهَا لِلَّهِ وَلِرَسُولِهِ وَلِلْمُسْلِمِينَ فَأَرَادَ إِخْرَاجَ ‏ ‏الْيَهُودِ ‏ ‏مِنْهَا فَسَأَلَتْ ‏ ‏الْيَهُودُ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يُقِرَّهُمْ بِهَا عَلَى أَنْ يَكْفُوا عَمَلَهَا وَلَهُمْ نِصْفُ الثَّمَرِ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نُقِرُّكُمْ بِهَا عَلَى ذَلِكَ مَا شِئْنَا فَقَرُّوا بِهَا حَتَّى ‏ ‏أَجْلَاهُمْ ‏ ‏عُمَرُ ‏ ‏إِلَى ‏ ‏تَيْمَاءَ ‏ ‏وَأَرِيحَاءَ

உமர் பின் அல்கத்தாப் (ரலி), யூதர்களையும் கிறித்தவர்களையும் (தமது ஆட்சியின்போது) ‘ஹிஜாஸ்’ மாநிலத்திலிருந்து நாடு கடத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), கைபரை வெற்றி கொண்டபோதே அங்கிருந்த யூதர்களை வெளியேற்றிவிட உமர் (ரலி) விரும்பினார்கள். ஏனெனில், அந்தப் பிரதேசம் வெற்றிகொள்ளப்பட்ட பின் அது அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாகிவிட்டிருந்தது. ஆகவேதான், யூதர்களை அங்கிருந்து வெளியேற்ற விரும்பினார்கள்.

முன்னதாக, யூதர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “நாங்கள் இங்கேயே தங்கி, இந்த விளைநிலங்களில் பயிரிட்டு உழைக்கும் பொறுப்பை ஏற்கிறோம். இவற்றின் விளைச்சலில் பாதியைப் பெற்றுக்கொள்கிறோம் (மீதியை மதீனா அரசுக்குச் செலுத்திவிடுகிறோம்); இதற்கு எங்களை அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்கள். அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இதன்படி நாம் விரும்பும்வரை நீங்கள் இங்கே தங்கிப் பயிரிட அனுமதிக்கிறோம்” என்று கூறியிருந்தார்கள்.

பின்னர், உமர் (ரலி) தமது ஆட்சிக் காலத்தில் அந்த யூதர்களை ‘தைமா’  ‘அரீஹா (ஜெரிக்கோ)’ ஆகிய பகுதிகளுக்கு நாடு கடத்தி அனுப்பும்வரை அவர்கள் அங்கேயே (விளைநிலங்களைப் பயிரிட்டு, வரி செலுத்தி) வசித்துவந்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2898

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: ‏
عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ ‏ ‏دَفَعَ إِلَى ‏ ‏يَهُودِ خَيْبَرَ ‏ ‏نَخْلَ ‏ ‏خَيْبَرَ ‏ ‏وَأَرْضَهَا عَلَى أَنْ ‏ ‏يَعْتَمِلُوهَا ‏ ‏مِنْ أَمْوَالِهِمْ وَلِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏شَطْرُ ‏ ‏ثَمَرِهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (கைபர் வெற்றிக்குப் பின்) கைபர் வாழ் யூதர்களிடம் “அவர்கள் தம் விளைநிலங்களில் தமது சொந்தச் செலவில் பயிரிட்டு உழைக்க வேண்டும்; விளையும் கனிகளில் பாதியை அல்லாஹ்வின் தூதரிடம் (பொது நிதியத்துக்காக) வழங்க வேண்டும்” எனும் நிபந்தனையின் பேரில் கைபரின் பேரீச்ச மரங்களையும் விளைநிலங்களையும் ஒப்படைத்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2897

‏و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيٌّ وَهُوَ ابْنُ مُسْهِرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ: ‏
أَعْطَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَيْبَرَ ‏ ‏بِشَطْرِ ‏ ‏مَا يَخْرُجُ مِنْ ثَمَرٍ أَوْ زَرْعٍ فَكَانَ يُعْطِي أَزْوَاجَهُ كُلَّ سَنَةٍ مِائَةَ ‏ ‏وَسْقٍ ‏ ‏ثَمَانِينَ ‏ ‏وَسْقًا ‏ ‏مِنْ تَمْرٍ وَعِشْرِينَ ‏ ‏وَسْقًا ‏ ‏مِنْ شَعِيرٍ ‏
‏فَلَمَّا وَلِيَ ‏ ‏عُمَرُ ‏ ‏قَسَمَ ‏ ‏خَيْبَرَ ‏ ‏خَيَّرَ أَزْوَاجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يُقْطِعَ لَهُنَّ الْأَرْضَ وَالْمَاءَ أَوْ يَضْمَنَ لَهُنَّ ‏ ‏الْأَوْسَاقَ ‏ ‏كُلَّ عَامٍ فَاخْتَلَفْنَ فَمِنْهُنَّ مَنْ اخْتَارَ الْأَرْضَ وَالْمَاءَ وَمِنْهُنَّ مَنْ اخْتَارَ ‏ ‏الْأَوْسَاقَ ‏ ‏كُلَّ عَامٍ فَكَانَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏وَحَفْصَةُ ‏ ‏مِمَّنْ اخْتَارَتَا الْأَرْضَ وَالْمَاءَ ‏ ‏


و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَامَلَ أَهْلَ ‏ ‏خَيْبَرَ ‏ ‏بِشَطْرِ ‏ ‏مَا خَرَجَ مِنْهَا مِنْ زَرْعٍ أَوْ ثَمَرٍ ‏ ‏وَاقْتَصَّ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ ‏ ‏عَلِيِّ بْنِ مُسْهِرٍ ‏ ‏وَلَمْ يَذْكُرْ فَكَانَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏وَحَفْصَةُ ‏ ‏مِمَّنْ اخْتَارَتَا الْأَرْضَ وَالْمَاءَ وَقَالَ خَيَّرَ أَزْوَاجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يُقْطِعَ لَهُنَّ الْأَرْضَ وَلَمْ يَذْكُرْ الْمَاءَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أُسَامَةُ بْنُ زَيْدٍ اللَّيْثِيُّ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏قَالَ ‏ ‏لَمَّا افْتُتِحَتْ ‏ ‏خَيْبَرُ ‏ ‏سَأَلَتْ يَهُودُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يُقِرَّهُمْ فِيهَا عَلَى أَنْ يَعْمَلُوا عَلَى نِصْفِ مَا خَرَجَ مِنْهَا مِنْ الثَّمَرِ وَالزَّرْعِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُقِرُّكُمْ فِيهَا عَلَى ذَلِكَ مَا شِئْنَا ثُمَّ سَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ ‏ ‏ابْنِ نُمَيْرٍ ‏ ‏وَابْنِ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏وَزَادَ فِيهِ وَكَانَ الثَّمَرُ يُقْسَمُ عَلَى ‏ ‏السُّهْمَانِ ‏ ‏مِنْ نِصْفِ ‏ ‏خَيْبَرَ ‏ ‏فَيَأْخُذُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْخُمْسَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), கைபரில் உள்ள விளைநிலங்களையும் மரங்களையும் “அவற்றின் விளைச்சலான பழங்கள் மற்றும் தானியங்களில் பாதியை(த் தமது அரசுக்கு)க் கொடுத்துவிட வேண்டும்” எனும் நிபந்தனையின் பேரில் கைபர்வாசிகளுக்கு வழங்கினார்கள். (இந்த வருமானத்திலிருந்தே) தம் துணைவியருக்கு வருடாந்திரச் செலவுத் தொகையாகப் பேரீச்சம் பழத்தில் எண்பது ‘வஸக்’குகளும் தொலி நீக்கப்படாத கோதுமையில் இருபது ‘வஸக்’குகளும் வழங்கிவந்தார்கள்.

உமர் (ரலி) ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, (யூதர்களை நாடு கடத்திவிட்டு) கைபர் விளைநிலங்களை (மக்களிடையே) பங்கிட்டுக் கொடுத்தார்கள்; நபி (ஸல்) அவர்களின் துணைவியருக்குத் தாம் (கைபரில்) விளைநிலங்களையும் பாசன நீரையும் ஒதுக்கீடு செய்யவோ, அல்லது (வழக்கம் போலவே பேரீச்சம் பழங்களிலும் கோதுமையிலும்) குறிப்பிட்ட ‘வஸ்க்’குகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் பொறுப்பேற்றுக்கொள்ளவோ தயார் என அறிவித்து உமர் (ரலி) விருப்பத் தேர்வு அளித்தார்கள்.

நபியவர்களின் துணைவியர் (இதில்) இரு வேறு நிலைகளை மேற்கொண்டனர். அவர்களில் சிலர், விளைநிலத்தையும் பாசன நீரையும் பெற்றுக்கொள்வதைத் தேர்ந்தெடுத்தனர். வேறுசிலர், ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட ‘வஸ்க்’குகளைப் பெற்றுக்கொள்வதைத் தேர்ந்தெடுத்தனர். விளைநிலத்தையும் பாசன நீரையும் தேர்ந்தெடுத்தவர்களில் ஆயிஷா (ரலி) அவர்களும் ஹஃப்ஸா (ரலி) அவர்களும் அடங்குவர்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

நுமைர் (ரஹ்) தம் தந்தை வழியாக அறிவிப்பதில், “… அல்லாஹ்வின் தூதர் (ஸல்), கைபரில் உள்ள விளைநிலங்களையும் மரங்களையும் அவற்றின் விளைச்சலான தானியங்கள் மற்றும் பழங்களில் பாதியை(இஸ்லாமிய அரசுக்கு)க் கொடுத்துவிட வேண்டும்  எனும் நிபந்தனையின் பேரில் கைபர்வாசிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள் …” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. ஆனால், “ஆயிஷா (ரலி) அவர்களும் ஹஃப்ஸா (ரலி) அவர்களும் விளைநிலத்தையும் பாசன நீரையும் தேர்ந்தெடுத்தவர்களில் அடங்குவர்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை. மேலும், “உமர் (ரலி), நபி (ஸல்) அவர்களின் துணைவியருக்கு, தாம் விளைநிலங்களை ஒதுக்கீடு செய்யத் தயார் என அறிவித்து விருப்பத் தேர்வு அளித்தார்கள்” என இடம்பெற்றுள்ளதேயன்றி, பாசன நீரைப் பற்றிய குறிப்பு இல்லை.

உஸாமா அல்லைஸீ (ரஹ்) வழி அறிவிப்பில், கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது, யூதர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் “நாங்கள் இங்கேயே தங்கி, இந்த விளைநிலத்தில் பயிரிட்டு உழைக்கிறோம். இவற்றின் விளைச்சலான பழங்கள், தானியங்கள் ஆகியவற்றில் பாதியைப் பெற்றுக்கொள்கிறோம் (மீதிப் பாதியை அரசுக்குத் தந்துவிடுகிறோம்); இதற்கு எங்களை அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்கள். அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இதன்படி நாம் விரும்பும் (காலம்)வரை நீங்கள் இங்கேயே தங்கிப் பயிரிட அனுமதிக்கிறோம்” என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது. மேலும், “ … கைபர் விளைச்சலில் கிடைத்த பழங்கள் (ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, போர் வீரர்களின்) பங்குகளுக்கேற்ப பங்கிடப்பட்டுவந்தன. ஐந்தில் ஒரு பாகத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்), எடுத்துவந்தார்கள் …” எனும் தகவல் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

முகத்தல் அளவை பற்றிய தோராயக் குறிப்புகள்:
1 முத் = 544 கிராம்
1 ஸா = 4 முத்கள் * 544 = 2176 கிராம்
1 வஸக் = 60 ஸாக்கள் * 2176 = 130560 கிராம் (அ) 130கி. 560 கிராம்.

போரில் கிடைக்கும் செல்வப் பங்கீடு:
போரில் கிடைக்கும் மொத்தச் செல்வமும் ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, நான்கு பாகங்கள் போர் வீரர்களுக்கு வழங்கப்படும். மீதி ஒரு பாகம் (குமுஸ்=1/5) ஆட்சியாளரைச் சேரும். அந்த ஐந்தில் ஒரு பாகமான குமுஸை நபி (ஸல்) ஐந்து பங்குகள் வைத்து, ஐந்தில் ஒரு பங்கை அனாதைகளுக்கும், மீதி நான்கில் ஒரு பங்கை ஏழைகளுக்கும், மீதி மூன்றில் ஒரு பங்கை வழிப்போக்கர்களுக்கும், மீதி இரண்டு பங்குகளில் ஒன்றைத் தம் உறவினர்களுக்கும் வழங்கியது போக எஞ்சிய ஒரு பங்கை மட்டுமே தமக்காக எடுத்துக்கொள்வார்கள்.

அத்தியாயம்: 22, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2896

‏حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ حَنْبَلٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِزُهَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَحْيَى وَهُوَ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَامَلَ أَهْلَ ‏ ‏خَيْبَرَ ‏ ‏بِشَطْرِ ‏ ‏مَا يَخْرُجُ مِنْهَا مِنْ ثَمَرٍ أَوْ زَرْعٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), கைபரில் உள்ள மரங்களையும் விளைநிலங்களையும் “அவற்றின் விளைச்சலான பழங்கள் மற்றும் தானியங்களில் பாதியை(இஸ்லாமிய அரசுக்கு)க் கொடுத்துவிட வேண்டும்” எனும் நிபந்தனையின் பேரில் கைபர்வாசிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)